Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி, திருச்சி கிழக்கு தொகுதியில் பல்வேறு இடங்களில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்த மலைக்கோட்டை பகுதியில் நடந்த கூட்டத்தில் திட்டமிடப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்காத விஜய் ரசிகர் மன்றத்தினர் சிலர், அதிமுக, அமமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைபவர்களையும், புதிதாகக் கட்சியில் சேருபவர்களையும் வீடு வீடாகச் சென்று மிரட்டி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 5 பேர், வேதாத்திரி நகர் பாலு என்பவரது வீட்டுக்குக் குடிபோதையில் சென்று, அங்குள்ளவர்களை மிரட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இதுதொடர்பாக கோட்டை போலீசில் வேதாத்திரி நகர் பாலு மற்றும் அவரது மனைவி பவானி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.