தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள் பொதுவேட்பாளர் சாத்தியமா?

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தமிழ்நாடு சட்டமன்றத்தில் திருச்சி கிழக்கு, பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கான இடங்கள் காலியாக உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்படாத சூழ்நிலையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ள தொகுதிகளுக்குச் சென்று மக்கள் நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்கின்ற பணியைத் தொடங்கிவிட்டார்.

சீமான்நம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தான் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடப்போவதாகவும், தன்னை அனைத்து அரசியல் கட்சிகளும் குறிப்பாக திமுக, அதிமுக கட்சிகள் பொதுவேட்பாளராக அறிவிக்கவேண்டும்” என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இதுவரை கூட்டணி அமைத்து தேர்தல்களில் போட்டியிடாத நாம் தமிழர் கட்சி முதல்முறையாக அரசியல் கட்சிகள் தன்னை ஆதரிக்கவேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், எஞ்சியுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நாம் தமிழர் போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

சீமானின் இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து திமுக தலைவர் முக ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது,

“இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. பின்னர் பார்க்கலாம்” என்று கூறியுள்ளது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. காரணம், சீமானை ஆதரிக்கமாட்டோம் என்று கூறியிருக்கவேண்டிய திமுக தலைவர் பின்னர் பார்க்கலாம் என்று கூறியுள்ளது சீமானை ஒருவேளை இடைத்தேர்தலில் திமுக ஆதரிக்கும் நிலை வரலாம் என்று கூறப்படுகின்றது.

மு.க.ஸ்டாலின்இது குறித்து திமுகவினர் சமூகவலை தளங்களில்,“கட்டுத்தொகை வாங்க வக்கில்லா சீமானை திமுக ஏன் ஆதரிக்கவேண்டும்? பெரியாரைக் கொச்சைப்படுத்தி….. பெரியாரே மண்ணுதான்” என்று இழிவாக பேசியவர். திராவிட ஒவ்வாமை உள்ள சீமான் இப்போது திமுகவும் அதிமுகவும் தன்னைப் பொதுவேட்பளராக அறிவிக்கவேண்டும் என்று குரல் கொடுத்திருப்பதன் மூலம் திமுக சீமானை திமுக பொதுவேட்பளராக அறிவிக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகின்றது.

அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது,

“விஜய் ஆட்சியில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளை தவெகவினரே செய்து வருகின்றனர். தமிழ்நாடு சீரழியத் தொடங்கிவிட்டது. விஜய் 35% வாக்கு வங்கி வைத்துள்ளார் என்றால் எதிர்க்கட்சிகளிடம் 65% வாக்கு வங்கி உள்ளது. வரும் இடைத்தேர்தலில் தவெகவைத் தோற்கடிப்பதன் மூலம் விஜய்க்கு நல்ல பாடத்தைக் கற்பிக்கவேண்டும். தமிழ்நாடு சீரழிவிலிருந்து மீள எதிர்க்கட்சிகளின் வெற்றி தேவையாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன்

கட்சி சாராதவர்கள் சமூக வலைதளங்களில்,“அண்மையில் நடந்து முடிந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தேர்தலின்போது சீமான் ஏன் பொதுவேட்பாளர் என்று சிந்தனையை ஏன் முன்வைக்கவில்லை? அப்போது போட்டியிட்டு கட்டுத்தொகையை இழந்த சீமான் இப்போது கட்டுத்தொகை பெற எதிர்க்கட்சிகளின் ஆதரவைக் கோருவதில் என்ன நியாயம் உள்ளது என்று கேட்கிறார்கள்.

மேலும் சிலர், “விஜய்-இன் தவெக கட்சி குதிரை பேரம் நடத்தி அதிமுக உறுப்பினர்களை தங்கள் கட்சியில் இணைத்துக்கொள்கிறார்கள். இதனால் பெரும்பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது அதிமுகவே. அதனால் நடைபெறவுள்ள பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலில் எதிர்கட்சிகள் அதிமுகவை ஆதரிக்கவேண்டும் என்றும் திருச்சி கிழக்கில் திமுகவை ஆதரிக்கவேண்டும் என்று கோரிக்கையும் முன்வைக்கப்படுகின்றது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இதற்கிடையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கரூரில் போட்டியிடவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக 1000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றுள்ளது. விஜய பாஸ்கர் மீண்டும் போட்டியிட்டால், தவெக சார்பில் போட்டியிட்ட மதியழகன் வாங்கிய வாக்குகள் அப்படியே விஜய பாஸ்கர் வாங்குவார் என்பதற்கு எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை என்று கூறியுள்ளார்.

நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தவெகவிற்குத் தோல்வியைத் தரவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நினைப்பதில் நியாயம் இருந்தாலும், சட்டமன்ற உறுப்பினர்களைப் பறிகொடுத்துள்ள அதிமுகதான் இதற்கு முனைப்பு காட்டவேண்டும் என்றும் அதனையொட்டியே திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை அறியமுடியும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் பொதுவேட்பாளர் என்ற சாத்தியக்கூறைப் புறம்தள்ள முடியாது என்றாலும் அதற்கான வாய்ப்பு குறைவு என்றே தோன்றுகின்றது. இடைத்தேர்தல்களுக்கான அறிவிப்பு வெளிவரட்டும். பொறுத்திருப்போம்.

—   ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.