திருச்சி மாநகராட்சியின் மட்டமான செயல்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

வியாபாரிகளை வஞ்சிக்கும் செயலுக்கு வன்மையான கண்டனம்!!

என்.எஸ்.பி.ரோடு, தெப்பக்குளம், நந்தி கோயில் தெரு பகுதிகளில் தீபாவளிக்காக ஓரமாக தரைக்கடை அமைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு அனுமதியை மறுத்துள்ளது மட்டமான மாநகராட்சி நிர்வாகம். தீபாவளிக்கு 5 நாட்களே உள்ள நிலையில் வியாபாரிகள் மீது இத்தனை பெரிய அடக்கு முறையை நிகழ்த்துவது வன்மையான கண்டனத்திற்குரியது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

சாலையின் இரு புறங்களிலும் பேரிகார்டுகளை அமைத்து தரைக்கடைகளை தடுப்பதற்கு பதிலாக அந்த பேரிகார்டுகளை எடுத்து கடைகளை அமைக்க வழிவகை செய்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கேட்டால் வெண்டிங் சோன் இல்லை என்கிறது மாநகராட்சி. தீபாவளிக்கு 5 நாட்கள் உள்ள நிலையில் சாலையின் ஓரமாக ரெக்சின் விரித்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் அதன் மூலம் சம்பாதித்து மாட மாளிகைகளும், கோட கோபுரங்களும் கட்டப் போவதில்லை மாறாக கடனை அடைக்கவும், பசியின்றி வாழ்வோமே முயற்சிக்கிறார்கள். மக்களுக்காக அமைக்கப்பட்டது தான் சட்டங்களைத் தவிர, சட்டங்களுக்காக மக்களை நிர்பந்தம் செய்வது அடக்குமுறை. இதில் மாநகராட்சிக்கு என்ன பெரிய நெருக்கடி, இதன் மூலம் எந்த பொது மக்களுக்கும் நடக்க சாலை இல்லாமல் சிரமப்பட போவதுமில்லை. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படப் போவதுமில்லை.

மாநகராட்சியால் தரைக் கடை அமைக்க ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு கூட போதிய அடிப்படை வசதிகளை இன்று வரை செய்து தரவில்லை. வெண்டிங் கமிட்டி கூட்டத்தையும் கூட்டம் மறுக்கிறது Tiruchirappalli City Municipal Corporation.

Chief Minister of Tamil Nadu அவர்கள் பல்லாயிரக்கணக்கான வியாபாரிகளின் நலன் கருதி தரைக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பல எண்ணற்ற இளைஞர்கள் தரைக்கடை வியாபாரிகளாக மாறி இருக்கிறார்கள். காரணம் வேலையின்மையின் கோரப்பிடி, இப்படியான வியாபாரிகளும் தீபாவளி கொண்ட வழிவகை செய்யுங்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.