திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கடந்த நவம்பர் 1ஆம் தேதி துரைமுருகன் பெயர்த்திக்குத் திருமணம் நடைபெற்று இருக்கிறது. துரைமுருகன் தி.மு.க.வின் பொதுச்செயலாளர். பெயர்த்தியோ துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தின் மகள். கதிர்ஆனந்த் தி.மு.க. எம்.பி.

தி.மு.க.வின் பொதுச்செயலாளர் வீட்டுத் திருமணம் சுயமரியாதைத் திருமணமாக நடைபெற்று இருக்க வேண்டும். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்ததாக செய்திகள் வந்தன.இது ஏதோ ஒப்புக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், புரோகிதர்கள் மந்திரம் ஓதி இருக்கிறார்கள். சடங்குகள் வேறு நடைபெற்று இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தாலியும் அப்போது கட்டப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் தாலி எடுத்துக் கொடுத்து, மணமகன் அணிவித்ததாகத் தெரியவில்லை. இப்படிப்பட்ட இவர், தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பொறுப்பில் தொடரலாமா?

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தந்தையும் மகனும் திருமண வீட்டுக்காரர்கள். தி.மு.க.காரர்கள். பெரும் பொறுப்பில் இருப்பவர்கள். இந்த இலட்சணத்தில் துரைமுருகன் தி.மு.க.வின் பொதுச் செயலாளர். அப்பொறுப்பு அறிஞர் அண்ணா, நாவலர், பேராசிரியர் ஆகியோர் வகித்த பொறுப்பு. அங்கே மனிதக் குரங்கை குந்த வைத்தது போல ஆகிவிட்டது. தி.மு.க.வின் தலைவர்களில் ஒருவராக இருந்து கொண்டு, துரைமுருகன் கட்சி மற்றும் இயக்க நடிவடிக்கைகளுக்கு மாறாக அவர் வீட்டுத் திருமணத்தை நடத்தி இருக்கிறார். முன்மாதிரியாக இருக்க வேண்டியவர் எதிராக நடந்து கொண்டிருக்கிறார்.

1940களில் சர் ஏ.இராமசாமி முதலியார் தம் வீட்டுத் திருமணம் ஒன்றை இப்படி நடத்தியதற்கு அறிஞர் அண்ணா திராவிட நாடு ஏட்டில் கண்டனம் தெரிவித்து எழுதினார். முன்மாதிரியாக இருக்க வேண்டியவர் இப்படி நடக்கலாமா? என்று கேட்டார். அதைத்தான் நானும் துரைமுருகனைக் கேட்கிறேன். எனவே அவர் தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலக வேண்டும். ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தி, கட்சியையும் இயக்கத்தையும் அவர் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

– க.திருநாவுக்கரசு,  திராவிட இயக்க ஆய்வாளர் எழுத்தாளர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.