ஓட்டு போட்டோம்… இப்போ எங்களை கேட்க ஆள் இல்லையே!
திருச்சி கிழக்கு தொகுதியில் எம்எல்ஏ இல்லாததால் பொதுமக்களின் குறைகளை எடுத்துச் சொல்ல மக்கள் பிரதிநிதி இல்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சாலை வசதி, சாக்கடை பராமரிப்பு, மழைக்காலத்தில் தேங்கும் கழிவுநீர், போக்குவரத்து நெரிசல், இரவு நேர பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, லஞ்சப் புகார்கள் குறித்தும் மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். தொகுதிக்கு விரைவில் தேர்தல் நடத்தி மக்கள் குறைகளைத் தீர்க்கக்கூடிய புதிய எம்எல்ஏவை நியமிக்க வேண்டும் என்றும், தமிழக அரசு திருச்சி கிழக்கு தொகுதியின் அடிப்படைப் பிரச்சினைகளில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.