வாசகர்களை அன்போடு அழைக்கிறது, அங்குசம் வெளியீடு !
திருச்சி புத்தகத் திருவிழா – 2026 இல், அங்குசம் வெளியீடு முதல்முறையாக பங்கேற்றிருக்கிறது. அரங்கு எண் : 66 இல் அங்குசம் வெளியீடுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
இதுவரை, கடந்த நான்கு ஆண்டுகளில் வெளியான அங்குசம் செய்தியின் அனைத்து இதழ்களும் அரங்கில் கிடைக்கிறது. திருச்சி சாரதாஸ் ஸ்தாபகர் மணவாளன் குறித்த சிறப்பு பதிவு; தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழி பெறப்பட்ட தகவல்களிலிருந்து தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறையின் அவலமான செயல்பாடுகளை அம்லப்படுத்திய கவர் ஸ்டோரி கட்டுரை; நியோமேக்ஸ் மோசடிகளின் பல்வேறு பரிமாணங்களை வெளிக்கொணர்ந்த கட்டுரைகள்; கனிமவளக் கொள்ளையை வெளிக்கொணர்ந்த எக்ஸ்கிளூசிவ் கட்டுரைகள் உள்ளிட்டு பல்வேறு சமூக சிக்கல்கள் குறித்து பேசும் கவர் ஸ்டோரி கட்டுரைகள் அடங்கிய இதழ்கள் அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

பள்ளி மாணவர்களுக்கு அங்குசம் இதழ் ஒன்றை இலவசமாக அரங்கில் வழங்கி வருகிறார்கள். அரங்கிற்கு பார்வையாளர்களாக வந்து செல்லும் அனைவருக்கும், நடப்பு வாரத்தின் அங்குசம் செய்தி இதழ் ஒன்றும் அன்பு பரிசாக அங்குசம் குழுமம் வழங்கி வருகிறது.

அங்குசம் சார்பில் இதுவரை வெளியான வெளியீடுகள்,
யாவரும் கேளீர் – இலக்கிய மலர்
(பல்வேறு ஆளுமைகளின் நேர்காணல்களின் தொகுப்பு)இசைமுரசு நாகூர் ஹனீபாவின் இசைப்பணிகள்;
போதிமரத்தின் ஞான நிழல்கள் – (முனைவர் ஜா.சலேத்)
மகாத்மாவின் பொன்மொழிகள்
உள்ளிட்டு, திருச்சி மாவட்டம் சார்ந்து அங்குசம் இதழோடு இணைந்து களப்பணியாற்றும் ஆளுமைகளின் நூல்களும் காட்சிக்கு அரங்கில் கிடைக்கிறது.
சு.முருகானந்தம், தி.மா.சரவணன், ஐம்பொழில் மீரான்மற்றும் கவிஞர் நந்தலாலா ஆகியோர் தொகுத்து எழுதிய,
“நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி”;
ஆ.ராசா மற்றும் தொல்.திருமாவளவன் ஆகியோர் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக வெளியாகியுள்ள
“பாவலரேறு இன்றைக்கும் தேவைப்படுகிறார், தமிழ்தேசியத்தின் முழுமை பாவலரேறு”
பெரியார் விருதாளர் திருச்சி தி.அன்பழகன் எழுதிய,
“சமூக மாற்றத்தில் தந்தை பெரியார்” | “சனாதனக் கருத்தியல்கள் மீது சவுக்கடி”;
பா.ஏகரசி தினேஷ் எழுதிய
”அகம்” நாவல்;
முனைவர் சலேத் எழுதியுள்ள,
”வாசிப்பு பழக்கம்” | “ஆதன்”, ”செயலே சிறந்த சொல்” | ”சுவையுணர் திறங்கொள்” | ”இலக்கே உனது இலக்கு” உள்ளிட்ட நூல்கள்;
முனைவர் புதியவன் எழுதிய
”நான் எனும் இளந்தலைமுறை”;
கவியருவி பி.கலைமணியின்
“சிந்தனை மின்னல்கள்”;
மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக்கட்சியின் ஆணைமுத்து எழுதிய,
“மக்கள் நாயக உரிமைப்போர் – வகுப்புரிமை வரலாறு” | “பெரியாரும் நூற்றாண்டு காணும் வைக்கம் கிளர்ச்சியும்” |
“தன்னுரிமை தமிழ்த்தேசம்” ;
வாலசா வல்லவன் எழுதிய, “கோவில் நுழைவுப் போராட்டங்களில் திராவிட இயக்கங்களின் பங்களிப்பு” |
“திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்” | “இந்து அறநிலையத்துறை சட்டம் இயற்றப்பட்டது ஏன்?” ;
முதுமுனைவர் இளங்குமரனாரின்,
“பன்மணிக்குவியல்” | ”தொல்காப்பிய உரியியல் ஆய்வு” உள்ளிட்ட தமிழ் மொழி ஆய்வு நூல்கள் ;
முனைவர் இரா.மாது எழுதிய ”உள்ளம்கவர் கம்பன்”;
முனைவர் இல.தியாகராஜன் எழுதிய
”சோழர் வரலாற்றில் கண்டராதித்த சோழரும் செம்பியன் மாதேவியும்”
வழக்கறிஞர் தமிழகன் எழுதிய ”மலையகமும் மறுவாழ்வும்” | ”கருப்பு நதி” ;
இளம் கவிஞர்கள் சரண்பாபு எழுதிய
“வெண்மதி சாரல்கள்”,
ஜெ.அரசிமார்லின் எழுதிய,
“திருத்தப்படாத கவிதைகள்”,
வாழையூர் குணா சிறுகதைகள்,
மருத்துவர் செம்மலர், மருத்துவர் மஞ்சுளா, மருத்துவர் மைக்கேல் சேவியர் ஆகியோர் தொகுத்து எழுதிய
”நோயும் மனமும்” ,
கீழைக்காற்று வெளியீட்டகத்தின்,
மாசேதுங் மேற்கோள்கள் | சோவியத் இளம் வீரர்கள் | சீனப்புரட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் ;
கே.பாலகிருஷ்ணன் எழுதிய,
”உலகை உலுக்கிய உழவர்களின் டெல்லி போராட்டம்”
வழக்கறிஞர் வி.எம்.செல்வராஜ் எழுதியுள்ள
”மக்களாட்சி”
ஜென்னி மார்க்ஸ் எழுதிய
”எங்கள் குடும்ப வாழ்க்கை”
மற்றும் அங்குசம் இதழின் பொறுப்பாசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் எழுதி வெளியான,
“நாகப்பட்டினம் ஊர்ப்பெயர் – ஆய்வுகள்” | பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்| தமிழியல் கட்டுரைகள்|
இலக்கிய கட்டுரைகள்| கணினித்தமிழ்
உள்ளிட்ட நூல்கள் அனைத்தும் அரங்கை அலங்கரித்திருக்கின்றன.
அங்குசம் வார இதழுக்கு ஓராண்டு அஞ்சல் சந்தா செலுத்த விரும்புவர்கள், நேரடியாக அரங்கு எண்: 66 இல் அங்குசம் வெளியீடு அரங்கில் சந்தா செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
வாசகர்களின் வரவை பேராவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறது, அங்குசம் வெளியீடு அரங்கு !
– அங்குசம் செய்தியாளர் குழு.










Comments are closed, but trackbacks and pingbacks are open.