அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஓரணியில் திரண்டு மக்கள் விரோத திமுக ஆட்சியை முறியடிப்போம் – டிடிவி தினகரன்

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மதுரை கேகே நகரில் உள்ள ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார் …. NDA கூட்டணியில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9% ஓர் அணியில் திரண்டு உள்ளோம். தீய சக்தி திமுக மக்கள் விரோத ஆட்சியை முறியடிக்க ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டு உள்ளார்கள்.

யாரோ ஒரு சில பேர் ஒதுங்கி இருப்பவர்கள் விலகி இருப்பவர்கள் பேசுவதை எல்லாம் கண்டுகொள்ளக்கூடாது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் இணைவார்கள் எங்கள் கூட்டணியில் உள்ள நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

எங்கள் தொண்டர்கள் எப்படியும் ஒன்றிணைய மாட்டார்கள் என்று பலரும் எதிர்பார்த்தார்கள் பேசினார்கள் அமமுக மற்றும் அதிமுக  கீழ் மட்டம் முதல் மேல்மட்டம் வரை உள்ள தொண்டர்கள் ஜெயலலிதாவின் ஆட்சி அமைக்க வேண்டும் என முழு மனதோடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இல்லை என பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

35 லிருந்து 40 தொகுதிகள் வரை திமுகவிட காங்கிரஸ் கேட்கிறார்கள் தனி ஆட்சி வேண்டும் என்று கேட்கிறார்கள். அது உண்மை. காங்கிரஸ் திமுக கூட்டணியில் தொடருமா என்பது தெரியவில்லை தேசிய முஸ்லிம் லீக் காதர் மைதீன் ஏற்கனவே மூன்று தொகுதியில் போட்டியிடும் தற்போது இரண்டு தொகுதி தருவேன் என்று திமுக சொல்கிறார்கள் பேசியுள்ளார்.  இதுபோன்ற நிலைமை எங்கள் கூட்டணியில் இல்லை அமமுக , அதிமுக கட்சியில் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் நாங்கள் கருத்து வேறுபாடுகளை கடந்து ஓர் அணியில் சேர்ந்துள்ளோம்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

எங்கள் கட்சிக்கான தொகுதி பங்கீடு உடன்பாட்டை பாஜக மற்றும் அதிமுகவோடு பேசி நல்ல முறையில் நிறைவு செய்வோம். இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை எந்த ஒரு பிரச்சனைக்கும் இடம் கொடுக்காமல் ஜெயலலிதாவின் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு . எந்த ஒரு சின்ன மன வருத்தமும் யாருக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவு Ammk கட்சிக்கு தகுதியான வேட்பாளர்களை கௌரவமான முறையில் பெறுவதற்கு பாஜக கட்சி மூலம் செய்வோம்.

பாஜக வலியுறுத்தல்படி அமமுக செயல்பட்டு அதிமுக கூட்டணியில் நாங்கள் இடம் பெற்று வெற்றிகரமாக அமமுக வேட்பாளர்களாக போட்டியிடும் நபர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்வார்கள்.

—   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.