அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

எம் ஐ டி பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாட்டம் ! அமைச்சா் பங்கேற்பு!

திருச்சியில் அடகு நகையை விற்க

தலைமை: எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்களின் தலைவர் Er. A. முகமது யூனுஸ் அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார்.சிறப்புரை: கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் டாக்டர் M.Y. அப்துல் ஜலீல் அவர்கள் சிறப்புரை வழங்கினார்.

வாழ்த்துரை: கல்லூரியின் முதல்வர் முனைவர் A. நவீன் சேட் அவர்கள் வாழ்த்துரை வழங்குகையில், மாணவிகள் தற்காப்புடன், மனவலிமையுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

சிறப்பு விருந்தினர் உரை:

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முனைவர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டு மாணவிகளுக்குச் சான்றிதழ்களையும், நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்.

முதல்வர் பிறந்தநாள்

விழாவின் தொடக்கமாக மேலாண்மையியல் துறை பேராசிரியர் முனைவர் S. உமாமகேஸ்வரி வரவேற்புரை வழங்கினார். கணினி அறிவியல் துறை பேராசிரியைகள் B.T. கிருத்திகா மற்றும் D. ஜெயலட்சுமி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். நிறைவாக, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர் முனைவர் V. சிவகாமி நன்றியுரை வழங்கினார்.

இவ்விழாவில் கல்லூரிப் பேராசிரியைகள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். விழாவின் இறுதியில் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன..

மகளிா் தின கொண்டாட்டம்அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  உரை

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தில் இருந்ததால், அவர் வகிக்கும் விளையாட்டுத் துறை (Sports) சார்பாகவும் மற்றும் கல்வித்துறை (Education) சார்பாகவும் நான் உரையாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பெண் கல்வி மற்றும் பொருளாதார சுதந்திரம்: சமூக நலத்துறை அமைச்சர் பேசுகையில், பெண்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரம் அடைய வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டார்: விடியல் பயணம் (இலவச பேருந்து பயணம்).

  • மகளிர் உரிமைத் தொகை
  • புதுமைப் பெண் திட்டம்
  • தோழி விடுதிகள்

திட்டமிடலின் முக்கியத்துவம்: ஒரு திட்டத்தை செயல்படுத்துவது எளிது, ஆனால் அதை சிந்தித்து வடிவமைப்பது கடினம். 50 ஆண்டு கால பொதுவாழ்வில் அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே சமுதாயத்திற்கு எது தேவை, எது எதிர்காலத்திற்கு உதவும் என்பதை உணர்ந்து திட்டங்களை தீட்ட முடியும்.

பெண்கள் நாட்டின் நடப்புகளைத் தெரிந்துகொண்டு, கடமைகளைத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்.

கல்வி வளர்ச்சியில் தமிழகம் 76% வளர்ச்சியை எட்டியுள்ளது.

பெண்கள் சாவித்திரி பூலே போலத் தடம் பதித்து, நன்றாகப் படித்து வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும்.

தமிழக முதல்வர் கொண்டு வரும் திட்டங்களைப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.

மகளிா் தின கொண்டாட்டம்திட்டங்களின் நோக்கம்

அரசு செயல்படுத்தும் திட்டங்கள் என்பது குறிப்பிட்ட கட்சியின் சொந்தப் பணம் கிடையாது.

இது மக்களின் வரிப்பணத்திலிருந்து உருவாக்கப்படும் திட்டங்கள்; எனவே இவை மக்களுக்குப் பயனுள்ளதா அல்லது வீண் விரயமா என்பதை ஆராயும் பொறுப்பு பெண்களுக்கு அதிகம் உள்ளது.

பெண்கல்வி மற்றும் சமூக மாற்றம்

கடந்த காலங்களில் பெண்கள் கல்வி கற்பதற்குப் பல்வேறு சமூகத் தடைகள் இருந்தன.

உங்கள் பாட்டி அல்லது முந்தைய தலைமுறையினரிடம் கேட்டால், அவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் போனதற்குக் குடும்பக் கட்டுப்பாடுகளும், வெளியுலகம் குறித்த அச்சமுமே காரணமாக இருந்திருக்கும்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இன்றைய தலைமுறை பெண்கள் கல்வி கற்கவும், பொது மேடைகளுக்கு வரவும் கிட்டத்தட்ட 200 ஆண்டுகாலப் போராட்டம் தேவைப்பட்டிருக்கிறது.

பொருளாதார வளர்ச்சி

இந்தியாவிலேயே தனிநபர் வருமானத்தில் (Per capita income) தமிழ்நாடு இன்று முதன்மையான இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு நபரின் சராசரி வருமானம் ஆண்டுக்கு ₹3,60,000 என்ற அளவில் உயர்ந்துள்ளது.

அரசு திட்டங்களின் தாக்கம்

விடியல் பயணம் (இலவசப் பேருந்துப் பயணம்): இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் மாதம் சராசரியாக ₹888 வரை மிச்சப்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மகளிர் உரிமைத் தொகை: பெண்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்படுவது, அவர்களின் குடும்ப பட்ஜெட்டில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 1.பணப்புழக்கத்தின் முக்கியத்துவம்

ஒரு கிராமத்தில் 5  ரூபாய் பணப்புழக்கம் இருந்தால், அது அங்குள்ள டீக்கடை, டிபன் கடை மற்றும் மளிகைக் கடைகளில் பிரதிபலிக்கும்.

மக்கள் பொருட்களை வாங்கும் போது அந்தப் பணம் சுழற்சி முறையில் மீண்டும் அரசாங்கத்திற்கே வந்தடையும்.

ஒரு திட்டத்தைத் தீட்டும் போது, மக்களும் அரசாங்கமும் பயன்பெறும் வகையில் அது ஒரு ‘Win-Win’ சூழலாக இருக்க வேண்டும்.

2. பெண் கல்வி மற்றும் புதுமைப் பெண் திட்டம்

பெண் பிள்ளைகள் அதிக அளவில் படித்து, வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

இதன் விளைவாக, பள்ளிக் கல்வியை முடித்துக் கல்லூரிக்குச் செல்லும் பெண்களின் விகிதம் (Gross Enrollment Ratio) தமிழ்நாட்டில் 76% ஆக உயர்ந்துள்ளது; இது இந்தியாவிலேயே மிக அதிகம்.

3. தந்தை பெரியாரின் தொலைநோக்கு பார்வை

பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்றும், அவர்கள் விண்வெளி வரை செல்ல வேண்டும் என்றும் பெரியார் அன்றே வலியுறுத்தினார்.

அந்தச் சிந்தனையின் தொடர்ச்சியாகவே இன்றைய திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

4. குடும்பப் பொறுப்பும் சமத்துவமும்

மக்கள் தொகையில் ஆண்களும் பெண்களும் தலா 50% சமமாக உள்ளனர்.

குடும்பத்திலும் சமூகத்திலும் பெண்களின் பொறுப்பு முதன்மையானது.

கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து, பொருளாதார ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் பரஸ்பரம் முன்னேற வேண்டும்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.