இவரைப்போல … நல்ல மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் !
நேரம் இரவு 10 மணி. நான் கொச்சி போறதுக்காக கொல்லம் பஸ் ஸ்டாண்ட்ல தனியா உட்கார்ந்து இருந்தேன். தூரத்தில் இருந்து ஒரு அண்ணா வந்து என்கிட்ட தனியா உக்காந்து இருக்கியாப்பா அப்படின்னு கேட்டார். முகம் தெரியாத நபர் அப்படிங்கறதுல, நான் எந்த பதிலும் சொல்லாம அமைதியா அங்கேயே உட்கார்ந்து இருந்தேன்.
கொஞ்ச நேரம் அந்த அண்ணா என் பார்வையில் படுவது மாதிரியே உட்கார்ந்து இருந்தாரு. நானும் யாருக்காகவோ, வெயிட் பண்ணிட்டு இருக்காரு அப்படின்னு நினைச்சிட்டு இருந்தேன்.
தூரத்திலிருந்து ரெண்டு பேர் என் பக்கத்துக்கு வரத பார்த்ததும், இவர் எந்திரிச்சு வந்து என் பக்கத்துல உக்காந்துக்கிட்டாரு. வந்த இரண்டு பேரும் என் பக்கத்துல ஒருத்தர் உக்காந்து இருக்குறதைப் பாத்ததும் நேரா போய்ட்டாங்க. அப்பதான் எனக்கு புரிஞ்சுது இவர் என் பாதுகாப்புக்காகத்தான் உட்கார்ந்து இருக்காரு அப்படின்னு.
இப்ப அவரு மேல எனக்கு இருந்த தப்பான அபிப்பிராயம் மாறினதும் , அவர்கிட்ட பேச்சுக் குடுக்க ஆரம்பிச்சேன். அப்பொழுது தான் அவர் சொன்னாரு, ”என் குழந்தையோட வயசு தான் உனக்கு இருக்கும். உன்னை தனியா விட்டுட்டு போறதுக்கு எனக்கு மனசு வரல அதனாலதான் இங்கேயே உட்கார்ந்திருக்கிறேன்” அப்படின்னாரு .
கொஞ்ச நேரத்திலேயே, எனக்கான பஸ் வந்தது. நான் பஸ்ல ஏறினதும் மெல்ல அவரு அங்கிருந்து எந்திரிச்சு போவதையும் நான் பார்த்தேன்.
“நல்ல மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள்” என்று சொல்வார்கள் அல்லவா … அதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் அந்த அண்ணா. அவர் மிகவும் உண்மையானவராக எனக்கு தோன்றினார்.
— ரெனா பாத்திமா








Comments are closed, but trackbacks and pingbacks are open.