அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சைபர் குற்றவாளிகள் கையாளும் 36 வகை தந்திரங்கள் !

திருச்சியில் அடகு நகையை விற்க

வங்கிகள் வாடிக்கையாளர்களை, ஒரு போதும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வங்கி விபரங்களை கேட்பதில்லை. மேற்படி அழைப்பை தவிர்ப்பது சிறந்தது. ஆகவே, மேற்கண்ட விபரங்களை கேட்டு போன் செய்தால், எச்சரிக்கையாக இருக்கவும்.

  • வங்கியில் இருந்து பேசுவதாக சொல்லி A/c நெம்பர், ATM DEBIT CARD நெம்பர், PIN நெம்பர், CVV நெம்பர், OTP நெம்பர், நெட் பேங்கிங் PASS WORD CREDIT CARD நெம்பர் கேட்டால் தெரிவிக்க வேண்டாம்.
  • சுகாதாரதுறையில் இருந்து பேசுவதாகவும், தடுப்பு ஊசி போடப்பட்டவர்களுக்கு அரசு உதவி வழங்க விபரங்களை UPDATE செய்ய வேண்டும் என கேட்பது போல் விபரங்களை கேட்டு, உங்களது உங்கள் வங்கி கணக்கை குறி வைத்து Bank A/c No, Aadhar Card No, PAN Card No, etc பெற்றுக்கொண்டு உங்கள் செல்லுக்கு வந்த OTP விபரம் கேட்டு பணத்தை பறிக்க முயற்சி செய்யக்கூடும்.
  • உங்கள் அக்கவுண்டில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டதாகவோ, லோன் தொகை பிடிக்கப்பட்டதாகவோ SMS அனுப்பி, செய்யவில்லை எனில், அந்த SMS வுடன் உள்ள LINK ஐ CLICK செய்ய வலியுறுத்துவார்கள். CLICK செய்யாமல் அதை தவிர்க்கவும்.
  • KYC/PAN/AADHAR NO விபரங்கள் குறித்து கேட்டாலோ, SMS/ LINK அனுப்பினாலோ UPDATE செய்ய வேண்டாம். வங்கிக்கு நேரில் சென்று தேவைப்பட்டால் ஆவணங்களை கொடுக்கவும்.
  • வலைதளத்தில் தேடப்படும் வங்கி கஸ்டமர் கேர் எண்கள் போலியாக இருக்க வாய்ப்பு உள்ளது. CUSTOMER CARE CALLS செய்பவர், உங்களுக்கு உதவுவது போல் LINK அனுப்பியோ / SCREEN SHARE செய்ய விலியுறுத்தியோ OTP விபரங்கள் பெற்றும் உங்கள் A/C ஐ HACK செய்யபடலாம்.
  • உங்களது தனிப்பட்ட புகைபடங்களை ஒருபோதும் யாரிடமும் பகிர வேண்டாம். அதை MORPHING செய்து பணம் பறிக்கவும் / வேறு வகையில் உங்களை மிரட்டவும் நேரிடலாம்.
  • Face bookல் உங்களுக்கு தெரிந்தவர் பெயரில் போலி கணக்கு துவங்கி உங்களிடம் பண உதவி கேட்க வாய்ப்புண்டு. எனவே பணம் அனுப்பும் முன் அவரிடம் நேரிலோ, தொலைபேசியிலோ உறுதி செய்யவும்.
  • SOCIAL MEDIA-வில் உங்களது அன்றாட இருப்பிடம் மற்றும் நடவடிக்கைகள் பற்றிய LIVE UPDATE பதிவுகள் குற்றவாளிகளால் கவனிக்கப்படுகிறது என்பதை உணருங்கள்.
  • பொது இடங்களில் வைக்கப்பட்ட USB சார்ஜர்களில் சார்ஜ் போடுவதை – WI- FI பயன்படுத்துவதை தவிர்க்கவும். உங்களது தகவல்கள் (JUICE JACKING) முறையில் திருட்டு போக வாய்ப்புள்ளது.
  • குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக SOCIAL MEDIA தகவலின் அடிப்படையில் பொருள் வாங்கும் போது மிக கவனமாக செயல்படவும். (Fake website ஆக இருக்கலாம்)
    உங்கள் தொலைபேசி எண்ணுக்கு விலைமதிப்புமிக்க பரிசு விழுந்துள்ளது என வரும் தகவலை நம்பி அதை பெற அவர்களால், சொல்லப்படும் எந்த கட்டணத்தையும் செலுத்தாதீர்கள்.
  • DEPOSIT இருந்தால் லோன் வழங்கப்படும் என வரும் விளம்பரத்தை நம்பாதீர்கள்.
    அறிமுகம் இல்லாதவர்களிடம் WhatsApp CALL-ல் பேச வேண்டாம்.
  • PASSWORD விபரங்களை எவ்வளவு நம்பிக்கைக்கு உரியவராக இருந்தாலும் ஒருபோதும் கொடுக்க வேண்டாம். அடிக்கடி Password ஐ Change பண்ணவும்.
  • SOCIAL MEDIA வில் தனிப்பட்ட தகவல்கள் (முகவரி, தொலைபேசி எண். படித்த பள்ளி பெயர், நிரந்திர மற்றும் தற்காலிக இருப்பிடம்) போன்றவற்றை வெளிப்படையாக தெரியாமல் PROFILE LOCK செய்யவும்.
  • பெற்றோர் மேற்பார்வை இல்லாமல், அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஆன்லைனில் பழகிய யாருடனும் நேரில் சந்திக்க ஒப்புக்கொள்ள கூடாது.
  • அச்சுறுத்தலான E-mail, Message, Post போன்ற தகவல்களுக்கு பதில் அளிக்க வேண்டாம். பயமுறுத்தும் அல்லது புண்படுத்தும் வகையிலான ONLINE / SOCIAL MEDIA உரையாடல்களை பெற்றோர் அல்லது நம்பகமான பெரியவர்களிடம் உடனே தெரிவிக்க வேண்டும். உதவிக்கு அருகில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.
  • SHARE MARKET ல் நஷ்டம் இல்லாமல் செய்துதரப்படும் என தொலைபேசியில் / SMS ல்/ LINK மூலம் அனுகினால் எச்சரிக்கையாக இருக்கவும். உங்கள் பணம் குறிவைக்கப்படுகிறது. ஜாக்கிரதை.
    ஒருவேளை, தவறான பரிவர்த்தனை நடைபெற்றதை அறிந்தவுடன் உடனடியாக NATIONAL HELPLINE TOLL FREE NO /1930 எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் சைபர் குற்றவாளிகள் கைகளுக்கு செல்லாமல், பணம் பரிவர்த்தனை தடுத்து நிறுத்த இயலும்.
  • பெரும் சேமிப்பு உள்ள வங்கி கணக்கிற்கு CELL NO/ DEBIT/ CREDIT CARD/ NET இணைக்காமல் இருப்பது சிறந்தது. BANKING தினசரி பண பரிமாற்றத்துக்கு தனி வங்கி கணக்கு குறைந்த இருப்பில் வைத்து பத்திரமாக கையாள வேண்டும். தவறு நடைபெற்றாலும், பெரும் நஷ்டம் ஏற்டாமல் தவிர்க்க உதவும்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

P.M. சுந்தரமூர்த்தி M.A.,M.L.,

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சிறப்பு அரசு பொது வழக்கறிஞர்,

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம்

திருப்பத்தூர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.