லயன்ஸ் சங்கங்கள் இணைந்து நடத்திய மகளிர் தின விழா
திருச்சிராப்பள்ளியில் பல லயன்ஸ் சங்கங்கள் இணைந்து நடத்திய மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. ராயல், ராக்சிட்டி ஷைன், திருவரம்பூர், கிளாசிக் மற்றும் கோல்டன் பஜார் லயன்ஸ் சங்கங்கள் இணைந்து விழாவை நடத்தின.
மாவட்ட தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அரிமா பா. முகமது ஷபி வரவேற்புரை நிகழ்த்தினார். ராயல் லயன்ஸ் சங்கத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பல சங்கங்களின் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக முதல் துணை ஆளுநர் விஜயலட்சுமி சண்முகவேல், துணை காவல்துறை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ், பேராசிரியர் முருகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பல துறைகளில் சிறந்து விளங்கிய 75 பெண்களுக்கு விருதுகள் வழங்கினர்.
விழாவில் பல லயன்ஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் தனபாக்கியம் ராஜசேகர் நன்றியுரை வழங்கினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.