அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பணியாளர்களை விமானத்தில் அழைத்துச்சென்று குஷிப்படுத்திய முதலாளி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

பணியாளர்களை விமானத்தில் அழைத்துச்சென்று குஷிப்படுத்திய முதலாளி ! தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை மகிழ்வித்து கௌரவப்படுத்தும் விதமாக, உழைப்பாளிகள் தினமான மே-1 அன்று மதுரையிலிருந்து, சென்னைக்கு விமானத்தில் சுற்றுலா அழைத்துச் சென்று ஆச்சர்யப்படுத்தியுள்ளார் மதுரையை மையமாகக்கொண்டு இயங்கிவரும் சத்யம் பயோ இயற்கை உரம் தயாரிக்கும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், வி. செந்தில்குமார்.

தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பணியினைப் போற்றும்விதமாக உழைப்பாளர் தினத்தன்று அவர்களுக்கு சர்ப்பிரைஸ் அளிக்க முடிவு செய்தார். தன்னுடன், பணியாளர்கள் 15 பேரினை மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச்சென்று, பொழுதுபோக்குமிடங்களை சுற்றிக்காண்பித்துவிட்டு மீண்டும் விமானத்திலேயே திரும்பி அழைத்து வந்துள்ளார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இது சம்பந்தமாக சத்யம் பயோ நிர்வாக இயக்குநர் வி. செந்தில்குமார், ”எங்கள் நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் உழைப்பினை பல வழிகளில் நாங்கள் ஊக்கப்படுத்திவருகிறோம். அதில் ஒன்றாக, இதுபோன்றதொரு நிகழ்வுகளை வருடந்தோறும் செய்துவருகிறோம். இதனால் அவர்களது மனமும், உடலும் புத்துணர்ச்சி அடைவதோடு, உழைப்பின் பலனை உணர்வதற்கு வாய்ப்பினை உருவாக்கித்தருகிறோம்” என்கிறார்.

– ஷாகுல் 

படங்கள் – ஆனந்த்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.