முதன்முதலாக கிராமத்துக் கதையில் விஜய் தேவரகொண்டா!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

முதன்முதலாக கிராமத்துக் கதையில் விஜய் தேவரகொண்டா!

‘ராஜா வாரு ராணி காரு’ படத்தை இயக்கிய இயக்குநர் ரவி கிரண் கோலா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜுவுடன் மீண்டும் விஜய் தேவரகொண்டா இணைகிறார். எஸ் வி சி புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் 59ஆவது திரைப்படம் இது.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளான மே.09-ஆம் தேதி இந்தப் படம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக போஸ்டரில் விஜய் தேவரகொண்டா கத்தியை கையில் வைத்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதால் அதிரடியாக படம் உருவாகிறது எனலாம்.
விஜய் தேவரகொண்டா முழுக்க முழுக்க கிராமிய பின்னணியிலான கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இப்படத்தின் திரைக்கதைக்காக அயராது உழைத்து வருகின்றனர் இயக்குனர் ரவி கிரண் கோலாவும் தயாரிப்பாளர் தில் ராஜுவும். மேலும் இதனை பான் இந்திய அளவில் உருவாக்குகிறார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

“விஜய் தேவரகொண்டாவின் திரையுலக பயணத்தில் இந்த திரைப்படம் மிக முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும்” என்கிறார் டைரக்டர் ரவி கிரண் கோலா.

இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.