அரசுக்கு எதிராக ஆசிரியர்களை போராட தூண்டுகிறார் பள்ளிக்கல்வித்துறை செயலர் ! ஐபெட்டோ அண்ணாமலை விமர்சனம் !

0

அரசுக்கு எதிராக ஆசிரியர்களை போராட தூண்டுகிறார் பள்ளிக்கல்வித்துறை செயலர் ! ஐபெட்டோ அண்ணாமலை விமர்சனம் ! ஆசிரியர்களின் பதவிஉயர்வு வழங்குவது தொடர்பான கொள்கை முடிவு எடுப்பது குறித்தான நீதிமன்ற வழக்கில், ஆசிரியர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த கொள்கை முடிவினை திரும்பப் பெற்றுக்கொள்வதாக முடிவெடுத்திருப்பதற்கு விமர்சனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார், ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர், அண்ணாமலை.

ஆசிரியர்கள் சங்க போராட்டம்
ஆசிரியர்கள் சங்க போராட்டம்

https://businesstrichy.com/the-royal-mahal/

”பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பொறுப்பேற்ற காலந்தொட்டு ஆசிரியர்களுக்கு விரோதமான, பாதிப்பான செயல்பாடுகளை தொடர்ந்து செய்து வருவதில் தீவிரம் காட்டி வருகிறார்.” என்பதாகவும் தனது அறிக்கையில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ மதிப்புமிகு பள்ளிக் கல்வித் துறை செயலாளர் அவர்கள் அரசுக்கு எதிராக ஆசிரியர்களின் உணர்வுகளை உச்சந்தொட வைக்கும் செயல்பாட்டில் தீவிரம் காட்டி வருகிறார்.

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வினை உச்ச நீதிமன்றத்தில் பதவி உயர்வு தொடர்பான வழக்கு மேல்முறையீட்டில் உள்ளது. விசாரணைக்கு வந்து தேதியினை ஒத்திவைத்து அறிவித்து வருகிறார்கள். ஜூன் மாதத்திற்குள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கி முடிவு பெறும் நிலையில் உள்ளது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

தமிழ்நாடு அரசின் சார்பாக பணி நியமனத்திற்கு TET தேர்ச்சியினை எடுத்துக் கொள்ளலாம். பதவி உயர்வுக்கு பணி முன்னுரிமை பின்பற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அரசாணைகளும் தெளிவாக உள்ளது. உச்சநீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் சார்பாக பள்ளிக்கல்வித்துறை மேல்முறையீடு செய்திருந்தது.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆசிரியர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த கொள்கை முடிவினை உடன் திரும்ப பெற்றுக் கொள்வதாக துறைக்கு குறிப்பாணை தந்து வருகிறார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்தியப் பெருநாட்டில் இதுவரையில் எந்த மாநிலத்திலும் நடைபெறாத வரலாற்றுப் பிழையினை ஏற்படுத்துகிறார்.
சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு TET தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்பதாகும். TET தேர்ச்சி பெற்றிருந்தால் 12 ஆண்டு காலம் பணியில் சேர்ந்த முன்னுரிமை உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் மூத்தவராக இருப்பினும் பதவி உயர்வு மறுக்கப்படுகிறது.

அமைச்சர் அன்பில் மகேஸ் - வா. அண்ணாமலை
அமைச்சர் அன்பில் மகேஸ் – வா. அண்ணாமலை

நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்கு பதவி முன்னுரிமை இந்திய ஆட்சிப் பணி உட்பட அனைத்து நிலையில் இருப்பவர்களுக்கும் பதவி உயர்வு பணியில் மூத்தவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு பணி முன்னுரிமையினை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டுமென வழக்குத் தொடுத்துள்ளார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோருடன் உடன் தலையிட்டு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்துள்ள வழக்கினை திரும்பப்பெறும் முயற்சியினை தடை செய்து, நேர்முக குறிப்பாணை வழங்கிடுமாறு தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பெரிதும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பொறுப்பேற்ற காலந்தொட்டு ஆசிரியர்களுக்கு விரோதமான, பாதிப்பான செயல்பாடுகளை தொடர்ந்து செய்து வருவதில் தீவிரம் காட்டி வருகிறார் என்பதையும், உள்ளது உள்ளபடியே பார்வைக்கு கொண்டு வருகிறோம்.

என்றும் வரவேற்க வேண்டியதை வரவேற்று நன்றி பாராட்டுவதும் பார்வைக்குக் கொண்டு வருவதை தவறாமல் பதிவு செய்து வரும் கொள்கை உணர்வு கொண்டவர்கள். இயக்கத்தின் மூத்த பொறுப்பாளர். வா.அண்ணாலை” என்பதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

– அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.