இதய மலருக்கு இறுதி அஞ்சலி!
நள்ளிரவில் 2.21 மணி
(15.08. 2022)
பொழுது இத்தனைத்
துயருடன் விடியும்
என்று நான் ஒருபோதும்
எண்ணியதே
இல்லை.
ஆம்.
நாகப்பட்டினம்
ரம்யா…
நுரையீரல் புற்று நோயினால்
உடல் நலம்
பாதிக்கப்பட்டு
இயற்கை எய்தி விட்டார்.
சமூகப் போராளி
சலியாத உழைப்பாளி
துயருறும்
மனிதர்களுக்கு
விரைந்து சென்று
அவர்களுக்கான
வினை புரிந்து
அவர்கள் தம்
துயர் துடைத்தவர்.
கடும் மழையா
கடும் புயலா
பாதிக்கப்பட்ட
மக்கள் வாழும்
பகுதிகளில்
நீங்கள்
ரம்யாவைக்
காணலாம்.
இல்லம் தேடி
கல்வியாகட்டும்
ஏதும்
இல்லாதோர்க்குக்
கொண்டு சேர்க்கும்
சேவையாகட்டும்
ரம்யாவின்
அந்த ஒடிசலான
தேகம் அங்கே
நின்றிருக்கும்.
தன் துயர அழுத்தங்களை
தன் மனதுக்குள்ளே
பூட்டி வைத்து…
சக பிள்ளைகளின்
சக மனுசிகளின்
சக மனிதர்களின்
அன்றாட வாழ்வியல்
துயரங்களைக்
களைந்திட
தோள் கொடுத்திட
நம்மில் எத்தனை
நபர்களால்
இயன்றிடும்???
இடையறாது
அலைந்து திரிந்து
பிறர்
இன்னல்களைக்
களைந்திட்ட
அந்த
இதய மலருக்கு
நானே
இறுதி அஞ்சலிக் குறிப்புகள்
வரைவேன்
என்று
எண்ணவே இல்லை.
ஒரு
மலர்
உதிர்ந்து
விட்டது….
அவ்வளவு
தான்.
-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு