அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் மாணவர்களின் உலகளாவியக் கூடுகை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் மாணவர்களின் உலகளாவியக் கூடுகை நடைபெற்று வருகிறது.. தூய வளனார் கல்வி நிறுவனங்களின் அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச, அவர்கள் தலைமையில் நடைபெறும் இக்கூடுகையில், உலகம் முழுவதிலும் பல்வேறு பொறுப்புகளிலுள்ள கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடி வந்து தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

முன்னாள் மாணவர்களின் உலகளாவியக் கூடுகை
முன்னாள் மாணவர்களின் உலகளாவியக் கூடுகை

கல்லூரிச் செயலர் அருள் முனைவர் கு.அமல், சே.ச, கல்லூரி முதல்வரும், முன்னாள் மாணவர் மன்றத்தின் இயக்குநருமான அருள் முனைவர் சி.மரியதாஸ், சே.ச, இணை முதல்வர் முனைவர் பா.இராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர். முன்னாள் மாணவர் மன்றத்தின் தலைவர் சிஏ டாக்டர் பண்ணை கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினார்.

https://www.livyashree.com/

கல்லூரியின் முன்னாள் மாணவர் முன்னாள் மாணவரும், இந்திய பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனங்களின் பொதுச் செயலாளருமான திரு.தர்மராஜ் சிறப்பு விருந்தினராகவும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வழிகாட்டிக் குழு உறுப்பினரான கல்லூரின் முன்னாள் மாணவர் முனைவர் ஆம்ஸ்ட்ராங் கௌரவ விருந்தினராகவும் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டுள்ளனர்.

தங்கள் துறைகளில் சிறந்து விளங்கிய முன்னாள் மாணவர்களான மூத்த வழக்கறிஞர் ஸ்டானிஸ்லாஸ், அமெரிக்க நாட்டின் ஆரக்கல் நிறுவனத்தின் மூத்த இயக்குனர்  எட்வர்ட் ஜெயராஜ், அண்ணா பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் முனைவர் வி மாசிலாமணி மற்றும் எல்.ஜி.டி.வி வணிக நிறுவன மேலாண் இயக்குனர்  வில்பிரெட் செல்வராஜ் ஆகியோருக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. .

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

முன்னாள் மாணவர்களின் உலகளாவியக் கூடுகை
முன்னாள் மாணவர்களின் உலகளாவியக் கூடுகை

இண்டேக்ட் இந்தியா அமைப்பினுடைய மேலாண்மை இயக்குனர்  தாமஸ் எபினேசர் மற்றும் சிறகுகள் சமூக சேவை அமைப்பின் நிறுவனத் தலைவர் சுந்தரம் ஆகியோருக்கு அன்னை தெரசா விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. .

நிகழ்வின் தொடக்கத்தில் சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்வுகள், நிகழ்வின் இடையிடையே முன்னாள் மாணவர்களின் பசுமையான நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் அமர்வு, நிகழ்வின் இறுதியில், அறுசுவை உணவு என விழாக் கோலாகலமாக நடைபெற்றது.

முன்னாள் மாணவர்கள், முன்னாள் இந்நாள் பேராசிரியர்கள், அலுவலக நண்பர்கள் மற்றும் விருந்தினர்கள் என உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவ மன்ற இயக்குனரும் கல்லூரியின் முதல்வருமான அருள் முனைவர் மரியதாஸ் தலைமையில், முன்னாள் மாணவர் மன்றத்தலைவர் சிஏ டாக்டர் பண்ணை கார்த்திகேயன் மற்றும் முன்னாள் மாணவர் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

ஜா.சலேத் & விமல் ஜெரால்டு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.