ஆட்டோ ஓட்டுநர்களின் தொடா் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி !

0

திருச்சி விமான நிலையத்தில் விரிவாக்கத்திற்கு முன் 60 ஆட்டோக்கள் விமான நிலைய பயணிகளை நம்பி வாழ்க்கை நடத்தி வந்தனர். விமான நிலையம் விரிவாக்கத்திற்கு பின்பு ஆட்டோக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. தடை விதிக்கப்பட்ட பின்பு 60 ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையம்
திருச்சி பன்னாட்டு விமான நிலையம்

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

நீண்ட நாட்களாக விமான நிலைய நிர்வாகிகளுடன் கடினமாக போராட்டத்தில் இருந்தனர். பலதரப்பட்ட போராட்டங்களில் தோல்வியடைந்த நிலையிலும் போராட்டத்தை கைவிடாமலும் தொடர்ச்சியாக ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் உடைய போராட்ட அறிவுரைகளின் படி விமான நிலைய ஆட்டோ டிரைவர்களுக்கு உறுதுணையாக ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தினுடைய நிர்வாகிகள் அனைவரும் அவர்களுக்கு சோர்வு ஏற்படும் போதெல்லாம் உறுதுணையாக நின்று போராட்டங்களை, உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் ஊட்டி போராட்டத்தை நடத்தி சென்றனர்.

திருச்சியினுடைய மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் அழைத்து விமான நிலையத்தின் வாசல் முன்பு மிகப் பிரம்மாண்ட முறையில் விமான நிலைய அதிகாரிகளுக்கு அவர்களின்  காதுகளுக்கு விழுவதைப் போல விமான நிலைய ஆட்டோ ஓட்டுநர்களின் நிலைமைகளை பற்றி கண்டனத்தையும் முழக்கங்களையும் ஒலிபெருக்கியின் மூலம் அனைத்து சங்கங்களின் சார்பாகவும் அனைத்து கட்சியின் இயக்கங்கள் சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் விமான நிலைய அதிகாரிகளுக்கு கோரிக்கைகளாக எடுத்துரைத்தோம். மீண்டும் காத்திருப்பு போராட்டம்  விமான நிலைய வாயில் முன்பு முழக்கம் இடுப்பு போராட்டம், காவல் நிலையத்தில் மீண்டும் மீண்டும் மனு கொடுக்கும் போராட்டம் என்று தொடர்ச்சியாக பல்வேறு பல்வேறு வடிவங்களில் தினந்தோறும் விடாமுயற்சியாக செய்து வந்தோம்.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

அதன் அடிப்படையில் விமான நிலையத்தின் காவல் ஆய்வாளர் உதவியோடு வட்டாட்சியர் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் ஏற்பாடு செய்து சமரச தீர்வு ஏற்படுத்தி கொடுத்தார்.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

சமரச தீர்வு பேச்சு வார்த்தையில் சமூக நீதி பேரவையின் நிறுவனர் தோழர் ரவிக்குமார், ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் நிறுவனர் சம்சுதீன் அவர்களும் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் நிர்வாகிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமுகத்தேர்வு காணப்பட்டது.

அந்த தீர்வில் பயணிகளை ஏற்றுவதற்கும், இறங்குவதற்கும் மற்றும் ட்ராலி அருகாமையில் இருப்பதற்கும் வழிவகை செய்து தருவதாக விமான நிலைய நிர்வாக உயர் அதிகாரிகளிடம்  கலந்தாய்வு பண்ணி நாங்கள் இதை விரைவில் செய்து தருகிறோம் என்று ஒப்புதல் அளித்தனர்.

அந்த ஒப்புதலுக்காக  நீண்ட நாள் காத்திருந்தோம் அந்த ஒப்புதல் பெற முடியவில்லை அதற்கு காரணம் பழைய விமான நிலைய அதிகாரி ஒத்துழைப்பு தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.

தற்போது புதிய விமான நிலைய அதிகாரி நியமனம் செய்த பின்பு மீண்டும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பின் சங்க சார்பாக வட்டாட்சியர் முன்பு பேசப்பட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

அவரும் தற்போது புதிதாக வந்துள்ளதால் உங்களது கோரிக்கையை நான் பரிசீலனை செய்து நல்ல தீர்வு தருவதாக எனக்கு மேல் உள்ள உயர் அதிகாரிகளை கலந்தாய்வு செய்து தங்களுக்கு நல்ல முடிவை கூறுகிறேன் என்று  உத்தரவளித்தார்.

ஆட்டோ ஓட்டுநா் போராட்டம்நாங்களும் அதிகாரிகள் கூறி வந்ததை ஏற்று  காத்து வந்தோம். ஒரு மாதம் பொறுத்திருந்து மீண்டும் உயரதிகாரியை நேர்முகமாக சந்தித்து எங்கள் கோரிக்கைகளை வேதனையுடன் அவரிடம் முன் வைத்தோம் உடனடியாக ஒரு வாரம்  அவகாசம் கொடுங்கள் உங்களுக்கு நல்ல சாதகமாக முடிவை கூறுகிறேன் என்று கூறி வந்தார்.

07.04.25 அன்று விமான நிலைய அதிகாரி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாளை வாருங்கள் உங்களுக்கு ஆட்டோக்கள் நுழைவதற்கான தடைகளை அகற்றி பயணிகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் அனுமதி அளிக்கிறேன் என்று கூறியதன் விளைவு இன்று (08.04.2025)  மதியம் 3 மணி அளவில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர். ஜீவா ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் மணலிதாஸ், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழர் லதா மற்றும் விமான நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வரும் நிர்வாகிகள் அவர்கள் முன்னிலையில் பயணிகளை இறக்குவதற்கும், ஏற்றுவதற்கும் இடங்களை தேர்வு செய்து உத்தரவு அளித்து அங்கு  நான்கு ஆட்டோக்களை மட்டும் அமர்த்துவதற்கு அனுமதி அளித்து இனி ஆட்டோ ஓட்டுனர் ஆகிய உங்களிடம் பொறுப்பை கொடுத்துள்ளோம். தாங்கள் அனைவரும் ஒற்றுமையாக எந்த ஒரு பிரச்சனை இல்லாமல் உங்களை ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்திக் கொள்ளலாம் என்று கூறி வந்தார் அவர்.

ஆட்டோ ஓட்டுநா் போராட்டம்அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு அவருக்கு எங்களின் 60 ஆட்டோ ஓட்டுனர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை காத்து தந்த விமான நிலைய அதிகாரிக்கு எங்களின் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மனம் திறந்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்து வந்தோம்.

இந்த நிகழ்வுக்கு ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் உடைய விமான கிளை தோழர்களும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட நிர்வாகிகளும் நடத்திய தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இந்தப் போராட்டத்திற்கு துணையாக விமான நிலைய அதிகாரிகளும், காவல்துறைக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆட்டோ ஓட்டுநா் போராட்டம்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் M.P  துரை வைகோ,   ஆட்டோ ஓட்டுநர்களுக்காக பலவகையில் விமான நிலைய அதிகாரியிடம் தொலைபேசியின் மூலமும் விமான நிலையத்தின் ஒரு அங்கத்தில் இருப்பதாலும் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்டோ டிரைவர்கள் உடைய வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என சொல்லி அவர்களுக்கு இருந்த தடையை உடைக்க விமான நிலைய அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வழிவகை செய்வதற்கு உறுதுணையாக இருந்தார். அவருக்கும்…

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதேபோல் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ அவர்கள் அதே போல் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களின் போராட்டத்திற்கு நானும் உங்களுடன் பங்கெடுத்து கொள்கிறேன்.

இந்த தடையை உடைக்கும் வரை நான் உங்களுடன் இருப்பேன் என்று நம்பிக்கையூட்டி நமது வாழ்வை காப்பாற்றி கொடுத்த அவர்களுக்கும் பேச்சு வார்த்தையில் நம்மோடு பேசிய கருத்துக்களுக்கு இணங்கிய வட்டாட்சியர் அவர்களுக்கும் மற்றும் கட்சியினர்களுக்கும் இயக்கங்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும், தோழமை அரங்கு தோழர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும், ஏர்போர்ட் பகுதி மக்களுக்கும் எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கீழ் இயங்கி வரும் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

—  ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.