ESSHA GROUPS திருச்சி தொழில் அதிபர்களை குறி வைத்து புதுவகை மோசடி – மனைவி கைது ! கணவர் தலைமறைவு !

0
ESSHA GROUPS என்ற பெயரில் புது வகை மோசடி ! திருச்சி EOW போலீசார் வழக்குப்பதிவு ! திருச்சி புத்தூரை தலைமையிடமாகக்கொண்டு இயங்கி வந்த ESSHA GROUPS என்ற பெயரில் இயங்கிவந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்த பணத்தைத் திருப்பித்தராமல் ஏமாற்றிவிட்டார்கள் என்று பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக தெரிவிக்கிறார்கள் திருச்சி மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார்.
essha group
essha group
திருச்சி, புத்தூர், எண் 9, ஆல் செயின்ட் கோல்டன் ஜூப்லி வர்த்தக வளாகத்தில் இயங்கி வரும் ESSHA GROUPS என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை, முகமது பாரூக் என்பவர், தனது மனைவி ஜெய்துன்பீவியுடன் கூட்டாக நடத்தி வந்திருக்கிறார்.

அவரது நிறுவனத்தில் ஒரு இலட்சம் முதலீடு செய்தால், மாதந்தோறும் 8 முதல் 10 சதவீதம் வரையில் லாபத்தொகை தருவதாகக்கூறி ஆசை வார்த்தைகளில் நம்ப வைத்ததாகவும் பல தவணைகளில் கொடுத்த பணத்தை திரும்பக் கொடுக்கவில்லை என்பதாக, திருச்சி தென்னூர், அண்ணாநகரைச் சேர்ந்த சையத் நஜிர் என்பவர் திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்திருக்கிறார்.

முகமது பாரூக் - மனைவி ஜெய்துன்பீவி
முகமது பாரூக் – மனைவி ஜெய்துன்பீவி

முதற்கட்ட விசாரணையில் மேற்படி நிறுவனம் மோசடியாக பலரிடமும் பணம் வசூலித்துவிட்டு ஏமாற்றியிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதுவரை நாற்பதுக்கும் அதிகமானோர் புகார் அளித்திருப்பதாக தெரிவிக்கிறார்கள். சுமார் 3 கோடிக்கும் அதிகமான அளவில் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். இதனையடுத்தே, திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு குற்ற எண். 08/2024 U/S 406, 420, IPC & Sec 5 of TNPID-ன் படி வழக்கு பதிவு செய்து திருச்சி மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகிறார்கள.

வழக்கின் முதல் குற்றவாளியான முகமது பாரூக் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்ட நிலையில், இரண்டாவது குற்றவாளியும் அவரது மனைவியுமான ஜெய்துன்பீவியை கைது செய்து சிறையிலடைத்திருக்கிறார்கள்.
தலைமறைவாக உள்ள முகமது பாரூக்கை பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக தெரிவிக்கிறார்கள். மேலும், ”ESSHA GROUPS நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் எவரேனும் இருந்தால்
திருச்சி பொருளாதாரக்குற்றப்பிரிவு, எண். 10 அப்துல் சலாம் தெரு, காஜாமலை, மன்னார்புரம், திருச்சி – 620020.
என்ற முகவரியில் புகார் அளிக்குமாறு ” வேண்டுகோள் விடுக்கிறார்கள் திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார். பெரும்பாலும் ரோட்டரி கிளப் உறுப்பினர்களை டார்கெட் செய்து தனது வலையை வீசியிருக்கிறார் முகமது பாரூக். இவருக்கு உறுதுணையாக ஆயில் மில் வைத்திருக்கும் தொழிலதிபர் ஒருவரின் உதவியோடு பலரையும் வளைத்துப்போட்டிருக்கிறாராம் பாரூக்.
பெரம்பலூர் எம்.பி அருணுடன்
பெரம்பலூர் எம்.பி அருணுடன்
ஆளும்கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களுடனும் குறிப்பாக கே.என்.நேரு, அவரது மகனும் எம்.பி.யுமான அருண்நேரு ஆகியோரிடம் நெருக்கமாக இருப்பதைப் போல காட்டிக்கொண்டே தன்னுடைய வணிக நிறுவனங்களின் திறப்பு விழாக்களுக்கு வரவழைத்து தனக்கு அரசியல் தொடர்பு இருப்பது போன்று காண்பித்து வியாபார பெரும்புள்ளிகள் பலரிடமிருந்தும் பல கோடிகளை வசீகரித்திருக்கிறார் பாரூக்.
ஒருகட்டத்தில், முதலீடு செய்தவர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் தடுமாற, லோக்கல் போலீஸில் புகார் கொடுத்து நெருக்கடி கொடுத்த சிலருக்கு பணத்தை செட்டில்மெண்ட் செய்திருக்கிறார். நிலைமை கைமீறி போகவே, துபாய்க்கு  பறந்துவிட்டார் என்கிறார்கள். 
– அங்குசம் புலனாய்வுக்குழு.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.