மலையகத் தமிழ் மக்களின் வாழ்வும் அவலமும் – யாவரும் கேளீர் – தமிழியல் பொது மேடை – 4

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மலையகத் தமிழ் மக்களின் வாழ்வும் அவலமும் – யாவரும் கேளீர் – தமிழியல் பொது மேடை – 4 –  இலங்கை : மலையகத் தமிழ் மக்களின் வாழ்வும் அவலமும் கடலில் பாதையும் இல்லை,  திசையும் இல்லை பயணம் தொடர்ந்தது ! யாவரும் கேளீர் நிகழ்வு -( 4 ) 24.08.2024 ஆம் நாள் நடைபெற்றது. இந் நிகழ்வுக்குத் திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி தலைமை தாங்கினார். இலங்கை – மலையகத் தமிழ் மக்களின் வாழ்வும் அவலமும் என்னும் பொருண்மையில் வழக்கறிஞர் தமிழகன் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்வின் புரவலர் பேராசிரியர் ரெ.நல்லமுத்து சிறப்பு விருந்தினர்களுக்குப் பயனடை அணிவித்துச் சிறப்பு செய்து, நிறைவாக நன்றி கூறினார்.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி
தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி

“உலகில் மிகவும் கொடுமையான வாழ்வு பல இருந்தாலும், கொடுமைகளில் முதன்மையானது புலம் பெயர்ந்து வாழ்வதேயாகும். பிறந்த மண்ணை விட்டு, புகுந்த மண்ணில் அந்த நாகரிகம், பண்பாட்டு ஒத்துப்போகாமலும், முரண்பட்டு விலகி இருக்கமுடியாமல் வாழும் வாழ்க்கைதான் புலம் பெயர்ந்த மக்களின் வாழ்வாகும்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

எம்.பில். பட்ட ஆய்வுக்கு ‘புலம் பெயர்ந்த மக்களின் வாழ்வைத்தான்” எடுத்துக்கொண்டேன். அதனால்தான் இந்த யாவரும் கேளீர் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறேன் என்று எண்ணுகிறேன்.

மலையகமக்களின் வாழ்வு என்பது நிலையில்லாத் தன்மையுடன் இருந்து வருகின்றது. மலையக மக்களின் மனித உரிமைகள் காக்கப்படவேண்டும், அவர்கள் உரிமை பெற்று வாழவேண்டும் என்ற நோக்கில் இந் நிகழ்வு நிகழ்த்தப்படுவது சாலப் பொருத்தமுடையதாகும்” என்றார் தலைமை உரையாற்றிய பேராசிரியர் ஞா.பெஸ்கி. நிகழ்வில் இலங்கை – மலையகத் தமிழ் மக்களின் வாழ்வும் அவலமும் என்றும் பொருண்மையில் சிறப்புரையாற்றிய வழக்கறிஞர் தமிழகன்,“1815இல் இலங்கை முழுத் தீவும் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது.

இதனைத் தொடர்ந்து 1823-இல் கம்பளை, சின்னப்பிட்டிய தோட்டத்தில் காப்பி பயிரிடுவது தொடங்கி, அப் பயிர் விளைவிக்கப்படுவது பெருகியது. இத் தோட்டங்களுக்குத் தேவையான தொழிலாளர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இடைத்தரகர்களான கங்காணிகள் மூலம் அழைத்துவரப்பட்டனர்.

வழக்கறிஞர் தமிழகன்
வழக்கறிஞர் தமிழகன்

இந்தியாவில் நிலவிய சாதியக் கொடுமைகளிலிருந்தும், குறைவான ஊதியம் இவற்றால் அல்லலுற்ற மக்கள் இலங்கை செல்வதை விரும்பியேற்று வந்தனர். அழைத்துவரப்பட்ட மக்கள் வரும் வழியில் பல்லாயிரக்கணக்கில் உயிரிழந்தார்கள்.

காப்பிப் பயிர்கள் ஹெமிலியா வெஸ்டாரிக்ஸ் நோயினால் அழிய, அந்த இடங்கள் தேயிலை மற்றும் இரப்பர் தோட்டங்களாக மாறின. இலங்கையின் அந்நியச்செலவாணியில் 66% ஏற்றுமதியில் 80% ஈட்டித்தரும் தோட்டத் தொழிலாளருக்கு அடிப்படை வாழ்வாதாரங்களை வழங்காமல் அவர்களை அரைக்கொத்தடிமை நிலையிலேயே ஆங்கில ஆட்சியாளர்கள் வைத்திருந்தனர்.

இலங்கை 1948 இல் சுதந்திரமடைந்தபோது ஆட்சிக்கு வந்த டி.எஸ்.சேனநாயக்க அரசு ஒரே கையெழுத்தில் பத்து லட்சம் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமை பறித்து அவர்களை நாடற்றவர்களாக மாற்றியது. அச்சமயத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் 8 உறுப்பினர்களைத் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவு செய்து அனுப்பியிருந்தார்கள்.

இது தவிர இடதுசாரிக் கட்சிகளுக்கே அவர்கள் பெருமளவில் ஆதரவளித்தனர். இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை இந்தியா தடுத்து நிறுத்தியிருக்கவேண்டும். ஆனால் இந்திய அரசு மலையக மக்களைக் கைவிட்டுவிட்டு, இலங்கை அரசுக்குச் சாதகமாக நடந்துகொண்டது. இம் மக்களுக்கு வாழும் உரிமைகளை வழங்க மறுத்த பண்டங்களைப்போல இருநாடுகளும் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை 1964 இல் செய்து கொள்ளப்பட்டது.

இதற்கான தனியான ஆவணம் எதுவும் இருநாட்டு அரசுகளால் உருவாக்கப்படவில்லை. அடிமைகளுக்கு எதற்கு ஆவணம் என்று இருநாடுகளும் முடிவு செய்திருக்கலாம். 1972 இல் தேயிலைத் தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டபோது, சிங்களவர்கள் தோட்ட அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர். இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கொழும்பிலிருந்து தலைமன்னாருக்குத் தொடர்வண்டிகளிலும், தலைமன்னாரிலிருந்து இராமேசுவரம் வரையிலும் இராமானுஜம் என்ற கப்பலிலும் பயணித்து வந்தனர். அவர்களை வழியனுப்ப வரும் உறவினர்களும் நண்பர்களும் பிரிவுத் துயர் தாங்காது கதறிக் கதறி அழும் காட்சி நினைத்துப் பார்க்கவே முடியாத கொடுமையான துயரமானதாகும்.

மலையகத் தமிழ் மக்களின் வாழ்வும் அவலமும்
மலையகத் தமிழ் மக்களின் வாழ்வும் அவலமும்

இந்தியா வரும் மக்கள் இரயிலில் வரும்போது தங்களின் துயரங்களை ஒப்பாரி வடிவில் பாடிக்கொண்டு வருவார்கள். இதனால் இந்தத் தொடர்வண்டிக்கு “அழுகை கோச்சி” என்ற பெயர் ஏற்பட்டது.

இலங்கையின் மக்கள் தொகையில் 2ஆவது இடத்திலிருந்த மலையக மக்கள் எண்ணிக்கை இவ்வுடன்படிக்கையின் மூலம் மக்கள் இந்தியாவிற்குச் சென்றதால் மலையக மக்கள் எண்ணிக்கை இலங்கையில் 4 ஆவது இடத்திற்குத் தாழ்ந்துபோனது. மலையக மக்களில் பெரும்பாலானோர் இலங்கையை விட்டு வெளியேற விரும்பவில்லை என்ற நிலையும் இருந்து வந்தது.

மலையக மக்களை வெளியேற்றும் நோக்கத்துடன் 1977 இல் மலையக மக்களுக்கு எதிராக அரசின் ஆதரவுடன் பெரிய அளவிலான கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டன. மக்கள் உயிருக்குப் பயந்து வேறிடங்களில் ஒளிந்துகொண்டனர். சொத்துகள் சூறையாடப்பட்டன. பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 1981இல் சிங்களவர் 80% மேல் வாழும் இரத்தினபுரி மாவட்டத்தில் கொடிய வன்செயல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

“உயிரோடு இருக்கவேண்டுமானால் இந்தியாவுக்கு ஓடிவிடுங்கள்” என மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதுபோல இச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதனைத் தொடர்ந்து 1983, 1984, கலவரங்களின்போதும் பெருந்தொகையான மக்கள் தாயகமான இந்தியாவுக்குத் திரும்பினர்.

இந்த வன்செயல்கள் அனைத்தும் இலங்கை – இந்திய அரசுகளின் திட்டமிட்ட சதியே என்றால் அது மிகையில்லை என்றே கூறவேண்டும். இலங்கையிலிருந்து இராமேசுவரம் வந்த மலைய மக்களிடம் அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்ளவில்லை. அவர்கள் கொண்டுவந்த பெட்டியை உடைத்துப் பொருள்களைத் திருடினார்கள்.

சட்டை பையில் இருந்த பேனாவை எடுத்துக்கொண்டார்கள் என்றால் அதிகாரிகள் எப்படிப்பட்ட மனநிலையில் இருந்திருப்பார்கள் என்று எண்ணிப்பார்க்கவேண்டும். கடலில் பாதை இல்லை, திசையும் இல்லை எதுவும் புரியாமல் மலையகமக்கள் தாயகம் திரும்பிய மக்கள் அனைவரும் நிரந்தர வாழ்வாதாரமும் இன்றிக் கூலித் தொழிலை நம்பிக் குடியிருக்க வீடோ, வீட்டு மனையோ இன்றி, இலங்கையில் தோட்டங்களில் வாழ்ந்த நிலைமையைவிட மோசமான நிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

புரவலர் பேராசிரியர் ரெ.நல்லமுத்து சிறப்பு விருந்தினர்களுக்குப் பயனடை
புரவலர் பேராசிரியர் ரெ.நல்லமுத்து

தாயகம் திரும்பிய மக்கள் சுமார் 20 இலட்சம் இருக்கலாம். நீலகிரியில் 4 இலட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தாயகம் திரும்பிய மலையக மக்கள் ஒன்றுபட்டுத் திரள்வது சாத்தியமாகவில்லை. சாதி மற்றும் அரசியல் கட்சிகளாகவும் பிளவுண்டு கிடக்கின்றனர்.

மொத்தத்தில் இலங்கையில் இந்தியத் தமிழர்களாகவும் இந்தியாவில் ‘சிலோன்காரர்களாகவும்’ அந்நியப்படுத்தப்படுகின்ற அவல நிலையே தாயகம் திரும்பி மக்கள் அனுபவித்து வருகின்றனர். மலைய மக்களுக்காகக் குரல் கொடுக்கவும், மாநில அரசுகளிடம் உரிய மறுவாழ்வுத் திட்டங்களைப் பெறவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

அங்குசம் அறக்கட்டளை தலைவர் தாவீது ராஜ் சிறப்பு விருந்தினர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்பித்தார். இலங்கையில் 200 ஆண்டுகள் வாழ்ந்து வரும் மலையகத் தமிழர்களின் சோகமான வாழ்வும், அவர்கள் அடைய வேண்டிய உரிமைகள் குறித்த ஒரு விழிப்புணர்வை இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது உண்மையே.

-ஆதவன்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.