குளித்தலையில் – விவசாயத்திற்கு தண்ணீர் விடகோரி தர்ணா போராட்டம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

குளித்தலையில் கடைமடை பகுதி விவசாயிகள் கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் விட கோரி நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு. கரூர் மாவட்டம், குளித்தலை தாலுக்கா நச்சலூர் கடைமடை பகுதியில் மட்டும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. தற்போது சம்பா நெல் சாகுபடிக்கு தயாராகி வரும் விவசாயிகள் போதிய அளவு தண்ணீர் செல்லாததால் நாற்று விட முடியாமல் தவித்து வருகின்றனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதனால் விவசாயிகள் இன்று காலை குளித்தலையில் உள்ள நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி செயற் பொறியாளர் கோபிகிருஷ்ணன், உதவி பொறியாளர் பத்மாதேவி, குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த பேச்சு வார்த்தையில் வருகிற 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்குள், போதிய அளவு தண்ணீர் விட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

  -நௌஷாத்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.