கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாய சங்கத்தினர் நடத்திய பூச்சி மருந்து குடிக்கும் போராட்டம் !
விவசாய சங்கத்தினர் பூ*ச்சி மருந்து கு*டிக்கும் போ*ராட்டம் – விருதுநகர் – கோட்டாட்சியர்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற கோரி தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் OP. நாராயணசாமி, பொருளாளர், சுப்புராஜ், தலைமையில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு விஷம் அருந்தி தற்கொலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே உள்ள வீரச் செல்லையாபுரம் பகுதியில் சிவகாசியை சேர்ந்த தனியார் நிறுவனம் சட்டவிரோதமாக நீர் வழி மற்றும் வண்டிப் பாதையை மறைத்து முள்வேலிகள் அமைத்து தடுத்துள்ளதாகவும்.
இதனால் நீர்வழி பாதைகள் தடைபட்டு கம்மாய்க்கு செல்ல வேண்டிய நீர் செல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளதாகவும்.
அதேபோல் அந்தப் பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் பல வருடங்களாக பயன்படுத்தி வந்த வண்டிப்பாதையையும் ஆக்கிரமிப்பு செய்ததால், தங்களது நிலத்தில் விவசாயம் செய்ய செல்வதற்கு 3 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும்.
இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் வருவாய்த்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு தொடர்பான இடத்தை நேரில் ஆய்வு செய்ததில்,
2 நீர்வழிப்பாதையும் ஒரு வண்டிப் பாதையும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை உறுதி செய்து பதில் மனுவாக கொடுத்துள்ளதாகவும்,
இந்த நிலையில் பலமுறை விசாரணைக்கு சம்மன் கொடுத்தும் தனியார் நிறுவன ஆக்கிரமிப்பாளர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் தங்களை மட்டும் அலைக்கழித்து வருவதாகவும்.
இதனால் கடந்த 3 முறைக்கு மேல் அனைத்து விவசாய பணிகளையும் போட்டுவிட்டு நாங்கள் மட்டுமே நேரில் வந்து ஆஜராகி வருவதாக குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
இந்த ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றாவிட்டால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அங்கிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.
பின்னர் அங்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார்,வட்டாட்சியர் ராஜ்குமார், காவல் உதவி ஆய்வாளர், சதீஷ் , ஆகியோர் முன்னிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினரை அழைத்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால்,
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வெளியே வந்த விவசாயி சங்கத்தினர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறும் தனியார் நிறுவனத்தினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வருவாய்த் துறையினர் ஆகியோருக்கு ஆகியோருக்கு எதிராக கோஷமிட்டு ஆக்கிரமிப்பு அகற்றும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
— மாரீஸ்வரன்.