மகள் பெயரில் சீட்டு கம்பெனி – வட்டி பிசினஸிலும் காசு பார்த்த நியோமேக்ஸ் பாலசுப்ரமணியன் !
மகள் பெயரில் சீட்டு கம்பெனி – வட்டி பிசினஸிலும் காசு பார்த்த நியோமேக்ஸ் பாலசுப்ரமணியன் !
மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சந்திரா ராமகிருஷ்ணன் நியோமேக்ஸில் 13 இலட்சத்தை முதலீடு செய்திருக்கிறார். திருநெல்வேலியைச் சேர்ந்த ரீஜினல் ஹெட் – வீரபத்திரன் வழியாக, தனது உடன்பிறந்த சகோதரி சாந்தியை சாட்சியாக வைத்துக்கொண்டு இவ்வளவு பணத்தை போட்டிருக்கிறார். கணவர் வெளிநாட்டில் சம்பாதிக்கிறார், உள்ளூரில் பிரபலமான மருத்துவர் என்ற அடிப்படையில் குறிவைத்து காய் நகர்த்தியிருக்கின்றனர்.
“கம்பெனியை நம்பி பணம் போட வேண்டாம். என்னை நம்பி பணம் போடுங்க. சாதாரணமாக சைக்கிளை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த நான் இன்று கோடீஸ்வரனாக மாறியிருப்பதற்கு நியோமேக்ஸ்தான் காரணம். என்னிடம் சொகுசு கார்களே நாலைந்து இருக்கிறது. என வீரபத்ரன் சொன்னதை நம்பித்தான் என் கணவருக்குகூட தெரியாமல் முதலீடு செய்தேன்.
இப்போது, போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை” என புலம்புகிறார், மருத்துவர் சந்திரா ராமகிருஷ்ணன்.
மிக முக்கியமாக, நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவரான பாலசுப்ரமணியனின் மகள் லாவண்யா என்பவர் நடத்திவரும் ஆரோ சிட்பண்ட்ஸில் 5 இலட்சத்தை முதலீடு செய்திருக்கிறார்.
நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ததற்கு ஆதாரமாக கொடுக்கப்படும் ரசீதை அடமானமாக வைத்து ஆரோ சிட்பண்டில் சேரலாம் என்பதிலிருந்தே, நியோமேக்ஸின் பினாமி நிறுவனம்தான் ஆரோ சிட்பண்டஸ் என்பது உறுதியாகிறது.
தோண்டத் தோண்ட பூதம் கிளம்பும் கதையாக, நியோமேக்ஸ் விவகாரம் அவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வராது போல !
அடுத்தடுத்து வெளிவரும்…
வீடியோ லிங்: