“நெகிழியை ஒழிப்போம் மீண்டும் மஞ்சப்பை எடுப்போம்” திருச்சி கல்லூரி NSS மாணவிகள் !

0

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு “நெகிழியை ஒழிப்போம் மீண்டும் மஞ்சப்பை எடுப்போம்”

புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் இணைந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர், சா. அய்யம்பாளையம் ஊராட்சி, கிராம ஊராட்சி சேவை மையம் கட்டிடத்தில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் பழனியம்மாள் தலைமையில் நடைபெற்றது.

கூட்ட நிறைவில் நெகிழி ஒழிப்பு குறித்து பத்மஸ்ரீ சுப்பராமன், ராயல் லயன்ஸ் சங்க தலைவர் முகமது சஃபி, நிர்வாக அலுவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் எடுத்துரைத்து கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற மக்களுக்கு மீண்டும் மஞ்சள் பை வழங்கப்பட்டது.

திருச்சிராப்பள்ளி புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.பி.மெர்லின் கோகிலா, உதவிப் பேராசிரியர், பொருளாதாரத் துறை, நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.