இன்ஸ்டா பிரபலம் ஒருவர் பெண்களை ஆபாச வீடியோ எடுத்ததாக செய்தி தான் ஹாட் டாபிக் !
இன்ஸ்டா பிரபலம் ஒருவர் பெண்களை ஆபாச வீடியோ எடுத்ததாக செய்தி தான் ஹாட் டாபிக் – எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. பிரபலம் என்பவர் மனிதர் தானே. அவர் என்ன உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட தெய்வ பிறவியா? அவருக்கு நம்மிடம் இல்லாத ஏதோ ஒரு திறமை சற்று கூடுதலாக இருக்கலாம்.
அதை அவர் வெளிப்படுத்தி காசு சம்பாதிக்கிறார், பலரை கவர்கிறார் என என்ன வேண்டுமானாலும் கூறலாம்.
அந்த இன்ஸ்டா பிரபலத்தை சுற்றி பெண்கள் தானாக மேலே விழாத குறையாக வளைக்கிறார்கள். எதனால் பெண்கள் அப்படி செய்கிறார்கள். ஈர்ப்பு.
ஒரு பிரபலத்துடன் போட்டோ எடுத்து எனக்கு இவரை தெரியும், he is close to me போட்டோ எடுத்து இருக்கிறேன் என பெருமைப்பட விரும்புகிறார்கள். இன்னொன்று அந்த நபரை கவர முயல்கிறோம், அதற்காக பிற பெண்களுடன் போட்டி போடுகிறோம் என்கிற உணர்வு கூட அவர்களுக்கு தெரிவதில்லை..
ஒருவரின் தனித்திறமை (அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்) மீது இருக்கும் மயக்கம். உழைப்பு இல்லாமல் அந்த திறமைசாலி நிழலில் தன்னை வெளிப்படுத்தி கொள்ள செய்யும் சிறு பிள்ளைத்தனமான முயற்சி அது என்பதை அவர்கள் உணர்வதே இல்லை… (ஒரு வகை ஒட்டுண்ணி தனம்).
அப்படியான ஒரு பிரபலமாக தன்னை, தன் தனித்திறமைகளை உயர்த்திக்கொள்ள ஓரு போதும் முனைய மாட்டார்கள். காரணம் உழைக்க சோம்பேறித்தனம். எங்கு சோம்பேறித்தனம் இருக்கிறதோ அங்கு அறிவு நேர்வழியில் வேலை செய்யாது.
என் கேள்வி அத்தகைய பிரபலங்கள் யாராவது தான் அப்பழுக்கற்றவர்? அவதார புருஷர்/புருஷி என்று சொல்கிறார்களா? இல்லை நான் வாழும் மகாத்மா, தெரசா என்கிறார்களா? என்னுடன் பழகினால் நீங்களும் என்னை போல ஆகலாம் என அழைப்பு விடுகிறார்களா? அப்படியே அவர்கள் கூறுவதாகவே வைத்து கொள்வோம்.
நமக்கு சுய அறிவு எங்கு சென்றது. ஒருவர் கூறும் அனைத்தையும் நம்புகிறோமா? ஒருவர் போய் கொலை செய் என்றால் செய்வோமா? அல்லது செத்து போ என்றால் உடனே செத்து விடுவோமா?
நம் வசதிக்கு, நம் தேவைக்கு ஏற்ப பிறர் மீது நாமாக பிம்பங்களை கட்டமைத்து அப்புறம் மொத்தமாக அவர்கள் மீது பழியை போட்டு நம்மை குற்றமற்றவர் என்று வேறு நிறுவ முயலுகிறோம்..
நம்மை, நம் அறிவை, தகுதிகளை நாம் மேம்படுத்தி கொள்ளாதவரை சாகும் வரை பிறரை கைக்காட்டியே காலத்தை ஓட்ட வேண்டியது தான்… ஏனென்றால் அது சுலபமானது ..