மக்காச்சோள கதிரில்  சோளம் இல்லை ! கதறும் தமிழக விவசாயிகள் ! ஏமாற்றிய ஆந்திரா நிறுவனம் !

0

அறுவடை செய்த மக்காச்சோள கதிரில்  சோளம் இல்லை விவசாய குடும்பமே கதறி அழுத சோகம் அதிர்ச்சியில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் ! 

திண்டுக்கல் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம் பயிரில் சோளம் இல்லாமல் , வெறும் கதிர் மட்டும் இருப்பதால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

கலைஞர் பிறந்தநாள்

கலைஞர் பிறந்தநாள்

மக்கா சோளம் இல்லை
மக்கா சோளம் இல்லை

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் மற்றும் காமாட்சிபுரம், கோட்டைப்பட்டி, கோட்டையூர், கரிசனம்பட்டி, சில்வார்பட்டி, புதுக்கோட்டை, தாதன்கோட்டை உட்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அப்பகுதியில் உள்ள உரக்கடைகளில் இருந்து ஆந்திராவை சேர்ந்த அட்வான்டா என்ற கம்பெனியைச் சேர்ந்த மக்காச்சோளம் விதைகளை விலைக்கு வாங்கி 700 ஏக்கரில் கடந்த மார்ச் மாதம் நடவு செய்தனர்.

- Advertisement -

மக்காச்சோளத்திற்கு மருந்து தெளித்தும் களை எடுத்தல் என ஏக்கருக்கு 40 ஆயிரம் முதல் 50,000 வரை விவசாயிகள் செலவு செய்து உள்ளனர். 4 மாதம் கழித்து தற்பொழுது அறுவடை மாதமாகும் இதனிடையே நன்கு வளர்ந்திருந்த மக்காச்சோளத்தை உறித்து பார்த்தால் உள்ளே மக்காச்சோளம் இல்லாமல் வெறும் கதிர் மட்டுமே உள்ளது.

மக்கா சோளம் இல்லை
மக்கா சோளம் இல்லை
4 bismi svs

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வேளாண்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்காச்சோளத்தை பார்வையிட வரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழக அரசு உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளதால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே நேரத்தில்

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகள் பாகனூத்து புதுச்சத்திரம் செம்மடைப்பட்டி ரெட்டியார்சத்திரம் காமாட்சிபுரம் ஸ்ரீ ராமபுரம் வெள்ளமரத்துப்பட்டி கன்னிவாடி இராமலிங்கம்பட்டி மாங்கரை அம்மாபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் பிரதான விவசாயமே மக்காச்சோளம் பகுதிகளில் மட்டும் சுமார் 700 ஏக்கரில் வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், உள்ளிட்ட பகுதிகளிலும் மக்காச்சோளப் பயிரானது விவசாயிகள் பயிரிட பட்டு உள்ளனர் .இந்த மக்காச்சோளம் பயிரானது 6 மாதங்களில் வெள்ளாமை ஆகக்கூடிய பயிர் ஆகும்.

மக்காச்சோள கதிரில்  சோளம் இல்லை
மக்காச்சோள கதிரில்  சோளம் இல்லை

மக்காச்சோள பயிருக்கு ஒரு ஏக்கருக்கு சுமார் ஆட்கள் கூலி இல்லாமல் இதர செலவுகள் இன்றி மக்காச்சோள விதைகள் மற்றும் மருந்துகள் மட்டும் 40,000 செலவிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த மகசூலில் ஒரு ரூபாய்க்கு கூட பயனற்று வெள்மை ஆகியுள்ளது . தரமற்ற மக்காச்சோள பயிர்களை மாட்டுக்கு தீவனங்களாக கூட பயன்படுத்த முடியவில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

– ராமதாஸ்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.