50 வயதில் 7,000 கி.மீ சைக்கிள் ஓட்டிய சாதனை பெண்மணி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மண் காப்போம் இயக்கம் குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 50 வயதான நதாலி மாஸ் அவர்கள் பிரான்ஸ் முதல் கோவை வரை 7 ஆயிரம் கி.மீ சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.

கடந்தாண்டு ஜூன் 21-ம் தேதி தனது சொந்த ஊரான பிரான்சின் டூலோன் நகரில் இருந்து புறப்பட்ட அவர்  இத்தாலி, ஸ்லோவேனியா, குரோஷியா, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஐக்கிய அமீரக நாடுகள் மற்றும் ஓமன் வழியாக சைக்கிள் ஓட்டி, டிசம்பர் 1-ம் தேதி இந்தியாவுக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணித்த அவர் கோவை ஈஷா யோகா மையத்திற்கு இன்று (ஜனவரி 29) வருகை தந்தார்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

50 வயதில் 7,000 கி.மீ சைக்கிள் ஓட்டிய சாதனை பெண்மணி   
50 வயதில் 7,000 கி.மீ சைக்கிள் ஓட்டிய சாதனை பெண்மணி

உளவியலாளரான நதாலி அவர்கள் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்காக  சத்குரு அவர்கள் தனிநபராக  மேற்கொண்ட 30,000 கிலோமீட்டர் மோட்டார் சைக்கிள் பயணம் தான் தனது இந்த பயணத்திற்கான உத்வேகம்” என்று கூறினார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

மேலும், இது தொடர்பாக அவர் பேசுகையில், “நான் சத்குருவை சுவிட்சர்லாந்திலும், பாரிஸிலும் அவர் மண் காப்போம் பயணத்தில் இருந்த போது பார்த்தேன். அவரின் செயல்களைப் பார்த்து நான் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தேன். அத்துடன் நமது மண்ணின் பலவீனமான நிலையை நான் உணர்ந்தேன். அந்த நிமிடம் வரை நான் அதை அறிந்திருக்கவில்லை. உலகளவில், 52% விவசாய நிலங்கள் நிலம் மற்றும் மண் சிதைவினால் பாதிக்கப்பட்டுள்ளன.  மண் அழிவு உலகெங்கிலும் உள்ள 3.2 பில்லியன் மக்களை எதிர்மறையாக பாதிக்கிறது என UNCCD அமைப்பும், பூமியின் மேல் மண்ணில் 90 சதவீதம் 2050 ஆண்டிற்குள் ஆபத்தில் இருக்கும் என FAO அமைப்பும் எச்சரித்துள்ளது.

மண் காப்போம் இயக்கம் கூறுவதை போல விவசாய மண்ணில் குறைந்தபட்சம் 3-6% கரிமப் பொருட்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  அவ்வாறு செய்யும் போது மண் வளம் பெற்று விவசாயம் தொடர்ந்து நல்ல முறையில் நடைபெறும். உலகளாவிய உணவு நெருக்கடியையும் தவிர்க்க முடியும்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

50 வயதில் 7,000 கி.மீ சைக்கிள் ஓட்டிய சாதனை பெண்மணி   
50 வயதில் 7,000 கி.மீ சைக்கிள் ஓட்டிய சாதனை பெண்மணி

எனவே, நமது அரசியல் தலைவர்கள் இதற்கு முக்கியத்துவம் அளித்து அதற்கான சட்டங்கள் மற்றும் புத்துயிர் அளிக்கும் நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும்” என கூறினார். உலக அளவில் பெரும் கவன ஈர்ப்பைப் பெற்ற மண் காப்போம் இயக்கம், ஐ.நா. வின் 9 அமைப்புகள் மற்றும் உலக உணவுத் திட்டத்தால் ஆதரிக்கப்படுகிறது. மண் அழிவை தடுக்கும் தீர்வுகளை முன்வைக்கும் இத்திட்டம், மண் வளத்திற்கான உறுதியான கொள்கைகளை நிறுவுவதில் அரசாங்கங்களை வலியுறுத்துகிறது.

50 வயதில் 7,000 கி.மீ சைக்கிள் ஓட்டிய சாதனை பெண்மணி   
50 வயதில் 7,000 கி.மீ சைக்கிள் ஓட்டிய சாதனை பெண்மணி

தலாய் லாமா, ஜேன் குட் ஆல், ட்ரெவர் நோவா, ஜோ ரோஜென், மார்க் வால்ல்பெர்க் மற்றும் டிடியர் ட்ரோக்பா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் மண் காப்போம் திட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.

இதுவரை மண் காப்போம் இயக்கம் 3.91 பில்லியன் மக்களை சென்றடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.