ப்ளீஸ் காப்பாத்துங்க.. கரூரில் உறங்கும் காவல்துறை

0

“என்னை தினம் 10 பேருக்கும் மேல அனுபவிக்கிறாங்க. ஆறு மாதங்களாக என்னை குதறி எடுக்கிறார்கள். என்னால தாங்க முடியல ப்ளீஸ் எப்படியாவது என்னை காப்பாத்துங்க” என கரூர் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளை தொடர்புகொண்ட சிறுமியின் கதறல் தமிழக காவல்துறையையே அதிர வைத்தது. அந்த விவகாரத்தில் சிக்கிய போலீஸாரை மாவட்ட காவல்துறை காப்பாற்றுவதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. அதை விசாரித்தபோது கிடைத்த அத்தனையும் “அதிர்ச்சி” ரகம்.

“சபல” அதிகாரிகளை காப்பாற்றும் காவல்துறை

https://businesstrichy.com/the-royal-mahal/

கடந்த டிசம்பர்  இறுதியில், கரூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் மற்றும் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் அந்தச் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதன்பிறகுதான் “கண் முழித்தது” கரூர் காவல்துறை.

விசாரணைக்கு பிறகு, கரூர் தொழிற்பேட்டை பகுதியில் சிறுமியை வைத்து, பாலியல் தொழிலில் அவரை ஈடுபடுத்திய இடைதரகர்கள் சாந்தி, மேகலா, மாயா மற்றும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி மோகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.  அதில் முன்னாள் காவல் அதிகாரி மோகன் மூலம் அந்த சிறுமியை பல காவல் அதிகாரிகளுக்கு விருந்து வைக்கப்பட்டதும், விசாரணையில்  மோகன், சல்லாப அதிகாரிகளின் பட்டியலை ஒப்பித்துவிட்டார்.  அந்த அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டிய மாவட்ட காவல்துறை மவுனமாக இருப்பதாக” புலம்புகிறார்கள் குழந்தைகள் நல அதிகாரிகள்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

முதலில் நம்மிடம் பேச மறுத்த அதிகாரிகள், பின்பு நாம் விசாரணையில் கிடைத்த தகவல்களைச் பகிர்ந்துகொண்டபிறகு நம்பிக்கையுடன் பேச ஆரமித்தனர்.

“கடந்த ஆறுமாதமாக அந்த குழந்தையை கட்டாயப்படுத்தி அனுபவிச்சிட்டு அதில் கிடைத்த பணத்தை ஆளாளுக்கு பங்கு போட்டிருக்காங்க. இந்தவிவகாரத்தில் கடந்தவருடம் காவல்துறையில் இருந்து பணி ஓய்வு பெற்ற மோகன் மூலம் பல காவலர்கள் அந்தச் சிறுமியை சீரழித்துள்ளனர். அந்த மனித மிருகங்களின் பட்டியலை எஸ்.பி சுந்தரவதனத்திடம் கொடுத்தோம். ஒரு மாதம் ஆச்சு, இதுவரை சம்மந்தப்பட்ட போலீஸார் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எப்படி இருந்த மாவட்டம்.. இப்படி ஆச்சே

கடந்த 2021 நவம்பரில் கரூரில்  17 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சிறுமியின் குடும்ப உறுப்பினர்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  இதுபோல்தான், கரூரின் முன்னாள் எஸ்.பி வந்திதா பாண்டே,  சிவகங்கையில் இதுபோல ஒரு சிறுமி பாதிக்கப்பட்ட விவகாரத்தில் மிக நேர்மையாக விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தினார். அவரைப் போன்ற அதிகாரி இங்கு இல்லை. மூடி மறைக்கிறார்கள்” எனப் புலம்பினார்கள்.

கரூர் எஸ்.பி அலுவலகத்தில் பணியாற்றும் சில அதிகாரிகள் நம்மிடம்.

“பொள்ளாட்சி விவகாரம் போன்று அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கும் இச்சம்பவத்தை நோட்டமிட கரூர் மாவட்ட உளவுத்துறையினர் கோட்டைவிட்டுவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு தெரியாமல் எதுவும் நடக்கவில்லை. இங்குள்ள உளவுப்பிரிவு மற்றும் உயர் அதிகாரிகளுக்கு இலக்கே வேறு” என “க்” வைத்து பேசினார்கள்.

மேலும் அவர்கள், சில மாதங்களுக்கு முன்பு, தாந்தோணிமலையில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியின்  துணை முதல்வராக இருந்த டி.எஸ்.பி எஸ்.தேவராஜ் மீது, ஒப்பந்தக்காரர் பொன்.முத்துக்குமார் என்பவர் ஊழல் புகார் கொடுத்தார். அவர் மீதும் எவ்வித  சட்ட நடவடிக்கையும் எடுக்கல.

புகார் கொடுத்தவர் மீது பாய்ந்த நடவடிக்கை

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதேபோல் “கரூர் மாவட்ட எல்லையில் பணிபுரியும் கடவுள் பெயருடைய டி.எஸ்.பி ஒருவர், அலுவலகத்தில் செய்யும் “பலான” சில்மிஷங்கள் குறித்து அவருடன் பணியாற்றிய பெண் ஒருவர் டி.ஜி.பிக்கு “புகார்” அனுப்பினாராம்.  அதன்மீது விசாரணையெல்லாம் நடந்தது. காவல் அதிகாரியை பகைச்சிக்க கூடாது என மிரட்டி “நல்லவர்” “வல்லவர்” என விசாரணை அதிகாரிகள் விசாரணையில் எழுதி வாங்கிக்கொண்டனர். அடுத்த சில தினங்களில் புகார் கொடுத்த பெண் போலீஸார் ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டார்.  இப்போது அந்த டி.எஸ்.பி மீண்டும்  அதே வேலையை “கெத்”  ஆக செய்துவருகிறார்.

மேலும், “கரூர் மாவட்டத்தில் சமீபத்தில் சிக்கிய பரமசிவம், சங்கர் மற்றும் ஒரு பெண் உள்ளிட்டோரிடம் தனித்தனியே 70, 50 என மொத்தமாக பவுன் திருட்டு நகைகள் மீட்கப்பட்டது. அந்த நகைகளில் குறைச்சி கணக்கு காட்டிவிட்டு கரூர் கிரைம் டீம் பங்கு போட்டுக்கொண்டதாக பலமாக பேச்சு உலாவருகிறது.

பாதுகாப்பில்லை – டி.ஜி.பியிடம் முறையிட்டவர் சஸ்பெண்ட்

கடந்த சில தினங்களுக்கு முன்பு. கரூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.எஸ்.ஐ பானுமதி என்பவரை சில இளைஞர்கள் தாக்கி காயம் ஏற்படுத்தினர். அதோடு நி…லா எனும் பெண் காவலர், எஸ்.பியிடமும், டி.ஜி.பியிடமும் எனக்கு குழந்தைகள் இருக்கு என்னை காரணம் இல்லாமல் திடீர்ன்னு ட்ரான்ஸ்பர் போட்டா என்ன செய்வது” என முறையிட்டாராம். டி.ஜி.பி உத்தரவிட்டதும் கரூர் முக்கிய காவல் அதிகாரி, அந்தப்  பெண் காவலரை கரூர் டவுனுக்கு மாற்றிவிட்டதோடு, சில தினங்களில் தன்னை மீறி டி.ஜி.பியிடம் முறையிட்டதற்காக அடுத்த சில தினங்களில் காரணமில்லாமல் சஸ்பண்ட் செய்துவிட்டாராம். அதனால் அதிகாரிகள் மீது புகார் கொடுக்க போலீஸார் கலக்கத்தில் உள்ளார்களாம்.

விபத்தில் பலியான காவலர் விஜயகுமார்

இதுபோன்ற முக்கிய குற்றச்சாட்டுகளில் “சைலண்ட்” ஆகிவிடும் கரூர் முக்கிய காவல் அதிகாரி, பணிகளில் “தாமதம்” என்றால் மட்டும் எரிமலையாய் வெடித்து “சஸ்பெண்ட்”  அல்லது டிரான்ஸ்பர் செய்துவிடுகிறாராம்.  இதுவரை  சூழல் காரணமாக “லேட்”  ஆக வந்த  20க்கும் மேற்பட்ட கரூர் போலீஸார் மீது நடவடிக்கை எடுத்தவர், சில தினங்களுக்கு முன்பு கரூர் பாதுகாப்பு பணிக்கு பேருந்தை தவறவிட்டதால் வந்ததால் காலதாமதமாக வந்த புதுக்கோட்டை பெண் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்த மாவட்ட எஸ்.பிக்கு பரிந்துரை செய்துள்ளாராம். இதுபோன்ற “நடவடிக்கைக்கு” பயந்து, ஶ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதேசி பாதுகாப்பு பணிக்காக இருசக்கர வாகனத்தில் அவசரமாக சென்ற அரவக்குறிச்சி காவலர் விஜயகுமார் என்பவர் விபத்தில் சிக்கி பலியாகிப் போனார். இப்போது அவரின் இளம் மனைவி கைக்குழந்தையுடன் நிர்கதியாக நிற்கிறார்” என  இந்த பாவங்கள் சும்மாவிடாது கலங்கினார்கள்.

என்ன செய்கிறார்  கரூர் எஸ்.பி ?

தனக்கென வைத்துள்ள தனி டீம் மற்றும் உளவுப்பிரிவு அதிகாரிகள் பேச்சை மட்டுமே கரூர் முக்கிய காவல் அதிகாரி கேட்கிறாராம். சில மாதங்களுக்கு முன்பு, திருச்சி ஐ.ஜியாக இருந்த  பாலகிருஷ்ணன், குற்றச்சாட்டுக்குள்ளான சில உளவுப்பிரிவு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தாராம். பாலகிருஷ்ணன் கோவை கமிஷ்னராக மாறியதும்,  அந்த அதிகாரிகள் மீண்டும் கோலோச்சி விட்டார்கள். தமிழக அரசியலில் தினமும் தனது டிவிட்டால் பரபரக்க வைக்கும் இரு முக்கிய தலைவர்களின் சொந்த மாவட்டத்தில் மாவட்ட உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் இடம் காலியாகவே இருப்பதிலும் “அரசியல்”  உள்ளது.

கடத்தல் மணல்

கரூர் மாவட்டத்தில் உள்ள உளவுப்பிரிவு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு தற்போதைக்கு, மணல், பாலியல், சந்துக்கடை உள்ளிட்ட தொழில் செய்பவர்களிடம்   “கமிஷன்” பார்ப்பதில்தான் பலத்த போட்டி நிலவுகிறது.  இந்த அதிகாரிகளின் திடீர் “செல்வாக்கு” குறித்து விசாரித்தாலே மொத்தமும் அம்பலமாகும்” என்றவர்கள்.

 கரூருக்கு கடைசி இடம்.

சமீபத்தில் தமிழக காவல்துறை, ‘அவசர தொலைபேசி எண் 100-க்கு வந்த புகார் மீதான சிறப்பான நடவடிக்கை எடுத்த மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் கரூர் மாவட்டம் 17-ம் இடத்துக்கு பின்னடைந்துள்ளது. கரூரை கட்டிக்காக்கும் அந்த முக்கிய காவல் அதிகாரி , “முரட்டு சிங்கிள்” கிரக்கத்தில் இரவு 7மணிக்கு மேல் முதல்வர் போன் செய்தாலும் எடுக்க மாட்டாரு. பிறகு எப்படி அதிகாரிகள் 100க்கு வரும் போனை எடுப்பார்கள். என கரூர் காவல் அதிகாரியை தமிழக டி.ஜி.பி செல்லமாக கூப்பிடுவாராம். அந்த செல்வாக்கில்தான் ஹாயாக வலம் வருகிறார்.” எனப் புலம்பினார்கள் சீனியர் அதிகாரிகள்..

தமிழக காவல்துறையை கையில் வைத்துள்ள “முதல்வர்”தான் கரூரை காப்பாற்றனும்… !

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.