அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘ஆண்பாவம் பொல்லாதது’

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு: ‘டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ்’ வெடிக்காரன்பட்டி எஸ்.சக்தி வேல், இணைத் தயாரிப்பு: விவேக், விஜய், மணிகண்டன், டைரக்டர்: கலையரசன் தங்கவேல், ஆர்டிஸ்ட்: ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ஜென்சன் திவாகர், ஷீலா, டைரக்டர் ஏ.வெங்க டேஷ், ராஜாராணி பாண்டியன், தீபா சங்கர். கதை– திரைக்கதை-வசனம் : சிவகுமார் முருகேசன் & கலையரசன் தங்கவேல். ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம், இசை: சித்து குமார், எடிட்டிங்: கே.ஜி.வருண், ஆர்ட் டைரக்டர்: வினோத் ராஜ்குமார் தமிழ்நாடு ரிலீஸ்: ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மென்ட், பி.ஆர்.ஓ.: சதீஷ்குமார் ( எஸ் 2 மீடியா)

சக்தியின்[ மாளவிகா மனோஜ்] வீட்டுச் சுவற்றில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், தமிழறிஞர் ஜி.யு.போப் படங்கள். கேமரா அப்படியே ஸ்லோவாக மூவ்வாகிறது. சாமி சிலைகள் நிரம்பிய பூஜையறை, அதன் பின்  ”சக்தி இல்லையேல் சிவன் இல்லை”, சிவன் இல்லையே சக்தி இல்லை” புகழ்பெற்ற ‘திருவிளையாடல்’ படத்தின் சீன் டிவியில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீன் மூலம் தான் ‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்தின் சீனும் ஆரம்பிக்கிறது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

ஆண்பாவம் பொல்லாததுசிவன் [ ரியோராஜ்] ஜாதகத்தை ஜோசியனிடம் காண்பித்து திருப்தியாகி, தனது மகள்  சக்தி[மாளவிகா மனோஜ்]க்கேற்ற சிவாவை [ரியோ ராஜ் ] மாப்பிள்ளையாக செலக்ட் பண்ணுகிறார் அப்பா ஏ.வெங்கடேஷ். பெண்பார்க்கும் சடங்குகள், இன்னபிற வைபவங்கள் முடிந்து சக்திக்கும் சிவாவுக்கும் இனிதே திருமணம் நடைபெறுகிறது. புது ஃப்ளாட்டில் மகிழ்ச்சியாக குடியேறுகிறார்கள் இளம் தம்பதிகள். மனைவி மீது மிகவும் காதலாகி, கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார் ரியோ. “உன்னை ராணி மாதிரி பார்த்துக்குவேன். இது உன்வீடு, உன் இஷ்டப்படி இருக்கலாம்” என மாளவிகாவுக்கு பரிபூரண சுதந்திரம் கொடுக்கிறார்.

ரியோவின் இந்த ‘லவ் ஃபீல்’ ஃப்ரீடத்தை அளவுக்கு அதிகமாக அட்வாண்டேஜாக எடுத்துக் கொள்ளும் மாளவிகா, எதெற்கெடுத்தாலும் “மை சாய்ஸ்” என்கிறார். இந்த மைசாய்ஸ் தான் ஓவர் சாய்ஸாகி, இளம் ஜோடிகளுக்குள் விரிசலை ஏற்படுத்தி, ஆறே மாதத்தில் டைவர்ஸ் கேட்டு கோர்ட் படியேற வைக்கிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ஆண்பாவம் பொல்லாததுஅதன் பின் நடக்கும் சுவாரஸ்யம், மென்சோகம், லைட் செண்டிமெண்ட், உறவுகளின் மேன்மை இதான் இந்த ‘ஆண்பாவம் பொல்லாதது’. இதில் புனிதம், புடலங்கா, புண்ணாக்கு இதெல்லாம் பேசாமல் கண்டெண்டை நச்சுன்னு பேசியிருக்கு இந்தப் படம்.

ரியோவின் போட்டோவை வைத்துக் கொண்டு மாளவிகாவின் தோழிகள் அரட்டையடிக்கும் ஆரம்பக் காட்சியிலிருந்து, காமெடி, நச்சுன்னு ஒரு கருத்து, நங்குன்னு ஒரு கொட்டு என சீன்களை மாறிமாறி ஸ்கிரீனில் பளிச்சிட வைத்து யுவன்கள்-யுவதிகளை மட்டுமல்ல, அனைத்து வயதினைரையும் மனசை வசியம் பண்ணிவிட்டார்கள் டைரக்டர் கலையரசன் தங்கவேலுவும் ஸ்கிரிப்ட் ரைட்டர் சிவக்குமார் முருகேசனும். சர்க்கைரை வியாதிக்காரர்களுக்குக் கூட இந்த இனிப்பான கண்டெண்ட் ஒத்துக்கொள்ளும்னா பார்த்துக்கங்க. படத்தில் அப்படி ஒரு ஃப்ரெஷ்னெஸ்.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் இவர்களுடன் லண்டனில் பிறந்து தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் மொழியை இருபது ஆண்டுகள் ஆழ்ந்து கற்று, திருக்குறளையும் மணிவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பேராசான் ஜி.யு.போப் போட்டோவையும் காட்டிய வகையில் தனித்துவமாக நம் கண்களுக்குள்ளும் மனசுக்குள்ளும் வெகு ஆழமாக பதிந்துவிட்டார் டைரக்டர் கலையரசன் தங்கவேல்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இன்னும் வெகு சிறப்பு என்னன்னா ‘விடுதலை இல்லம்’, தோழர் பாரதி[அனுபமா குமார்] கேரக்டர் மூலம் பேசும் உண்மையான ஃபெமினிஸம், ”கணவன் காசை எடுத்து மனைவி உரிமையாக செலவழிக்கலாம், ஆனா அவனுக்கு பணிவிடை செய்தால் அது ஆணாதிக்கமா?” என்ற பொளேர் வசனம் இதெல்லாம் கலையரசனை தங்க சிம்மாசனத்தில் அமரவைக்குது நம் மனசு. இப்போது வரும் இளம் இயக்குனர்களில் பலர் இந்த சமூகத்தின் மீதும் மனிதத்தின் மீதும் அக்கறையுள்ளவர்கள் என்பதற்கான உதாரணங்களில் முக்கியமான உதாரணம் கலையரசன் தங்கவேல்.

சிவாவாக ரியோ ராஜ். படத்துக்குப் படம் நடிப்பில் வெரைட்டி காட்டி வெளுத்துக் கட்டுகிறார். பியூட்டி பார்லர் ஆரம்பிக்கப் போறேன்னு மாளவிகா மனோஜ் சொல்லும் போது தான் தம்பதிகளுக்கு உரசல் ஆரம்பித்து வெறுப்புத் தீ பற்றி எரிய ஆரம்பிக்கிறது.

ஆண்பாவம் பொல்லாதது“அடியே உன்னை பொண்ணு பார்க்க வந்தப்ப நான் ஜி.யு.போப்பான்னு கேட்டப்ப, பெரிய இவமாதிரி  காரல் மார்க்ஸ்னு சொன்னியே, அதை ஏன் சகிச்சுக்கிட்டேன் தெரியுமா? என்னை உனக்கு பிடிக்கலைன்னு சொல்லிருவியோன்னு தான். ஹனிமூனுக்கு எங்க போகலாம்னு கேட்டப்ப.. அம்பேத்கர் பிறந்த போர்பந்தர்னு சொன்னியேடி. அடியே போர்பந்தர் காந்தி பிறந்த இடம்டி” என அழுகை, ஆத்திரம், ஆற்றாமையைக் கொட்டும் சீனில் க்ளாப்ஸ் அள்ளுகிறார் ரியோ ராஜ்.

சக்தியாக மாளவிகா மனோஜ். அடேங்கப்பா…முகத்தில் அப்படி ஒரு பாந்தம், வசீகரம் மட்டுமல்ல, பெர்ஃபாமென்ஸில் பின்னிப்பெடெல் எடுத்துருச்சு பொண்ணு.

இவர்களுக்கு அடுத்து வெயிட்டானவர்னா அது ரியோவின்  வக்கீல் நாராயணனாக வரும் ஆர்.ஜே.விக்னேஸ்காந்த். தன்னிடமிருந்து டைவர்ஸ் வாங்கிய மனைவி ஷீலாவே மாளவிகாவின் வக்கீலாக வந்து நிற்பதைப் பார்த்ததும் லைட்டாக ஜெர்க்காகி, அதன் பிறகு  ரியோவுக்காக ஜெட்வேகத்தில் போடும் ப்ளான் எல்லாமே சூப்பர் ரகம். க்ளைமாக்ஸில் கோர்ட்டில் நீதிபதி அலமேலு மங்கை [திருநங்கை] முன்பு “போலியான பெண் சுதந்திரத்துக்கும் ஆணாதிக்கத்திற்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கும்மா” என உருக்கமாக வாதாடும் சீனில் விக்னேஷ்காந்த், வெற்றிகாந்தாக ஜொலிக்கிறார். இவரின் ஜூனியர் வக்கீல் சித்துவாக ஜென்சன் திவாகர் எண்ட்ரியான பிறகு தான் காமெடி களைகட்டுகிறது. அதிலும் அந்த மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பண்ணும் அதகளம், அதற்கடுத்து  டிடெக்டிவ் கேரக்டரை செம ரேக்கு ரேக்குவது சூப்பர் காமெடி ரகளை.

மியூசிக் டைரக்டர் சித்துகுமாரும் கேமராமேன் மாதேஷ் மாணிக்கமும் இந்த ‘ஆண்பாவம் பொல்லாதது’ வெல்வதற்கு ரொம்பவே துணை நிற்கிறார்கள்.

‘ஆண்பாவம் பொல்லாதது’ இளசுகளுக்கு மட்டுமல்ல, கல்யாணம் ஆன  அனைத்து வயதினருக்குமானது.

—      ஜெ.டி.ஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.