திருச்சி அறிவாளர் பேரவை புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
திருச்சி அறிவாளர் பேரவை புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சி அறிவாளர் பேரவை இருபத்தைந்தாவது ஆண்டான வெள்ளி விழா 2024 – 2025 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருவரங்கம் கிழக்கு ரங்கா நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
திருச்சி அறிவாளர் பேரவை தலைவர் சைவராஜ் தலைமை வகித்தார். திருவரங்கம் பள்ளி குழுமத்தின் செயலர் கஸ்தூரி ரங்கன் தலைமை விருந்தினராக பங்கேற்றார். அகில இந்திய மதிப்பீட்டாளர் கழக தலைவர் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். திருச்சி அறிவாளர் பேரவை மதிப்புறு ஆலோசகர் முனைவர் அசோகன் வாழ்த்துரை வழங்கினார்.
திருச்சி அறிவாளர் பேரவை 2024-2025 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் முதன்மை ஆலோசகராக முனைவர் அசோகன், தலைவராக சைவராஜ், துணைத் தலைவராக பாலசுப்பிரமணியன், முரளிதரன், செயலர் வெங்கடேசன், பொருளாளராக யோகா ஆசிரியர் விஜயகுமார் செயற்குழு உறுப்பினராக நரசிம்மன், கிருஷ்ணமூர்த்தி, சந்திரசேகரன், விஜயலட்சுமி உள்ளிட்டோர் பதவியேற்றனர். விழாவில் சிவாஜி சண்முகம், கிருஷ்ணமூர்த்தி, கார்த்திகேயன், கிரிஜா, சந்திரசேகரன், பாலசுப்ரமணியன், சுப்பு, பிரதிபன், நாகராஜன், ரகுபதி, தியாகராஜன், மகேஷ், காயத்ரி, தங்கமணி உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் முன்னதாக வெங்கடேசன் வரவேற்க, நிறைவாக யோகா ஆசிரியர் விஜயகுமார் நன்றி கூறினார்.