பஸ்ஸுக்குள் ‘அக்யூஸ்ட்’ அதிரடி சண்டை!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சச்சின் சினிமாஸ்,  ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்சன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட படம் ‘அக்யூஸ்ட்’. உதயாவின் சினிமாப் பயணத்தின் 25-வது ஆண்டில்  உருவாகி வரும் இப்படத்தில்  அஜ்மல் மற்றும் யோகி பாபு உட்பட பலர் நடிக்கிறார்கள்.. இப்படத்தை கன்னட டைரக்டர்  பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா உதயாவிற்குநாயகியாக நடிக்கிறார்.

அக்யூஸ்ட்' அதிரடி சண்டை!படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகவும் திரைக்கதையின் முக்கிய அங்கமாகவும் திகழக்கூடிய பரபரப்பான சண்டைக்காட்சி ஒன்று கடந்த ஒரு வாரமாக சென்னை பூந்தமல்லிக்கு அருகே உள்ள குத்தம்பாக்கத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. ஆக்ஷன் டைரக்டர் ஸ்டண்ட் சில்வா அதிக பொருட்செலவில் இந்த சண்டைக்காட்சியை வடிவமைத்து இயக்கி வருகிறார்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

முழுக்க பேருந்தில் நடைபெறும் இந்த சண்டைக்காட்சிக்காக  தயாரிப்பாளர்கள் சொந்தமாக பேருந்து ஒன்றை வாங்கியுள்ளனர். சுமார் 45 ஃபைட்டர்கள், 60 துணை நடிகர்கள் பஸ்ஸில் இருக்க, உதயாவும் அஜ்மலும் அதிரடி ஸ்டண்ட் காட்சியில் பங்கேற்றுள்ளனர். படத்தின் ஹை லைட்டே இந்த ஸ்டண்ட் சீன் தானாம். இதன் மேக்கிங் டீஸரை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மார்ச் 10-க்குள் மொத்தப் படப்பிடிப்பையும் நிறைவு செய்து கோடை விடுமுறைக்கு ‘அக்யூஸ்ட்’-ஐ வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

படத்தின் ஒளிப்பதி : மருதநாயகம்இசை:நரேன் பாலகுமார், எடிட்டிங் : கே.எல்.பிரவீன் , கலை இயக்கம் – ஆனந்த் மணி, பி.ஆர்.ஓ:  நிகில் முருகன்.

 

—  மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.