ஏஜிஎஸ்.சின் 28-ஆவது படத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன்!
மெகா ஹிட்டான ‘டிராகன்’ படத்திற்குப் பிறகு தனது 28-ஆவது படத்தை ஆக்ஷன் கிங் அர்ஜுனை வைத்து தயாரிக்கிறது ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம். டைரக்டர் பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குனராக சுபாஷ் கே.ராஜ் என்பவரை இப்படத்தின் மூலம் இயக்குனராக்கியுள்ளது ஏஜிஎஸ்.
படத்தில் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா, பாலாஜி ஹசன் ஆகியோர் நடிக்கின்றனர். ‘கே.ஜி.எஃப்’ புகழ் மியூசிக் டைரக்டர் ரவி பஸ்ரூர் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு :அருண் ராதாகிருஷ்ணன், எடிட்டிங் : பிரதீப் ராகவ், ஸ்டண்ட் : பீனிக்ஸ் பிரபு, ஆர்ட் டைரக்டர் : வீரமணி கணேசன், பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்.
கல்பாத்தி அகோகரம், எஸ்.கணேஷ், எஸ்.சுரேஷ் என அண்ணன் –தம்பிகள் தயாரிக்கும் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : அர்ச்சனா கல்பாத்தி, இணைத் தயாரிப்பாளர் : ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாகத் தயாரிப்பாளர் ; வெங்கட் மாணிக்கம்.
நேற்று [ 20-ஆம் தேதி ] படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.
— மதுரை மாறன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.