எப்பவுமே நட்பு தான் காதலாக இருக்கும், காதல் நட்பாக இருக்காது – கல்லூரி விழாவில் நடிகர் சசிகுமார்
எப்பவுமே நட்பு தான் காதலாக இருக்கும் காதல் நட்பாக இருக்காது, குத்துனது நண்பனா இருந்தா செத்தா கூட சொல்ல கூடாது. எனவே நட்பை விட்டு விடாதீர்கள் – திரைப்பட நடிகர் சசிகுமார் கல்லூரி மாணவர்களுடன் கலகல உரையாடல்.
மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் திரைப்பட நடிகர் சசிகுமார் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசினார். மாணவர்கள் சசிகுமாரை கண்டு உற்சாக வரவேற்பு அளித்தனா். அதனை தொடர்ந்து அவர் மாணவர் மத்தியில் பேசினார் பின்னர் மாணவர்கள் அவரிடம் சில கேள்விகளை கேட்டனர்.
மாணவர்கள் மத்தியில் நடிகர் சசிகுமார் பேசும்போது….
மேடையில் பேச வேண்டும் என்பதால் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை அதுவும் கல்லூரிக்கு செல்லும் போது மாணவர்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டும். அதனால் கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்ப்பேன். என்னை இங்கு அழைத்துக்கொண்டு வரவில்லை இழுத்துட்டு வந்து இருக்காங்க. கல்லூரிக்கு பக்கத்து ஊரு தான் எனது வீடு அடிக்கடி இந்த வழியை செல்வேன் இவ்வளவு பெரிய கல்லூரி இருக்கின்றது இப்பொழுது தான் தெரிகிறது.
நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே அதற்காக தான் இங்கு வந்துள்ளேன். எனக்காக இதை பண்ணுங்கள் என்று நண்பன் கேட்டதால் இங்கு வந்துள்ளேன் நண்பன் கேட்டால் உயிரை கொடுப்போம்.
நட்பை விட்டு விடாதீர்கள். நான் நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவன் குத்துனது நண்பனா இருந்தாலும் செத்தா கூட சொல்ல கூடாது.
நானும் போடிங் ஸ்கூல்ல தான் படித்தேன் அங்கு மதம் ஜாதி எதுவும் இருக்காது. என்னோடு சிறுவயதில் பழகிய நண்பர்கள் தான் எப்போதும் என்னுடன் இருக்கிறார்கள்.
நான் பண்ண அயோத்தி திரைப்படம் மனிதத்தை பேசும் மொழி , மதம் , ஜாதிகளை கடந்து நம்மளுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் உதவ கூடாது தெரியாதவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற கருத்துள்ள படம் மனிதம் நமக்குள்ளே என்றும் இருக்க வேண்டும்.
எனக்கு பிடித்த டயலாக் குத்துனது நண்பனா இருந்தா செத்தா கூட சொல்ல கூடாது. அயோத்தி படத்தில் நடித்த பிற்பாடு இறந்த உடல்களை சாலையிலோ செல்லும் வழியிலோ பார்க்கும் போது அந்த ஆன்மாவுக்காக ஒரு நிமிடம் பிராத்திக்க வேண்டும் என்கிற பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சுப்ரமணியபுரத்தை போல தான் அடுத்து ஒரு படம் பண்ண போகிறேன். குற்ற பரம்பரையில் அனுராக் கியஷப் நடிக்க இருக்கிறார். அவர் கதையை கேட்காமல் உங்கள் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று கூறி நடிக்க இருக்கிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
காதலா நட்பா என்ற கேள்விக்கு —? எப்பவுமே நட்பு தான் காதலாக இருக்கும் காதல் நட்பாக இருக்காது.
விட்டா என்ன உங்க காதலியுடன் சேர்த்து வைக்க சொல்லுவீங்க போல இப்பதான் உங்களை படிங்கன்னு அட்வைஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன் அதெல்லாம் படம் ரெண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. நன்றாக படியுங்கள், வாழ்கையில் வெற்றி பெறுங்கள் என்று கூறினார்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.