இசை ஆல்பம் மூலம் இயக்குநராகவும் தடம் பதித்துள்ள நடிகர் ஷாம் !
தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களாக தனக்கென ஒரு அடையாளத்தை தக்கவைத்திருப்பவர் நடிகர் ஷாம். தற்போது முதன் முறையாக ஆல்பம் தயாரிப்பில் இறங்கி, ‘வரும் வெற்றி’ என்கிற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளதன் மூலம் ஒரு இயக்குநராகவும் தடம் பதித்துள்ளார் ஷாம்.
SIR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இந்த இசை ஆல்பத்தில், ஷாமுடன் நடிகை நிரா இணைந்து நடித்துள்ளார்.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் கிச்சா சுதீப் இப்பாடலை பாடியுள்ளது இந்த ஆல்பத்தின் ஹைலைட்.
பிரபலமான டி சீரிஸ் நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது.
தொழில் நுட்பக் கலைஞர்கள்
ஒளிப்பதிவு: கே.ஏ..சக்திவேல்,
இசை : அம்ரீஷ்
படத்தொகுப்பு ; லாரன்ஸ் கிஷோர் ,
நடனம்: ஸ்ரீதர்
பாடல் : ஜெகன்
கலை: வி.ஆர் ராஜவேல்,
ஆடை வடிவமைப்பு: நிரா ,
ஒப்பனை: வீரசேகர்,
மக்கள் தொடர்பு: ஏ.ஜான்
— ஜெ.டி.ஆர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.