யூடியூப் புரோக்கர்கள் அம்பலப்படுத்திய நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு !
பராசக்தி ஆடியோ லாஞ்சில் சிவகார்த்திகேயனின் பேச்சைக் கேட்டேன். அருமை முதல்முறை விஜய்க்காக பராசக்தி ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது, அடுத்தமுறை தற்போது ஜனவரி 10 ம் தேதி வேறு வழியில்லாமல் பராசக்தி படம் ரிலீசாவது பற்றி பேசினார். ஒவ்வொரு முறையும் விஜய் தரப்பில் கலந்து பேசிதான் பராசக்தி ரிலீஸ் தேதியை முடிவு செய்திருக்கிறார்கள்.
விஜயும் இணக்கமாக பேசி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இரண்டு படமும் ஒரே நேரத்தில் ரிலீசாவதில் விஜய் தரப்பிற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிகிறது. விஜயின் ஜனநாயகனுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்பதில் சிவகார்த்திகேயன் தெளிவாக இருந்திருக்கிறார். தன் ரசிகர்கர்களிடம் முதல்நாள் ஜனநாயகனை கொண்டாடிவிட்டு மறுநாள் பராசக்தி பார்க்க வாருங்கள் என்கிறார்.
அரங்கம் அதிர்கிறது. சிவகார்த்திகேயனின் பெருந்தன்மை வியக்க வைக்கிறது. விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே நல்ல நட்பு இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. பிஸ்மி வலைபேச்சு அந்தணண் போன்ற புரோக்கர்கள்கள் விஜய் ரசிகர்களை தூண்டிவிட்டு குளிர்காய்கிறார்கள். அப்பாவி ரசிகர்களும் இவர்கள் நரித்தனம் புரியாமல் வலையில் சிக்குகிறார்கள். புரோக்கர்களை கண்டு கொள்ளாமல் அந்தக்காலம் போல எல்லா படத்தையும் பார்த்து ஜாலியா இருங்க தம்பிகளா. படத்தையும் அரசியலையும் போட்டு குழப்பிக்காதீங்க!
— சுந்தர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.