முதல்வர் பற்றி விஜய் வைத்த விமர்சனம் ! நடிகர் சூரி கொடுத்த பதில் !
நடிகர் சூரி தனது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து திரும்பி வரும் பொழுது சூரியை பார்த்த ரசிகர்கள் சூரியை சூழ்ந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து செல்பி எடுத்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சூரி பேசியபோது, “ எல்லாருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் இன்று எனக்கும் என் தம்பிக்கும் பிறந்தநாள் ராமன் லட்சுமணன் நானும் என் தம்பியும் இரட்டை பிறவிகள் ராமன் என்ற பெயர் சூரியாக மாரியிருக்கு.
அம்மன் உணவகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொன்னால் அதற்கு எல்லாரும் சூரி என்று சொல்வார்கள். அது கிடையாது அம்மன் உணவகம் வளர்ச்சிக்கு எனது தம்பிகள் அண்ணன்கள் தான் முழு காரணம். அம்மன் உணவகத்தால் தான் எனக்கு பெருமை. மாமன் படப்பிடிப்புக்கு பிறகு அடுத்த படம் மண்டாடி படம் பிடிப்பு நடைபெற்று வருகிறது. வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு எப்படியோ அதே போல் கடலில் போட் ரேசிங் கடலில் வீர விளையாட்டான மண்டாடி படம் வரும்போது நிறைய விஷயம் தெரிய வரும்.
திரைப்படத்தில் காமெடி நடிகர்கள் குறைந்து வருகிறார்கள் குறித்த கேள்விக்கு, “திரையில் காமெடிகள் நல்லா போய்க் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து எல்லாரும் வர வேண்டும். அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். எனக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கீங்க. நல்லா வந்திருக்கேன். அதேபோல் அனைவருக்கும் வாய்ப்பு கொடுங்கள்.” என்றார்.
தொடர்ந்து, விஜய் மாநாட்டில் முதல்வர் குறித்த விமர்சனம் தொடர்பான கேள்விக்கு, “இதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும் எல்லாருக்கும் எல்லாரும் வேண்டும். நல்லவிதமாக அரசியலை தாண்டி எல்லாரும் எல்லாத்தையும் மதிக்க வேண்டும்.
இன்னைக்கு விஜய் ஒதுங்கி அரசியல் போயிருக்கார். அடுத்து திருப்பி வரலாம். அனைவருக்கும் விஜய் பிடிக்கும். எனக்கும் அவரை பிடிக்கும். என்னையும் அவருக்கு பிடிக்கும். அரசியல் செல்வது அவருடைய விருப்பம்” என்று தெரிவித்தார்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.