திரை வேறு ; தரை வேறு ! செய்தது, செய்திருக்க கூடாதது ? விஜய் அரசியல் !
திரை வேறு ; தரை வேறு !
செய்தது, செய்திருக்க கூடாதது?
செய்தது ।
‘பிறப்பொக்கும்’ என்ற குறளினை முன்னிலைப் படுத்தியிருப்பதும்; தனது அரசியல் சாதி- மத வேறுபாடுகளுக்கு எதிராக இருக்கும் என அறிவித்திருப்பதும்.
மதிப்பு உச்சத்திலுள்ள போதே, நடிப்பினை விடுத்து அரசியலுக்கு வருவது.
சோதிட நம்பிக்கைகளைப் புறந் தள்ளி (பிப்ரவரி 2 ,தேய்பிறை, அசுடமி..) கட்சியின் பெயரினை அறிவித்திருப்பது.
செய்திருக்கக் கூடாதது ?
“தமிழக வாழ்வுரிமைக் கட்சி
TVK” , ‘விஜயின் தமிழக வெற்றி கழகம் பெயரும் TVK” . குழப்பத்திற்கு இடமளித்தது
தமிழ்நாடு ‘தமிழகம்’ என்றொரு அரசியல் சண்டை கொஞ்ச நாள்களுக்கு முன் நடைபெற்றிருந்த வேளையில், ‘தமிழ்நாடு’ என்ற சொல்லினை விடுத்து, ‘தமிழக’ என்பதனைக் கட்சிப் பெயரில் முன்னொட்டாக வைத்தது
‘க்’ விடுபட்டுள்ளமையினை விட இது தமிழர்களின் கண்களை உறுத்துகிறது
‘கலை உரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும் கண் மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப் போக – வள்ளலார்.
வள்ளலாரின் மேலுள்ள கூற்று, போலவே “தரை வேறு திரை வேறு” என்ற உண்மையினை உணர்ந்து, கட்சியானது கொள்கைகளை வகுத்து , மக்கள் நலன் சார்ந்து இயங்கினால் ‘நாளைய தீர்ப்பு’ நலமாகலாம்.
நலமாக அமைய வாழ்த்துகிறது “அங்குசம் செய்தி”