அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

24 சாதி – 167 வேட்பாளர்கள் – அதிமுகவில் எந்த சாதிக்கு எத்தனை சீட் ?

திருச்சியில் அடகு நகையை விற்க

2026- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில்  173 தொகுதிகளில் வேட்பாளர்கள்  போட்டியிடுகின்றனர் .

இதில், அதிமுக மட்டும் நேரடியாக 167 தொகுதிகளில் போட்டியிடுறது. மேலும், ஜான் பாண்டியன்-1, ஜெகன் மூர்த்தி -1,  பொற்கொடி ஆம்ஸ்ஸ்ட்ராங் -1,  புதிய நீதி கட்சி சேர்ந்த நடிகர் சுந்தர் சி -1, பாரிவேந்தரின்  ஐ ஜே கே -2 – ஆகிய 6 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அதிமுக வேட்பாளர்களில், 50 பேர் புதுமுக வேட்பாளர்கள். இவர்களில், மாவட்ட கழக செயலாளர் -1 ( தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் ஒரத்தநாடு எம். சேகர்); ஒன்றிய செயலாளர்கள்-12 பேர் ;  மகளிர் அணியினர் 7 பேர்];  முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர்கள்-2 பேர்; நகர செயலாளர்கள் -1;  பேரூர் செயலாளர்-1; பகுதி செயலாளர் -1 ஆகியோர் களமிறங்குகிறார்கள்.

அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட 167 வேட்பாளர்களில் 24 சாதியை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

1) வெள்ளாளக் கவுண்டர் :

போட்டியிடும் 23 பேரில் 1) அந்தியூர் -பி. ஹரி பாஸ்கர்; 2) கோபி -விபி பிரபு ; 3) திருச்செங்கோடு- SMRT. சந்திரசேகர்; 4) ஈரோடு கிழக்கு – R. மனோகர்; 5) அரவக்குறிச்சி -MRK. செல்வகுமார்; 6) பாப்பிரெட்டிப்பட்டி -S. R. மரகதம்  வெற்றி வேல் ஆகிய  6 பேர் புதுமுகம்.

2) வன்னியர் :

22  பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில், 1) பண்ருட்டி-  கே மோகன்; 2) வீரபாண்டி- ஜி பாலாஜி குமார் ; 3) பா பாபநாசம் – டாக்டர் D. சண்முக பிரபு ஆகிய மூவரும் புதிய முகங்கள்.

3) பறையர்  :

வன்னியருக்கு நிகராக 22 பேருக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறது. இதில், 1) செய்யூர்ங – இ. ராஜசேகர்; 2) எழும்பூர் – ர. அபிஷேக்; 3) வந்தவாசி –  பி ராணி ; 4) வானூர் –  பி முருகன்; 5) கள்ளக்குறிச்சி –  எஸ் ராஜீவ் காந்தி ;  6) வால்பாறை –  டி லட்சுமண சிங்;  7) செங்கம்  டி எஸ் வேலு (முன்னாள் அதிமுக எம்எல்ஏ  டி சாமிக்கண்ணு  மகன்) ஆகிய 7 பேர் புதுமுகம்.

4) நாயுடு : 

13 பேர் போட்டியிடுயிடுகிறார்கள். இதில், 1) கும்மிடிப்பூண்டி – வி சுதாகர் ;2) போடி-  வி. டி. நாராயணசாமி  ஆகிய 2 பேர் புதுமுகங்கள்.

5) கள்ளர்  :

12 பேர் போட்டியிடும் நிலையில், 1) மதுரை கிழக்கு – K. மகேந்திரன்; 2) ஒரத்தநாடு –  M. சேகர் ஆகியோர் புதுமுகங்களாக களமிறங்குகிறார்கள்.

6) முதலியார்  :

10 பேர்  போட்டியிடும் நிலையில், 1) சங்கராபுரம் –  ஆர் ராகேஷ் ; 2) வில்லிவாக்கம் –  எஸ் ஆர் விஜயகுமார்  Ex. Mp ஆகியோர் புது முகங்கள்.

 7) மறவர் :

9 பேர்  போட்டியிடுகிறார்கள். இதில், 1) விருதுநகர் –  வி ஜி கணேசன்  மட்டும் புதுமுகம்.

 8) தேவேந்திர குல வேளாளர் :

9 பேர்  போட்டியிடும் நிலையில், 1) சங்கரன்கோவில்- DR. திலீபன் ஜெய்சங்கர்; 2) திருத்துறைப்பூண்டி – U. பால தண்டாயுதம் ; 3) கிருஷ்ணராயபுரம் – S. திவ்யா; 4) தாராபுரம் –  பி சத்தியபாமா  ஆகிய 4 பேர் புதுமுகங்கள்.

9) நாடார் : 

5 பேர் போட்டியிடுகிறார்கள். இதில், 1) ஆம்பூர்- R. வெங்கடேசன்; 2) ஆலங்குளம் – KRP. பிரபாகரன்Ex. MP ஆகிய  2 பேர் புதுமுகங்கள்.

10) யாதவர் : 

5 பேர்  போட்டியிடும் நிலையில், 1) கொளத்தூர் –  பி சந்தான பாரதி Ex. MC; 2) மற்றும் ஆலந்தூர் – S. சரவணன் Ex. MC ஆகியோர் புதுமுகங்கள்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

11) உடையார் : 

5 பேர் போட்டியிடுகிறார்கள்.  இதில் 1) லால்குடி – லீமா ரோஸ்   ( கிறிஸ்தவ உடையார் ; 2) திருக்கோவிலூர்  டி எஸ் பழனி;  3) விழுப்புரம்  கே விஜயா  ஆகியோர் புதுமுகங்கள்.

12) துளுவ வெள்ளாளர் /  பிள்ளைமார் /  சோழிய வெள்ளாளர் : 

5 பேர் போட்டியிடும் நிலையில், 1) ஆத்தூர் –  ஏ விஸ்வநாதன்  ( வெள்ளாளர்) ; 2) திருச்சி கிழக்கு- க ராஜசேகரன்  ஆகிய இருவர் புதுமுகங்கள்.

 13) முத்தரையர் :

5 பேர் போட்டியிடும் நிலையில், 1) பேராவூரணி  கோவி. இளங்கோ;  2) குளித்தலை எஸ் கருணாகரன்;  3) முசிறி எ யோகநாதன்; 4) ஆலங்குடி –  தன. விமல்  ஆகிய புதுமுகங்கள் நான்கு பேரும் ஒன்றிய செயலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 14) செட்டியார் : 

4 பேர்  போட்டியிடும் நிலையில், 1) அருப்புக்கோட்டை – சோலை எஸ் சேதுபதி ;  2) சேலம் தெற்கு டி வினோத் ஆகிய இருவர் புதுமுகங்கள்.

 15) ஒக்காலிக்காக கவுடா : 

3 பேர் போட்டியிடுகிறார்கள்.

16) மீனவர் :  

3 பேர் போட்டியிடும் நிலையில்,  1) குறிஞ்சிப்பாடி- ஏ. புவனேந்திரன் ;  2) திருவொற்றியூர் –  கார்த்திக் குப்பன் (முன்னாள் எம்எல்ஏ, மற்றும் திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளரின் மகன்) ஆகிய இருவரும் புதுமுகங்கள்.

17)பழங்குடியினர் :  

2 பேர் போட்டியிடும் நிலையில்,  1) ஏற்காடு( எஸ் டி ) –  பி உஷாராணி புதிய முகம்.

 18) அருந்ததியர் :

2 பேர் போட்டியிடும் நிலையில், 1) துறையூர்- இ. சரோஜா  புதிய முகம்.

 19) ரெட்டியார் :  

போட்டியிடும் 2 பேரில்  விளாத்திகுளம் – ஆர்.சத்யா  புதுமுகம்.

 20) ஆசாரி:  ஒருவர் போட்டி.

 22) ஊராளி கவுண்டர் : 

போட்டியிடும் ஒரே வேட்பாளரான  மணப்பாறை  பி எல் விஜயகுமார் புதிய முகம்.

 23) இஸ்லாமியர் : போட்டியிடும் பாளையங்கோட்டை எஸ் சையது சுல்தான் புதிய முகம்.

 24) படுகர் :  ஒருவர் போட்டி.

 

—    அங்குசம் தேர்தல் செய்திக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.