அமெரிக்காவில் அட்வான்ஸ் புக்கிங்கில் சாதனை படைத்த ‘கோட்’
அமெரிக்காவில் அட்வான்ஸ் புக்கிங்கில் சாதனை படைத்த ‘கோட்’ அமெரிக்காவின் முன்னணி பட வெளியீட்டு நிறுவனம் ஹம்சினி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட். தென்னிந்திய மொழியின் முன்னணி ஹீரோக்களின் பிரம்மாண்ட படங்கள் அனைத்தையும் இந்நிறுவனம் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகமெங்கும் வெளியிட்டு வருகிறது.
இதுவரையிலும் 140 படங்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. முன்னதாக ‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’ போன்ற விஜய்யின் பிளாக்பஸ்டர் படங்களை அமெரிக்காவிலும், ‘லியோ’ படத்தினை ஐரோப்பிவிலும் வெளியிட்ட இந்நிறுவனம் தற்போது, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘கோட்’ படத்தை வட அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுதும் வெளியிடுகிறது.
இதுவரை இல்லாத அளவினில், இப்படத்தினை அமெரிக்காவில் 650 இடங்களில் 1700 திரைகளில் ரிலீஸ் பண்ணுகிறது ஹம்சினி. நேற்று முன்தினம் அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பித்த பின் இதற்கு முந்தைய சாதனைகளை முறியடித்து வருகிறதாம் ‘கோட்’. ஓவர்சீஸ் வெளியீட்டில் இன்னும் பல சாதனைகளை ‘கோட்’ முறியடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.