மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசிற்கு எதிராக அனைத்துக் கட்சிகளை ஒன்றிணைத்து போராட்டம் – பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உரை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசிற்கு எதிராக அனைத்துக் கட்சிகளை ஒன்றிணைத்து போராட்டம் நடைபெறும் திருச்சி வரவேற்பு நிகழ்வில் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உரை

‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்னும் குறிக்கோளைத் தாங்கி 33ஆம் ஆண்டு காலம் தமிழ்ப் பரப்புரையைக் கன்னியாகுமரியில் தொடங்கி சென்னையில் 90 வயது நிறைவுடைந்த பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் முடிக்கிறார். இதற்கிடையில் 17.02.2025ஆம் நாள் திருச்சிக்கு வருகை தந்தார். வா.மு.சேதுராமன் தலைமையில் வருகை தந்த பரப்புரைக் குழுவிற்கு திருச்சியில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், பைந்தமிழியக்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டத் தமிழ் அமைப்புகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 6 மணிக்குச் சத்திரம் பேருந்துநிலையம் அருகில் உள்ள சித்திரா விடுதியில் உள்ள தமிழ்ப் புரவலர் தங்கவேலனார் அரங்கில் பாராட்டு விழாவும் நடைபெற்றது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

இப்பாராட்டுவிழாவிற்கு முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி தலைமை தாங்கினார். பைந்தமிழ் இயக்குநர் புலவர் பழ.தமிழாளன் வரவேற்புரையாற்றினார். மணப்பாறை சௌமா கல்விக் குழுமம் தாளாளர் அரிமா சௌமா.இராசரத்தினம் முன்னிலை வகித்து பாராட்டு உரையாற்றினார். தொடர்ந்து தமிழ்ச் செம்மல் நாவை சிவம், தமிழ்ச்செம்மல் வீ.கோவிந்தசாமி, வழக்கறிஞர் கென்னடி, வெல்லமண்டி இராமலிங்கம், பாவலர் மாரிமுத்து, பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்.

பாராட்டுரை வழங்கிய பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் உரையில்,“90 அகவை நிறைந்த பெருங்கவிக்கோ ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்னும் உயரிய குறிக்கோளுடன் கன்னியாகுமரி தொடங்கி ஆண்டு தோறும் பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த ஆண்டு 33 ஆண்டுகள் நிறைவு அடைக்கின்றது என்றால் பெருங்கவிக்கோவின் பரப்புரைக்கு நாம் உறுதுணையாக இருக்கிறோம் என்பதன் அடிப்படையில்தான் திருச்சி மாநகரில் பாராட்டு விழா நடைபெறுகின்றது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

முனைவர் தி.நெடுஞ்செழியன்
முனைவர் தி.நெடுஞ்செழியன்

பாராட்டு விழா நடைபெறுகின்ற இந்த வேளையில், பெருங்கவிக்கோவிற்கு ஒரு வேண்டுகோளை வைக்கின்றோம். ஒன்றிய அரசு தொடர்ந்து மாநில அரசை வஞ்சித்து வருகின்றது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக மாணவர்கள், ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மாநில நிதி உதவியோடு நடைபெறும் பல்கலைக்கழகங்களில் வேந்தராக உள்ள ஆளுநருக்கு அதிக அதிகாரங்களை வழங்கி பல்கலைக்கழக மானியக் குழு வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் மாநில பல்கலைக்கழகங்களை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே இந்த வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தான் நினைக்கும் இந்தி, சமஸ்கிருத மொழியைப் பல்கலைக்கழங்கள் வழியாக இணைவு பெற்ற கல்லூரிகளில் எளிமையாக திணித்துவிடும் பேராபத்து உள்ளது.

அடுத்து, ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் தமிழ்நாட்டுக் கல்விக்காக கொடுக்க வேண்டிய சுமார் 2000 கோடியைக் கொடுக்க மறுக்கின்றது. ஒன்றிய அரசின் தேசியக் கல்வியை ஏற்றுக்கொண்டு, இந்தியை மூன்றாவது மொழியாகக் கற்பித்தால்தான் கல்வித் தொகை வழங்கப்படும். ஏற்க மறுத்தால் கல்வித் தொகை வழங்கமுடியாது என்பதில் ஒன்றிய அரசு உறுதியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இத்தனைக்கும் கல்வி தற்போது பொதுப்பட்டியலில் உள்ளது. மாநில அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் வரைவு அறிக்கையை வெளியிட்டு மக்களிடம் கருத்துகேட்கிற அவலம் தொடர்கின்றது. மீண்டும் மொழிப்போரை ஒன்றிய அரசு தொடங்கி வைக்கின்றது என்று மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

1938ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு முதல் போர் தொடங்கியபோது, திருச்சி உறையூரிலிருந்து இந்தி எதிர்ப்பு பேரணி சென்னையை நோக்கி நடைபெற்றது என்ற வரலாறு திருச்சிக்கு மட்டுமே உரியது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை வலியுறுத்தி பரப்புரை மேற்கொண்டுள்ள பெருங்கவிக்கோ அதே திருச்சியில், மாநில உரிமையைப் பறிக்கும், இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து, அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழ் நாட்டு மக்களின் போராட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் முடிந்தால் பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவேண்டும் என்று திருச்சி தமிழ் அமைப்புகள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

இதற்குப் பதில் அளித்து உரையாற்றிய பெருங்கவிக்கோ,“இங்கே உரையாற்றிய திருச்சி தூய வளனார் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் நெடுஞ்செழியன், மாநில உரிமையைப் பறிக்கும், இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து, அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழ் நாட்டு மக்களின் போராட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் முடிந்தால் பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

ஈழத்தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டபோது, அனைத்துக்கட்சிகளையும் திரட்டி பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் பல போராட்டங்களை நடத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளோம். தமிழ், தமிழ் மக்களுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் நான் எதிர்த்து நிற்பேன். நான் யாருக்கும் அஞ்சமாட்டேன். தற்போது ஒன்றிய அரசு மாநில அரசை வஞ்சித்து வருகின்றது. இந்தியைத் திணிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது.

கல்வித் தொகையை விடுவிக்க மறுக்கின்றது என்பதன் மூலம் ஒன்றிய அரசு தமிழ்நாட்டு அரசை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதை ஏற்க முடியாது. பரப்புரை இன்னும் சில நாள்களில் சென்னையில் நிறைவுறும். அதன் பின் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் சந்தித்து, ஆலோசனை செய்து விரைவில் ஒன்றிய அரசுக்கு எதிராக பன்னாட்டு தமிழுறவு மன்றம் ஒரு பெரும் போராட்டத்தை நடத்தும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத் தமிழ் அமைப்புகள் சார்பில் தமிழியன் நன்றி கூறினார். திருச்சியில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் பொன்னாடை, பயனடைகள் அணிவிக்கப்பட்டு பெருங்கவிக்கோ சிறப்பிக்கப்பட்டார்.

 

—  ஆதவன்.

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.