பாலைய்யாவின் ‘அகண்டா-2 தாண்டவம்’ டப்பிங்!
தெலுங்கு சினிமாவின் தடாலடி ஹீரோ பாலகிருஷ்ணாவின் ஃபேவரைட் அதிரிபுதிரி டைரக்டர் போயபட்டி ஸ்ரீனு காம்போவின் நான்காவது படம் ‘அகண்டா-2 தாண்டவம். ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா, போயபட்டி ஸ்ரீனு, 14 ரீல்ஸ் ப்ளஸ், நந்தமூரி தேஜஸ்வனி என ஐந்து பேர் இணைந்து தயாரித்துள்ள இந்த மெகா பட்ஜெட் படம் வரும் செப்டம்பர். 25—ஆம் தேதி ரிலீசாவதால் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது ஷூட்டிங். இதுவரை ஷூட்டிங் முடிந்த போர்ஷன்களுக்கான டப்பிங் பணிகள் ஹைதரபாத்தில் ஆரம்பமாகியுள்ளன.
‘அகண்டா-2’வில் சம்யுக்தா, ஆதி பினிஷெட்டி, ஹர்ஷாலி மல்ஹோத்ரா உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு ; சி.ராம் பிரசாத், இசை: எஸ்.தமன், எடிட்டிங் : தம்மி ராஜு, ஆர்ட் டைரக்டர் : ஏ.எஸ்.பிரகாஷ், ஸ்டண்ட் : ராம்—லக்ஷ்மண், பி.ஆர்.ஓ : யுவராஜ்.
— மதுரை மாறன்