அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

விவசாயமும் தொழில் முனைவும் சங்கமிக்கும் சேவை களஞ்சியம் மையம் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

பெண்களின் முன்னேற்றத்துக்கான சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்காக, தமிழக அரசின் விருதை பெற்ற திருச்சியை சேர்ந்த சேவை (SEVAI) நிறுவனத்தின், களச் செயற்பாடுகளுள் குறிப்பிடத்தக்கது சேவை களஞ்சியம் மையம்.
சேவை களஞ்சியம் மையத்தில், விவசாயத்தோடு பிணைந்த தொழில் முனைவு திட்டங்களுக்கு முன்னுரிமை தருகிறார்கள். இயற்கை விவசாய அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட நெல் சாகுபடி, மரம் மற்றும் விறகுக்கான மரத்தோட்டங்களை ஊக்குவித்தல், மற்றும் மா, கொய்யா, பப்பாளி போன்ற பழ மரத் தோட்டங்களை பயிரிடுவதற்கான பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதன்வழியே, உள்ளூர் வளங்களை சந்தைப்படுத்தக்கூடிய பொருட்களாக மாற்றும் நேரடி வாழ்வாதார அலகுகளையும் நடத்துகிறார்கள். இதுதவிர, ஆயத்த ஆடைகள் உற்பத்தி, கோரைப்புல் பாய் நெசவு, பயோஃப்ளாக் மற்றும் குளத்து மீன் வளர்ப்பு, மற்றும் காளான் வளர்ப்பு ஆகியவற்றில் பெண்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்கள். இதைத் தொடர்ந்து காளான் சூப் மற்றும் குக்கீஸ் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களையும் உற்பத்தி செய்து, சந்தைப்படுத்தி வருகிறார்கள்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

இதில் உறுப்பினர்களின் தொழில்நுட்பத் திறன்கள், நிதி எழுத்தறிவு மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றைக் கற்றுக்கொள்கிறார்கள். விவசாயம், திறன் மேம்பாடு மற்றும் கூட்டு நடவடிக்கை ஆகியவற்றையும் சேர்த்தே கற்றுக்கொள்ளும் வகையில், சுய உதவிக் குழுக்களுக்கான பெண்கள் மேம்பாட்டுத் திட்டங்களுள் ஒன்றாக இதை வளர்த்தெடுத்து வருகிறார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.