அங்குசம் சேனலில் இணைய

தலைமையை நம்பி அதிமுக இல்லை தொண்டர்ளை நம்பியே உள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தலைமையை நம்பி அதிமுக இல்லை தொண்டர்ளை நம்பியே உள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக 50வது பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடுவது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், எம்.ஜி.ஆர் ரசிகன் நான் அமைச்சராக இருந்தேன் என்பதில் பெருமையாக உள்ளது. என் உயிர் மூச்சு உள்ளவரை கட்சிக்காக உழைப்பேன்.அதிமுக கரை கொண்ட வேஷ்டி தான் சாகும் போதும் என் உடலில் இருக்கும்.

அதிமுகவின் லட்சிய தொண்டனாக இருப்பேன். அதிமுக ஆளுங்கட்சியாக, எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒன்று தான். காரில் போகும் போது தான் நான் அமைச்சர்.காரை விட்டு இறங்கினால் சாதாரண தொண்டன் தான். மக்களின், தொண்டர்களின் அன்பு, ஆசை காரணமாக தான் பத்தாண்டு காலமாக அமைச்சராக இருந்தேன்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

நாக்கில் பல்லை போட்டு பேச முடியாத அளவுக்கு, யாருமே குறை சொல்ல முடியாத அளவுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தவன். அமைச்சராக இருந்த போதும் என்றும் என் நிலையை மாற்றி கொண்டதில்லை. கூட்டுறவுத் துறையில் பத்தாண்டு காலமாக பல தவறுகளை களைந்து, அமைச்சராக இருந்தேன். கூட்டுறவுத்துறையை மேம்படுத்த சிந்தித்து செயலாற்றியவன். என்னை பற்றி யார் என்ன சொன்னலும் நான் கவலைப்படுவதில்லை.

119 பழமையான கூட்டுறவுத்துறையில் நான் அமைச்சரான பிறகு 28 விருதுகளை பெற்றுள்ளேன். மதுரைக்கு ராஜூ நீ தான் இறுதி வரை மாவட்ட செயலாளர் என ஜெயலலிதா கூறினார். கோபபடக்கூடாது என ஜெயலலிதா எனக்கு அறிவுரை கூறி பக்குவப்படுத்தினர். திராவிட இயக்கத்தில் அதிகளவு தியாகம் புரிந்த இயக்கம் அதிமுக. கலைஞரையே விரல் விட்டு ஆட்டியவன் புரட்சி தலைவன் தொண்டன். நாம் சாதாரணமானவர்கள் அல்ல.

50 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது அதிமுக. அதிமுகவில் மட்டுமே ஜனநாயகம் உள்ளது. திமுகவில் ஜனநாயகமே இருந்தது கிடையாது. திமுக என்ற கட்சி கருணாநிதி குடும்ப கட்சி. திமுகவில் தலைவர் பதவி, முதலமைச்சர் பதவி கருணாநிதி குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமானது. ஆனால் அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதல்வராகலாம். அதற்கு எடுத்துக்காட்டு தான் இபிஎஸ்- ஒபிஎஸ்.

அதிமுகவை சாதாரணமாக நினைத்து விட கூடாது . ஒரு காலத்தில் கட்சியில் பதவிக்கு வர வேண்டுமானால் எத்தனை தியாகங்களை செய்ய வேண்டும் தெரியுமா? இன்று வரலாறு மாறி உள்ளது. இன்றைக்கு சில மாற்றங்களை செய்ய வேண்டியதும், கட்சியை வளர்க்க வேண்டியதும் அவசியமாக உள்ளது. கட்சிக்கு அதிகமான இளைஞர்ளை கொண்டு வரவேண்டும் என்றால் இளைஞர்களுக்கு புதிய பதவி, புதிய பொறுப்புகள் கொடுக்க வேண்டும்.

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவபடிப்பு கனவு கனமாக இருக்க கூடாது எளிதாக இருக்க வேண்டும் என 7.5 தவீத இட ஒதுக்கீடு எடப்பாடியார் கொடுத்தார். எந்த திட்டமும் திமுக ஆட்சியில் கொண்டு வந்து அமல்படுத்தியதாக வரலாறு இல்லை. அதிமுக ஆட்சியிலும் கட்சியிலும் சாதாரணமானவர்கள் உயரமான இடத்திற்கு வரலாம். அதிமுகவை விட்டு ஓடியவர்களை பற்றி கவலையே கிடையாது.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

இன்று திமுகவை நிமிர்த்தி வைத்திருக்கிறார்கள் என்றால் அது அதிமுகவிலிருந்து சென்றவர்கள் தான். இன்று திமுக அமைச்சர்கள் மாவட்டச்செயலாளர்கள் பலர் அதிமுகவில் இருந்து அடையளம் காணப்பட்டு அங்கு சென்றவர்கள். அதைப்பற்றி நமக்கு கவலையில்லை.

தலைமையை நம்பி இந்த இயக்கம் இருந்ததில்லை. தொண்டனை நம்பியே அதிமுக உள்ளது. உண்மையான திராவிட இயக்கம் அதிமுக மட்டுமே. திமுக ஒரு குடும்ப சொத்து. எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம் என்றைக்கும் சோட போகாது. உதயநிதி ஸ்டாலின் எதாவது ஒரு படத்தில் தன் தாத்தா கருணாநிதியை அப்பா ஸ்டாலினை காண்பித்துள்ளாரா? திமுக கொடியை காட்டி நடித்துள்ளாரா?

ஆனால் எம்ஜிஆர் திமுக கொடியை அண்ணாவை காண்பித்து இயக்கத்தை வளர்த்தார். இன்றைக்கு திமுகவில் அண்ணா படம் உள்ளதா? தற்போது கலைஞர் படத்தையே மறைத்து விட்டனர். திமுகவில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் படங்கள் மட்டுமே உள்ளன.

திராவிட இயக்கங்களின் ஆட்சியில் தான் தமிழ்நாடு வளர்ந்துள்ளது. 50 ஆண்டு கால திராவிட ஆட்சியில் தான் தமிழ்நாடு வளர்ச்சி பெறுள்ளது.

மற்ற மாநிலங்களில் இந்த வளர்ச்சி உள்ளதா?

இரு பெரும் தலைவர்கள் நம் இயக்கத்தை சிப்பாக வழிநடத்தி கொண்டுள்ளனர். மாநகராட்சி தேர்தல் நான்கு மாதத்தில் நடத்தியே ஆக வேண்டும். அதிமுக ஆட்சியில் 5000கோடி ரூபாய் அளவுக்கான திட்டங்கள் மதுரையில் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. மதுரையில் ரவுடிசம் பெருகி வருகிறது. வழிப்பறி, திருட்டு, கொலை, கொள்ளை கற்பழிப்பு அதிகரித்து வருகிறது.

மக்கள் நம்மை மறக்கவில்லை. அவர்களிடத்தில் நமக்கு கெட்ட பெயர் இல்லை. தேர்தலில் நூற்றுக்கு நூறு அதிமுக வெற்றி பெறும். உள்ளாட்சியில் மதுரையில் நல்லாட்சி அமைய பாடுபட வேண்டும்.

பொய்யான 505 வாக்குறுதிகளை சொல்லி திமுக ஆட்சிக்கு வந்துள்ளனர். திமுகவை நம்பி மக்கள் வாக்களிக்க போவது இல்லை. அதிமுகவுக்கு வாக்களிக்கவே மக்கள் நினைக்கிறார்கள்.

ஆளுங்கட்சி அத்துமீறலை முறியடிக்கும்சக்தி அதிமுகவிடம் உள்ளது என பேசினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.