ஊரக உள்ளாட்சி தேர்தல் – கொண்டாடும் திமுக – திண்டாடும் அதிமுக !

0

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் 2 கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இரண்டாவது கட்ட தேர்தல் இன்று மாலை 7 மணிக்கு முடிவடைகிறது. இந்த நிலையில் ஆளும் கட்சிக்கு எந்தத் தொகுதியில் வெற்றி எந்தத் தொகுதியில் தோல்வி என்ற அப்டேட் உளவுத்துறை மூலமாக அறிவாலயத்துக்கு சென்றிருக்கிறது.

திமுக

2 dhanalakshmi joseph
4 bismi svs

அதேநேரம் திமுக ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் முக்கிய அமைச்சர்களை நிர்வாகிகளாக போட்டு தேர்தல் பணியை முழுமூச்சாய் செய்தது. இப்படி வேலூர், ராணிப்பேட்டை ,திருப்பத்தூர் மாவட்டங்களில் முக்கிய அமைச்சர்கள் களப்பணியில் இருந்ததால் அமைச்சர்கள் மக்களுக்கும், தொண்டர்களுக்கும் கொடை வள்ளலாக செயல்பட்டு அள்ளிக் கொடுத்துள்ளனர். மற்றொருபுறம் தென்காசி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கவனிப்பு சற்று குறைவுதானாம். ஏனைய மாவட்டங்களுக்கு சிறப்பு என்றும் சொல்ல முடியாது மோசம் என்றும் சொல்ல முடியாது என்று உடன் பிறப்புகள் கூறி வருகிறார்கள்.
மேலும் திமுகவின் கூட்டணி ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபடுகிறது, சில பகுதிகளில் கூட்டணி கட்சிகள் இணைந்து சில பகுதிகளில் தனித்துப் போட்டியிடுகின்றன. மேலும் திமுகவினர் சில பகுதிகளில் உள்ளடி வேலையும் செய்து வருகிறார்களாம்.
ஆனாலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் உற்சாகமாக அனைத்து பகுதியிலும் களம் கண்டு வருகிறது.

அதிமுக

- Advertisement -

- Advertisement -

அதிமுக தரப்பு 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டது. ஆனாலும் அதிமுக தலைமைக்கும் சரி, மாவட்டத் தலைமையகம் சரி பிரச்சாரம் திருப்தி அளிக்கவில்லையாம். அதிலும் சில பகுதிகளில் பேருக்கு பிரச்சாரம் செய்துவிட்டு பிரசாரத்தை முடித்து விட்டார்களாம் ரத்தத்தின் ரத்தங்கள். மேலும் சட்டமன்ற தேர்தல் தோல்வியில் இருந்தே மீளாத ரத்தத்தின் ரத்தங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் கசப்பான அனுபவமாக தான் இருக்கும் என்று ரிசல்ட்கு முன்பே அவர்களுக்குள்ளேபேசத் தொடங்கிவிட்டனர்.
அதே சமயம் அதிமுகவின் கூட்டணியில் உள்ள பாஜகவின் 9 மாவட்ட தலைமையுமே அதிமுக மாவட்ட தலைமையின் மீது பாஜகவின் மாநில தலைமையிடம் குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறதாம். இப்படி பாஜகவினருக்கு அதிமுகவினர் போதிய ஒத்துழைப்பு அளிக்க வில்லை, சரியாக பிரச்சாரத்திற்கு வரவில்லை, வாக்கு பதிவு நாளிலும் சரியாக ஆர்வம் காட்டவில்லை, மேலும் அதிமுக நிர்வாகிகள் பாஜகவிற்கு வாக்களிப்பார்களா என்று கூட தெரியவில்லை என்று பாஜக மாவட்டத் தலைமை மாநில தலைமையிடம் புலம்பித் தள்ளி இருக்கிறதாம்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.