பிரபல ரவுடி கொலையில் பகீர் பின்னணி – ரவுடியின் பயங்கர வரலாறு -ஷாக் ரிப்போர்ட் !

0

கரூர் மாவட்டம் குளித்தலையில் பிரபல ரவுடி வெடிகுண்டு கோபாலை தீர்த்துக்கட்ட பல நாட்களாக திட்டம் தீட்டிய கோபாலின் வலதுகரமாக செயல்பட்டு வந்த பக்கத்து வீட்டுக்காரர் ராஜா என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கருப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவரது மகன் கோபாலகிருஷ்ணன் என்கிற கருப்பத்தூர் கோபால் வயது 58.
கோபால் சிறுவயதில் பல ஊர்களில் நடைபெற்ற சைக்கிள் ரேசில் கலந்துகொண்ட நாட்களில், அதேசமயத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கருப்பத்தூரில் மணல் குவாரியை எடுத்திருந்தார்.
அந்த தொழிலதிபருக்கு உள்ளூரை சேர்ந்த பிரச்சனைகளை சமாளிக்கும் தொணியில் உள்ள ஒரு முகம் தேவைப்பட்டது. அப்போதுதான் கோபாலை அந்தப் பொறுப்பிற்கு தேர்வு செய்தனர்.

https://businesstrichy.com/the-royal-mahal/

ரவுடி கோபால்

அப்போது கட்டிலில் அமர்ந்துகொண்டு கோபால் தனது பணியை செய்யத் துவங்கிய காலம் அது.
அதற்குப்பின்னால் காவிரி ஆற்றில் கள்ளச்சாராயம் காய்ச்ச தயாரான கோபாலுக்கு சிலரது உதவி தேவைப்பட்டது.
அந்த நேரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சேர்த்துக்கொண்டு தனது தொழிலை விரிவுபடுத்த ஆரம்பித்தார்.
காய்ச்சப்பட்ட சாராயத்தை மணல் லாரிகள் மூலமாக பல்வேறு மாவட்டங்களுக்கும் சுலபமாக கொண்டுசென்று தன்னுடைய விற்பனையை விரிவுபடுத்திய கோபாலுக்கு பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டியது. தொழிலுக்கு உதவி செய்யும்
காவல் நிலையங்களுக்கு மாமுல் கொடுக்க துவங்கியதை அடுத்து, தன்னை ஒரு பெரிய முகம் போல காட்டிக் கொண்டார் கோபால், ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்பதை உணராத கோபால், பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டதால் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பாய்ந்தது.
சிறையில் இருந்தபோது பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களின் நட்பு கிடைத்ததை வைத்து,
தானே வெடிகுண்டை தயாரிக்க துணிந்து,
தனது வீட்டருகே உள்ள தென்னந்தோப்பில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இரவில் வெடிகுண்டை தயாரித்த போது அந்த வெடிகுண்டு கோபாலை பதம் பார்த்தது..
வெடித்த குண்டின் சத்தம் சுமார் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவிற்கு
அதிர்வலையை ஏற்படுத்தியது.
அங்கு ரத்தவெள்ளத்தில் கிடந்தார் கோபால். பிறகு அவசர அவசரமாக காரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவமனையில் மயக்கத்தில் இருந்த கோபாலின் வலதுகையலிருந்த மூன்று விரல்கள் காணாமல் போயிருந்தது.
மேலும் உடல் முழுவதும் ரத்த காயங்கள். இப்படி ஒரு வருடத்திற்கு மேலாக திருச்சி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் கோபால் சிகிச்சை பெற்று மறுபிறவி எடுத்தது தனி கதை.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

அந்த சம்பவத்தின்போது வெடிகுண்டு தயாரித்த இடத்தில் இருந்த தடயங்களை எல்லாம் சேகரித்த போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை துவக்கினர்.
அன்றிலிருந்து கோபாலுக்கு வெடிகுண்டு கோபால் என்ற வெறும் வந்தது.
இந்த சம்பவத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளால் அறியப்பட்ட முகமாகிப்போன கோபால் தமிழ்நாட்டின் ஃபேமஸ் ரவுடியாக உருவெடுத்தான்.
இந்த வழக்கில் சிறையில் இருந்தபோது பல்வேறு மாவட்டங்களில் உள்ள ரவுடிகளின் தொடர்பு மென்மேலும் விரிவடைந்தது.

அரசியல் கட்சியின் பின்புலம் தேவை என்பதை உணர்ந்த கோபால் தன்னை பாட்டாளி மக்கள் கட்சியோடு இணைத்துக்கொண்டார்.
இதனால் பாட்டாளி மக்கள் கட்சிக்கு கெட்ட பெயர் என்ற சூழ்நிலை உருவானதால் அதிலிருந்து வெளியேற்றப்பட்ட கோபால்,
புதிய தமிழகம் கட்சிக்கு சென்றார். அதன் பின்னர் பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளராக தன்னை மாற்றிக்கொண்டார். மேலும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு இருந்ததாக கூறி பல வழக்குகளை கோபால் மீது போலீசார் பல்வேறு மாவட்டங்களில் பதிவு செய்தனர்.
கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், மணல் கடத்தல் என குற்றப் பின்னணிகள் கோபாலுக்கு தொடர்கதையாக மாறியது.
இந்த தருவாயில் தான் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணான பொன்மணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட கோபாலுக்கு 2 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

மேலும் மணல் கடத்தலுக்கு என்று தனியாக 2 டிப்பர் லாரி 2 லாரி ஒரு கொக்லீன் போன்றவை சொந்தமாக வாங்கி கடத்தலை சிறப்பாக செய்ய தொடங்கினார். அதேசமயம் பல்வேறு கட்ட பஞ்சாயத்துகள் மூலமாக நட்பு வட்டாரங்கள் விரிந்துகொண்டே சென்றது. வருமானமும் கூடிக்கொண்டே சென்றது.
தனது வீட்டின் எதிர்ப்புறம் சுமார் 15 ஏக்கருக்கும் மேல் விவசாய நிலங்களில் நெல் வாழை சாகுபடி செய்து வந்தார்.
கோபாலுக்கு வலதுகரமாக பல்வேறு குற்றங்களில் செயல்பட்ட பக்கத்து வீட்டுக்காரரான ஆறுமுகம் மகன் ராஜா வயது 33.

இந்த ராஜாவிற்கு திடீரென்று தானும் கோபாலை போன்று வளரவேண்டும் என்ற ஆசை வந்தால் வெடிகுண்டு கோபாலை தீர்த்துக்கட்ட கடந்த 6 மாதமாகவே பல்வேறு உத்திகளை கையாண்ட ராஜா அதற்கான திட்டத்தை வகுக்க துவங்கியதும்.
இதற்காக தனது குருவான கோபாலுக்கு தெரியாமல் அதனைப் பார்த்துக் கொண்ட ராஜா, தனது ஆதரவாளர்களை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு நாள் குறிக்க துவங்கினார்.
இந்த நாள்தான் அக்டோபர் 6-ந் தேதி மகாளய அமாவாசை நாள்.
அதிகாலை 5 மணியளவில் கோபால் தனது வயலுக்கு வழக்கம்போல செல்வதை தெரிந்து வைத்திருந்த ராஜா எனது கூட்டாளிகளுடன் இருந்து நெல் நடவு வயலிலேயே கூலிப்படை தலைவனாக செயல்பட்ட கோபாலை வெட்டி சாய்த்து ராஜா தனது தீராத ஆசையை நிறைவேற்றிக்கொண்டார்.

பிறகு வெட்டிப்பலி தீர்த்துவிட்டு கோபாலின் மனைவியிடம் கோபால் ரத்தவெள்ளத்தில் வயலில் கிடப்பதாக தகவலை சொல்லிவிட்டு தலைமறைவானார் ராஜா.
இந்த சம்பவம் காட்டுத்தீ போல பரவியது.
அவசர அவசரமாக போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு,
பல்வேறு தடையங்களை சேகரிக்கத் தொடங்கினர்.

4 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் தேடுதல் வேட்டை துவங்கியது.
கோபாலின் வீட்டில் நான்குபுறமும் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா முழுவதையும் ஆய்வு செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டது. கோபாலின் செல்போன் கைப்பற்றப்பட்டு தொடர்பில் இருந்த அனைவரது தகவல்களும் மற்றொருபுறம் சேகரிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த கொலையின் பின்னணி குறித்து ஸ்கெட்ச் போட்ட தனிப்படை போலீசார் அந்த பகுதியில் செல்போன் மூலம் பேசியவர்களில் தகவல்களும் சேகரிக்கப்பட்ட நிலையில் முதலில் ராஜாவை தூக்கினர். பின்னர் மளமளவென கொலையாளிகளின் பின்னணி குறித்த துப்பு துளங்கியது.
கோபாலை தீர்த்துக் கட்டினால்தான், தான் ஒரு தலைவனாக வரமுடியும் என்பதற்காக இந்த கொலையை செய்ததாகவும், அதன் பின்னணியை விவரிக்கத் தொடங்கினான் ராஜா.

தனது ஆதரவாளர்களை தொட்டியத்துக்கு வரவழைத்து அங்கு இருந்து சிக்கனல் கொடுத்து பின்னர் சம்பவ இடத்திற்கு தெரு வழியாக வராமல், பில்லா பாளையம் செல்லும் வாய்க்கால் கரை வழியாகவும், விவசாயப் பகுதி வழியாகவும் சம்பவ இடத்திற்கு வரவைத்து பதுங்கி இருந்து போட்டுத் தள்ளிய கதையை விவரித்தான் ராஜா.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ராஜாவிற்கு வயது 33.
திருமணமாகாத நிலையில் தானும் ஒரு தலைவனாக வேண்டும் என்பதே அவளது நோக்கமாக இருந்ததாகவும்,
அதற்காக அதே கருப்பு புதூரைச் சேர்ந்த வினோத் வயது 27, வயலூரைச் சேர்ந்த சண்முகம் மகன் சரவணன் வயது28, கம்ம நல்லூரைச் சேர்ந்த மணி என்பவரது மகன் சுரேஷ் வயது 35, தொட்டியத்தை சேர்ந்த பூமிநாதன் மகன் கார்த்திக் வயது 38, கரூரைச் சேர்ந்த நந்தகுமார் வயது 32,பவித்ரத்திரம் வரகூரைச் சேர்ந்த மனோஜ் வயது 26, மேலும் பலருடன் சேர்ந்து திட்டம் தீட்டி வெட்டிப்பலி தீர்த்ததாக தனிப்படை போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் வழக்கில் சம்பந்தப்பட்ட இசக்கி குமார், குமுளி ராஜ்குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளார்கள். குமுளி ராஜ்குமார் கோபாலுக்கு தேவையான ஆட்களையும், கூலிப்படையையும் சப்ளை செய்து வந்தவர் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

குமுளி ராஜ்குமார்

இது ஒருபுறம் இருக்கும் அதே நேரத்தில் கோபாலின் தீவிர விசுவாசியான தர்மதுரை எனும் ரவுடி கொலை நடந்த இடத்திற்கு விசாரணைக்காக வந்த கரூர் மாவட்ட எஸ்பி வாகனத்தை மறித்து குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ரகளையில் ஈடுபட்டார். மேலும் மக்களையும் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டனர். இதைப்பார்த்த அதிவிரைவு படை போலீசார் தர்மதுரை அலக்காக தூக்கி வீசிட்டனர். பிறகு மற்ற ரவுடிகள் சிலர் தர்மதுரையை அழைத்து சென்றனர்.

மேலும் கோபாலிடம் ஒரு மாதத்திற்கு முன் ராஜா பிரியாணி கடை நடத்த இடம் கேட்டு இருக்கிறார், அதற்கு கோபால் மறுத்ததாகவும் இதன் பிறகு தான் இருவருக்கும் இடையே விரிசல் தொடங்கியதாகவும், இதையடுத்து ராஜா தன்னை பெரிய ஆளாக மாற்ற வேண்டும் என்று செயல்படத் தொடங்கினாராம்.

 

இப்படியாக கோபாலை, ராஜா தலைமையிலான கும்பல் முகத்தில் ஒரு பகுதியில் வெட்டியதில் மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் இடது கை பின்புறம் முதுகு அருகே வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கோபால் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்து இருக்கிறார் என்று மருத்துவ தரப்பினர் கூறுகின்றனர்.

மேலும் கோபால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள திமுகவில் இணைவதற்காக முசிறியில் உள்ள ஒரு முக்கிய பிரமுகரின் வழியாக முயற்சி எடுத்து வந்தாராம், இதற்காக அக்டோபர் 6ம் தேதி நிர்வாகிகளை சந்திக்க ஒப்புதல் கொடுக்கப்பட்டு இருந்த நேரத்தில்தான் படுகொலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

மேலும் கோபால் கொலை பற்றிய செய்தி பொது வெளியில் கசிய தொடங்கியது முதலே பரபரப்பு பற்றிக்கொண்டது மேலும் கோபால் குடியிருக்கும் பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை அந்த அளவுக்கு மக்கள் பயத்தில் இருந்தார்களாம். அதே சமயம் யாரும் முன்வந்து சாட்சி கூற கூட வரவில்லையாம், இதனால் போலீசார் மிக சிரமத்திற்கு மத்தியிலேயே தகவல்களை சிறுக சிறுக சேர்த்து இருக்கிறார்கள்.

மேலும் கோபால் மீது 45 வழக்குகள் இருப்பதும், 10 முறை குண்டாஸில் கைது செய்ய முயற்சி செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இவர் மீது கொலை வழக்கு உள்ளதாம், கோபால் கேஸ் விபரத்தை படித்த காவலர்கள் 45 வழக்கா என்று அதிர்ச்சி அடைந்து விட்டார்களாம்.

அதேசமயம் கோபாலின் விசுவாசிகளான ரவி, மாணிக்கம், வல்லரசு, மேட்டு மகாதானபுரம் தர்மதுரை, பூபாலன், பண்ணி சண்முகம், வீரவள்ளி, ஈஸ்வரன், தீத்துகட்டி சௌந்தரராஜன், கௌதம், நரேந்திரன், ஆகாஷ், அஜித், ஜோதிபாசு, வெட்டு சங்கர், கோபால், தீபன் ஆகியோர் கோபாலின் கொலைக்கு பழிதீர்க்க காத்திருக்கிறார்களாம். ரோடு ரோட்டுக்கு ரோடு வந்து இறங்கி மறுபடியும்

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அனைவரையும் குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரண்டில் நீதிபதி பாக்கியராஜ் முன்பு ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த குற்ற பின்னணியில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் தொடர்பில் இருப்பதால் அவர்களையும் போலீசார் கைது செய்யும் என தெரிகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.