ஒரே நாளில் 9 மாவட்டங்களில் 3,284 வழக்குகள் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

19.07.26-ம் தேதி திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களில், காவல் துறையினர், மேற்கொண்ட தீவிர வாகன சோதனையில், பதிவு எண் (Number Plate) இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள் மீது ஒரு நாளில் மட்டும் மொத்தம் 3,284 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 3,088 இருசக்கர வாகனங்களும், 196 நான்கு சக்கர வாகனங்களும் அடங்கும்.

மாவட்ட வாரியாக கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 520 வழக்குகளும், அதற்கு அடுத்தபடியாக புதுக்கோட்டையில் 514 வழக்குகளும், திருச்சியில் 489 வழக்குகளும், தஞ்சாவூரில் 467 வழக்குகளும், நாகப்பட்டினத்தில் 375 வழக்குகளும், அரியலூரில் 299 வழக்குகளும், திருவாரூரில் 226 வழக்குகளும், பெரம்பலூரில் 224 வழக்குகளும், மயிலாடுதுறையில் 170 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மேலும், வாகனத் தணிக்கையின் போது விதிகளுக்கு புறம்பாக பதிவு எண் இல்லாமல் இயக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் 7 வாகனங்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாகனத்தில் பதிவு எண்கள் இல்லாமல் ஓட்டுவதால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் போது பதிவு எண்களை கண்டுபிடிப்பதற்கு சிரமமாக உள்ளது என்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி, தங்களது வாகனங்களில் முறையான பதிவு எண் பொருத்த வேண்டும்.

தினமும் வாகனத் தணிக்கை செய்து விதிகளை மீறுவோர் வாகனங்களை பறிமுதல் செய்ய மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.