காக்கிச் சட்டைக்குள் கருப்பு ஆடுகள்… காவல்துறையைச் சீரழிப்பது யார்?

புகார் கொடுத்தால் மிரட்டல்; கமிஷனரிடம் சென்றாலும் தீர்வில்லை... காவல்துறையின் மீது நம்பிக்கை இழக்கும் பொதுமக்கள்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

காவல்துறையில் கருப்பு ஆடுகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து  வருகிறது. வேலியே பயிரை மேய்வது தான் இங்கு வேடிக்கை உச்சகட்டம்.

மக்களின் உடமைக்கும்,  உயிருக்கும் உத்திரவாதம் கொடுக்கும் உயரிய அதிகாரம் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. வதைப்பவர்களை வேட்டையாடுவதற்காக மட்டுமே இந்த கம்பீரக் காக்கி நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற வெறி எல்லோரிடமும் இருப்பதில்லை.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

ஆனால், ஆயிரக்கணக்கான இளம் அதிகாரிகளை உருவாக்கும் இந்த பயிற்சி பட்டறையியின் பிதாமகன்கள் தங்களது பதவியை , தண்டனை பதவியாக , டம்மி போஸ்ட்  என்று நினைத்து சென்சிடிவான பதவியை பிறரிடம் இருந்து தட்டிப்  பறிப்பதில் தான் மும்முரமாக இருப்பார்கள்.

சட்டம் ஒழுங்கில் பழுத்த அனுபவம் வாய்ந்த அதிகாரிகளை  ஒதுக்கித் தள்ளி ,  உருப்படாத சில வழக்கறிஞர்களையும் ,  காவல்துறையின் தண்டனை பட்டியலில் (PR) இடம் பெற்ற சில போலீசாரையும் கொண்டு வந்து பயிற்சி அதிகாரிகளுக்கு சட்டம் ஒழுங்கிலும்,  குற்றப்புலனாய்விலும் பயிற்சி அளிப்பது தான் கொடுமை உச்சகட்டம்.

கிரிமினல் குற்றங்களில் சிக்கி சீரழிந்தவர்களை  இந்த பயிற்சி  பட்டறையின் இயக்குனராக அமர்த்தினால், பயிற்சி பெறும் அதிகாரிகளின் தரம் எப்படி இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நாளுக்கு நாள் காவல்துறையின் மீது பொதுமக்களின் நம்பிக்கை நலிந்து கொண்டே வருகிறது. தமிழ்நாடு காவல்துறையின் ஸ்காட்லாந்து யார்டு பெருமை எல்லாம் காணாமல் போய் தலைமுறைகளை கடந்து விட்டது.

ஆயிரம் கணக்கில் CSR களும் , FIR களும் குப்பை போல் குவிந்து கிடக்கும் காவல் நிலையங்களில். அந்த புதைக் குழியில் மூழ்கி மூச்சு விட முடியாமல் திணறுவார்கள் சில ஆய்வாளர்கள்.  வருடங்கள் கடந்தும் நடவடிக்கை என்பது கேள்விக்குறியே.  AC , DC , JC  , ADL. COP என்று Review  மீட்டிங்குகள் மட்டுமே ரெகுலராக    நடக்கும். ஆனால் செவிடர்கள் காதில் ஊதிய சங்காக , அதை சீரியஸா எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.  காரணம் தன்னிடம் கையேந்தும் உயர் அதிகாரிகளால்  தங்களை தண்டிக்கவும் முடியாது ,  கண்டிக்கவும் முடியாது என்ற தைரியம் தாண்டவமாடும் இவர்களிடம்.

“கமிஷ்னரின் குறைதீர்க்கும் முகாமில் ( public Grievance ) என்று பொதுமக்கள் மூக்கை சிந்தி முறையிட வராமல் இருக்கிறார்களோ  ,  அன்று தான் காவல் நிலையங்கள் தங்கள் கடமையை சரிவர செய்து கொண்டிருக்கிறன  ” என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

விஜய்
விஜய்

லோக்கல் போலீசில் நம்பிக்கை இழந்து , கண்ணில் நீரோடு கமிஷனரிடம் கதறி அழுதாலும் அந்த மனுவை நிதானமாக படிக்க நேரமிருக்காது சில மனுநீதி சோழர்களுக்கு. வீசியெறிந்த பந்தை போல ,  மீண்டும் விசாரித்தவரிடமே வந்து விழும்.  “கமிஷ்னரின் கரண்ட் பேப்பர்கள் ” என்று கூடுதல் அந்தஸ்து மட்டுமே கிடைக்கும் அவரது புகாருக்கு.

அவ்வளவு தான் ”  என்னையே போட்டு கொடுக்க  , கமிஷ்னர் கிட்ட  போய் கம்ப்ளைன்ட் குடுக்குறியா  ? என்று மிரட்டி,  குதறியெடுத்து  விடுவார் ஆய்வாளர். அடுத்த சில தினங்களிலேயே அந்த புகாரின் மீது ”  Civil Nature  ”  என்று முத்திரை குத்தி CSR  ரை முடித்து விடுவார்.

VIP Movement , உண்ணாவிரதம் , சாலை மறியல் ,  தர்ணா , கட்சிகளின் கண்டன பேரணி , மாற்றுத் திறனாளிகள் ,  மருத்துவக் கல்லூரி மாணவர்கள்  பார்வையற்றோர்  , தொழிற்சங்க தலைவர்களின் போராட்டம் என்று சர்வீசின் பாதி நாட்களை பந்தோபஸ்த் பணிக்கே அர்ப்பணிக்க வேண்டி இருக்கும்.

பொதுமக்களின் பெட்டிஷன்கள் மலை போல் குவியத் தொடங்கி விடும். எனவே  Enquiry என்பது அத்தனை வீரியத்துடனும், மனிதநேயத்துடனும் ,  மனசாட்சியின் பக்கம்இருக்காது.

ப்ரஷர் கொடுத்தால் மட்டுமே பெட்டிஷனை கையில் எடுப்பார்கள். தொடர் பணி சுமை,  ஓய்வு உறக்கமின்மை இவற்றின் தாக்கங்கள் வெறுப்பு , விரக்தி ,  விரட்டல் என்று புகார் கொடுத்தவர்கள் மீது  தான் இறக்கி வைப்பார்கள் ஆய்வாளர்கள்.

பதவியை தக்க வைத்துக் கொள்ள ” பொலிட்டிக்கல் சர்வீஸ் தான் பிரதானமானது ” என்ற பொன்மொழியை பின்பற்றுகிறார்கள்   பெரும்பாலான அதிகாரிகள்.

மாற்றத்தை கொடுப்பாரா மாண்புமிகு முதல்வர் என்று  ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள் பொதுமக்கள்.

– இந்திரஜித்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.