எளிமையான வரிகளே இவரது அடையாளம் !

பி.வனத்தையன், திண்டிவனம்,  புனித அன்னாள் மேநிலைப்ள்ளியில், தமிழாசிரியர் மற்றும் முதுநிலை தமிழாசிரியராக 33 ஆண்டுகள் பணியாற்றியவர். கற்பித்தல் பணியினூடாகவே,  பி.எச்.டி. பட்டம் பெற்று, திண்டிவனம் நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றிய அனுபவம் உடையவர். இதுவரை 76 நூல்களை எழுதியிருக்கிறார். இளம் படைப்பாளர்கள் இயக்கம் எனும் அமைப்பை உருவாக்கி இளைஞர்களின் உள்ளத்தில் இருக்கும் கவிதை, கட்டுரை, கதை, கலை ஆற்றலை வெளிக்கொணர்ந்து வருகிறார்.

பி.வனத்தையன்
பி.வனத்தையன்

வனத்தையன் சிறுகதைகள் – ஓர் ஆய்வு; வனத்தையன் படைப்புகளில் விவிலிய கருத்துகள் உள்ளிட்டு இவர் எழுதிய நூல்களை பலரும் ஆய்வுக்குட்படுத்தியிருக்கிறார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. எளிமையான வார்த்தைகளில், எந்த வயதினருக்கும் புரியும்படியான உதாரணங்களை கையாண்டு ஆடம்பரம் இல்லாமல் எளிய தமிழில் எழுதும் தனித்துவமான மொழிநடையை தனது அடையாளமாகவே ஆக்கிக்கொண்டவர், முனைவர் பி.வனத்தையன்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.