கற்றல் இடைவெளியைக் குறைக்கும் நிலவுப்பள்ளி !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

வறண்ட நிலப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் நிலவும் கற்றல் இடைவெளியைக் குறைக்கும் ஒரு முக்கிய முயற்சியாக,  சேவை -SEVAI (Society for Education, Village Action and Improvement – அமைப்பு, AEM-ன் ஆதரவுடன் தொட்டியபட்டி கிராமத்தில் பள்ளி செல்லும் மாணவர்களுக்காக, குறிப்பாக தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்காக, ‘கிராம மாலைநேர இலவச வகுப்புகள்’  –  ‘நிலவுப் பள்ளி’ (Moon School) என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

தோகமலை ஒன்றியத்தில் அமைந்துள்ள வறண்ட நிலப்பகுதியான தொட்டியபட்டியில், தங்கள் குடும்பத்தில் முதன்முதலாகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பலர் உள்ளனர். இங்குள்ள பெற்றோர்களில் பெரும்பாலோர் சிறு மற்றும் குறு விவசாயிகள் அல்லது வடகிழக்கு பருவமழையைச் நம்பி வாழும் தினக்கூலித் தொழிலாளர்கள்.  இவர்களால் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு வீட்டில் போதிய ஆதரவு அளிக்க முடிவதில்லை. விதைப்பு மற்றும் அறுவடை காலங்களில் குழந்தைகள் பள்ளிக்குத் தொடர்ந்து செல்ல இயலாத சூழலும், வீட்டில் கற்றலுக்குத் தேவையான வழிகாட்டுதல் இல்லாமையும், தொடக்கப்பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு, எழுதுதல் மற்றும் கணக்குத் திறன் ஆகியவற்றில் பின்தங்கிய நிலையை உருவாக்கியுள்ளன.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதனைச் சரிசெய்ய, SEVAI அமைப்பு கிராமத்திற்குள்ளேயே, தனது மையத்தில் ஒரு மாலைநேரக் கல்வி மையத்தை நிறுவியுள்ளது. இந்த மையம், பள்ளி நேரம் முடிந்த பிறகு, வார நாட்களில் தினமும் மாலை 5.30 மணி முதல் 7.00 மணி வரை செயல்படுகிறது.

தொட்டியப்பட்டியில் உள்ள பெற்றோர்கள் இந்த முயற்சியை வரவேற்றுள்ளனர். “முன்பெல்லாம் எங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்ததும் தெருக்களில் அலைந்து கொண்டிருப்பார்கள். இப்போது அவர்கள் தாங்களாகவே டியூஷனுக்குச் செல்கிறார்கள். அவர்கள் முன்பை விட வேகமாகத் தமிழில் வாசிக்கிறார்கள், எந்தவித அச்சமும் இன்றி கணக்குகளைச் செய்கிறார்கள்” என்கிறார், மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவரின் தாயார். உண்மையில், நல்ல மாற்றம்தானே?

கிருஷ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.