அங்குசம் செய்தி எதிரொலி – அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 6 பேர் மீது கட்டபஞ்சாயத்து செய்தாக 6 பிரிவுகளில் வழக்கு பாய்ந்தது !
அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 6 பேர் மீது கட்டபஞ்சாயத்து செய்தாக 6 பிரிவுகளில் வழக்கு பாய்ந்தது !
அங்குசம் இதழில் கடந்த ஆகஸ்ட் 25 ம் தேதி அங்குசம் இதழில்.. பச்சமலையில் தொடரும் கட்டப்பஞ்சாயத்து பாதிக்கப்படும் மலைவாழ் மக்கள் ! என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம். செய்தியின் எதிரொலியாக பச்சமலையில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளத உப்பிலியபுரம் போலிசார்..
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அடுத்த பச்சமலை தென்புற நாடு ஊராட்சிக்குட்பட்ட நச்சிலிப்பட்டியைச் சேர்ந்த கருப்பன் என்பவரது மகன் பாஸ்கரன் (51) . இவர் தற்போது ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.பாஸ்கரனுக்கும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த அதிமுக நிர்வாகியான சிவக்குமார் என்பவருடன் முன் விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில் முன்னாள் தலைவர் சிவக்குமார், பாஸ்கரன் மற்றும் அவரது மாமாவான குமாரசாமி மற்றும் இவர்களது உறவினர்கள் 8 பேரை கட்டப் பஞ்சாயத்து செய்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகவும், இதில் சிலரை குடும்பத்திற்கு தலா சுமார் 1 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு ஊரில் சேர்த்துக் கொண்டதாகவும், பாஸ்கரன், அவரது மாமா குமாரசாமியை பேச்சுவார்த்தைக்கு அழைத்த சிவக்குமார், நச்சிலிப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே சுமார் 25 பேர் முன்னிலையில்அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், பணம் தர மறுத்ததால் மரத்தில் கட்டி வைத்தும், காலில் விழ வைத்தும் கட்டப் பஞ்சாயத்து செய்ததாகவும், தொடர்ந்து நச்சிலிப்பட்டிகிராமத்தில் இது போன்று கட்டப் பஞ்சாயத்து செய்து அடாவடியாக பணம் வசூலித்ததால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தென்புற நாடு ஊராட்சி மன்றத் தலைவரும், அதிமுக நிர்வாகியுமான சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.
புகார் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் பச்சமலை தென்புற நாடு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சிவக்குமார் மற்றும் கலியபெருமாள், தங்கராசு, நடராஜன், தம்புசாமி, பாப்பு, கணேசன் உள்ளிட்ட 7 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த உப்பிலியபுரம் எஸ்ஐ பிரகாஷ் இது குறித்து மேலும் விசாரணை செய்து வருகிறார். இச்சம்பவம் பச்சமலை கிராமங்களில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.