சாக்கு பைக்குள் சரித்திர நாயகன்…..!

0

 சாக்கு பைக்குள் சரித்திர நாயகன்…..!

 

பத்மஸ்ரீ விருது பெற்றவர்க்கு 13 ஆண்டுகளாக  சிலை திறக்காத அவலம்  சாக்கு பைக்குள் சரித்திர நாயகன்…….

 

https://businesstrichy.com/the-royal-mahal/

நாடு போற்றும் நடிகராக, திரையுலக ஜாம்பவானாகவும் வலம் வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜூலை 21 அன்று தமிழகமே அவரது நினைவு தினத்தை அனுசரித்து வருவதை நம்மால் காணமுடிகிறது. நாடுப்போற்றும் நாயகன் சிவாஜி; சிவாஜி கணேசன் நடிப்பு திறமைக்காக 1960ம் ஆண்டு ஆப்பிரிக்க – ஆசியத் திரைப்பட விழாவில், சிறந்த நடிகருக்கான விருது.1962-1963 கலைமாமணி விருது, 1966ல்பத்ம ஸ்ரீ விருது பத்ம பூஷன் விருது, 1984செவாலியர் விருது, 1995தாதாசாகெப் பால்கே விருது, 1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத்தந்தையாகக்’ கௌரவிக்கப்பட்டார். இவ்வாறு பல விருது பெற்ற தமிழ் திரைப்பட நடிகர்க்கு சென்னை மெரினா கடற்கரை சாலையில் சிவாஜி கணேசன் சிலை 21 ஜூலை 2011 அன்று அமைக்கப்பட்டது. பின் அகற்றப்பட்டது.

 

சிவாஜி கணேசன் திரைப்படம் ட்ரண்ட் சென்ட்டாகி கொண்டாடிய ரசிகர்கள் திருச்சியில் சிவாஜிக்கு சிலை வைக்க கோரிக்கை வைத்தார்கள். கோரிக்கையை ஏற்று, கடந்த 2009 தி.மு.க ஆட்சியில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு வெண்கலச் சிலை அமைக்க, திருச்சி பாலக்கரை மெயின் ரோட்டில் இடம் ஒதுக்கப்பட்டது. சிவாஜி ரசிகர்கள் முயற்சி செய்து, வெண்கலச் சிலை அமைத்து, அதைச் சுற்றி பூங்காவும் அமைக்கப்பட்டது. ஆனால், பணிகள் முடிவடையும் போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் சிலை திறப்பு விழா தள்ளிப்போனது. அதனால், சரித்திர நாயகரின் சிலை சாக்குப் பையாலும் துணியாலும் மூடப்பட்டது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

தேசிய நெடுஞ்சாலைகளில் சிலை அமைக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் கடந்த 2013-ல் வெளியிட்ட உத்தரவு இதற்கு ஓர் தடையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் நீதிமன்ற உத்தரவு வெளியாகும் முன்பே நிறுவப்பட்டது

திருச்சி சிவாஜி சிலை
திருச்சி சிவாஜி சிலை

 

சிலையைத் திறந்துவைக் கோரி, ரசிகர்கள் கோரிக்கை , ஆர்ப்பாட்டம் என போராடினார்கள். 2017 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ம் தேதி வியாழக்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் திடீரென சிவாஜி மன்ற நிர்வாகி சீனிவாசன் தலைமையில் 15-பேர் இணைந்து சிலையை திறந்து மாலை அணிவித்தனர். அவர்களுடன் புதிய தமிழகம் மாவட்ட செயலாளர் அய்யப்பன், ம.தி.மு.க. நிர்வாகி ராமதாஸ் ஆகியோரும் மாலை அணிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரவேல் தலைமையிலான போலீசார் ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீசார் சிவாஜி சிலையில் அணியப்பட்ட மாலையை எடுத்து விட்டு, பழைய பேனரால் சிலையை மீண்டும் மூடினர். மேலும், ரசிகர் மன்ற நிர்வாகி சீனிவாசன், பிரபு ஆகியோரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அதிகாலை 4.30 மணிக்கு ரசிகர்களால் திறக்கப்பட்ட சிவாஜி சிலை 6.30 மணிக்கு போலீசாரால் மூடப்பட்டது. சிவாஜி சிலை அமைந்துள்ள சாலையின் பெயர் காயிதே மில்லத் ஆகும். எனவே அங்குள்ள முஸ்லீம்கள் காயிதேமில்லத் சிலையை அவ்விடத்தில் நிறுவுவதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனால்தான் சிவாஜி சிலை திறக்க அப்பகுதியில் எதிர்ப்பு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திருச்சி . மாவட்ட சிவாஜி ரசிகர்கள் நற்பணி சங்கம் சிவாஜி கணேசன் சிலையை அரசு முறையாகத் திறந்துவைக்கக் கோரி, திருச்சி மாநகர் முழுக்க கையெழுத்து இயக்கம் தொடங்கி போராடினர் 13 ஆண்டுகளாக  பத்மஸ்ரீ செவாலியே சிவாஜி கணேசன் சிலை திறக்கப்படவே இல்லை.

திருச்சி சிவாஜி சிலை
திருச்சி சிவாஜி சிலை

நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக அறிவித்துள்ளதுடன், மேலும் அடையாறு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால், திருச்சியில் அமைக்கப்பட்ட வெண்கலச் சிலையினை திறந்து வைக்காமல் இழுத்தடிக்கிறார்கள். திருச்சியில் ஜூலை 21 இன்று நடிகர் திலகம் சிவாஜியின் திருவுருவ படத்தை வைத்து நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதுக்குறித்து திருச்சி மாவட்ட சிவாஜி ரசிகர்கள் நற்பணி சங்க தலைவர் அண்ணாதுரையிடம்  பேசியபோது….

 

திருச்சியில் சிவாஜி சிலை இருந்தும் அவரது பிறந்த நாளன்றோ, நினைவு நாளன்றோ மாலை அணிவிக்கமுடியாமல் இருந்து வருவதை குறித்து கேட்டபோது…

 

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கடந்த 13 ஆண்டுகளாக சிலை திறக்க முடியாமல் இருப்பது ரசிகர்களான எங்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்து வருகிறது. தற்போதய அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டது, சிவாஜி வீடு அமைந்துள்ள சாலையை சிவாஜி சாலை என்று பெயர் சூட்டப்பட்டது, மேலும் தற்போதைய கல்வி பாட புத்தகத்தில் அவரை பற்றி பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருச்சியில் இதுப்போன்று சிலையை திறக்காமல் இருப்பது ஒரு குறையாக ரசிகர்களான அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது.

 

கடந்த 20/07/19 அன்று நடைப்பெற்ற சட்ட மன்ற கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திரையுலக அடையாளமாக விளங்கும் தியாகராஜ பாகவதருக்கு 50 லட்சம் செலவில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் திருச்சியில் அமைக்கபோவதாக கூறியுள்ளார் அதனைக்குறித்து கேட்டபோது…..

 

தியாகராஜ பாகவதர் தமிழ் தேசிய திரைப்பட உலகில் முக்கியமாக போற்றுதலுக்கான நபர், அவருடைய சிலை திறப்பதில் எங்களுக்கு எந்த ஒரு புரணான கருத்துகளும் இல்லை, ஆனால் ஏற்கனவே திரையுலக நட்சத்திரமான நடிகர் திலக சிவாஜி அவர்களின் சிலை மூடப்பட்டிருக்கிறது, இதில் மற்றோரு நடிகர் குல ஜாம்பவானின் சிலை திருச்சியில் திறக்கப்படுவது திரையுலக வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் கேள்வி குறியாக தான் அமையவிருக்கும். இதனை மாற்ற வேண்டுமென்றால் ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசு தான் விரைவில் தீர்வுக்கான வேண்டும் என்றார்.

 

மேலும் சிவாஜி ரசிகர் மன்ற துணை பாதுகாப்பு குழு தலைவர் ஆர்.சி.ராஜாவிடம் பேசினோம்..

 

தமிழகத்தில் தி.மு.க ஆட்சியின் போது திருச்சியில் சிவாஜி ரசிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடிகர் திலகம் அவர்களின் சிலை நிறுவ வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். அதன் முதற்கட்டமாக அன்றைய திருச்சி அமைச்சர், திமுக மாவட்ட செயலாளர் கே.என்.நேருவை சந்தித்து பேசினும் அவரும் அதற்கு முன்வந்து சிலையை எந்த வடிவில் அமைக்கலாம் என்று சிவாஜி போன்று நின்றெல்லாம் காட்டினார். பின்னர் ஒருக்கட்டத்தில் சிலை செய்ய கும்பகோணத்தில் இதையடுத்து சுமார் ரூ.15 லட்சம் மதிப்பில் 9 அடி உயரமும், 1,100 கிலோ எடையும் கொண்ட சிவாஜி கணேசனின் முழுஉருவ வெண்கல சிலை தயாரானது.  இதனிடையே சிலையை நிறுவ இடம் பாலக்கரை ரவுண்டானா தேர்ந்தெடுத்து மாநகராட்சியில் அனுமதி வழங்கக்கோரி விண்ணப்பித்திருந்தபோது இடையில் ஒரு தரப்பினர், தங்களுக்கும் அங்கு இடம் வேண்டும் என்று மாநகராட்சியிடம் முன்வைத்தனர்.

சிவாஜி சிலை நள்ளிரவில் திறப்பு
சிவாஜி சிலை நள்ளிரவில் திறப்பு

அதனால் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முடிவெடுக்கும் நிலைக்கு சென்று விட்டது. அதன்பின் திருச்சியில் உள்ள சிவாஜி ரசிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து திருச்சியில் 60 வார்டு கவுன்சலர்களிடம் எடுத்துக்கூறி ஆதரவு அளித்து கையெழுத்து வாங்கி மாவட்ட ஆட்சியருக்கு முன் சமர்பித்தோம். இதற்கிடையில் தேர்தல் வந்ததால் ஆட்சி மாறியது….

எங்களுடைய கோரிக்கைகளும் கிடப்பில் போடப்பட்டது.

ஆனால் இந்நாள் வரை அதற்காக நாங்கள் பல முயற்சிகளாக, அமைச்சர் வெல்லமண்டி. நடராஜனிடம் கூட மனு கொடுத்தோம். ., மனுமனுவாகவே இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகள் எதுவும் இல்லை… இருப்பினும் நம்பிக்கையுள்ளது விரைவில் நடிகர் திலகம் சிலை திறக்கப்படும் என்று கூறினார்.

ஒருபுறம் தமிழக அரசு தமிழ் திரையுலகத்தை போற்றும் விதமாக திருச்சியில் திரையுலக ஜாம்பவான் தியாகராஜ பாகவதர் சிலையை திறக்க அஸ்திவாரம் போட உள்ளது. மற்றொரு புறம் ஏற்கனவே அஸ்திவாரம் போடப்பட்டு கிடப்பில் இருக்கும்  சாக்குபைக்குள் முடங்கி கிடக்கும் சரித்திர நாயகனான சிலை திறக்கப்படுமா என எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்..

 

மேலும் அரசியலில் ராசி இல்லாதவர் சிவாஜி கணேசன் என்று சொல்லி, அதிமுக சிலையை திறப்பதில் மெத்தனம் காட்டியது. அதன் பிறகு அதை அப்படியே விட்டு விட்டது. சமூகநீதி, பகுத்தறிவு என்று பேசும் திமுகவும் அதில் தற்போது வரை ஆர்வம் காட்டவில்லையாம்.  இந்த நிலையில் தற்போது கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜிடம் சிவாஜி ரசிகர்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டிருக்கிறது.

 

– வெற்றிச்செல்வன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.